Thursday, June 4, 2009

சின்னச் சின்னச் சந்தோஷங்கள்.....

மனம் சோர்வாக, கவலையாக,இருக்கின்ற போதுகளில்......
முயற்சித்துப் பார்க்கக் கூடியவை.

* சுடு நீரில் சுகமான ஸ்னானம்:சுத்தமான பருத்திஆடை

* கடற்கரைக்குப் போதல்; அதன் இயற்கையை ரசித்தல்

*பூந்தோட்டம் செய்தல்; களைஎடுத்தல்; பண்படுத்தல்

*வீட்டை மீண்டும் ஒருமுறை ஒழுங்கு படுத்துதல்

*ஜெபம்,தியானம்,யோகா செய்தல்

*காலார நடந்து போய் வருதல்.

*பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல்.

* தண்ணீர் குடித்தல்

*நண்பர்களோடு பேசுதல்

*உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.

*புதிய சமையல் ஒன்றை முயற்சித்துப் பார்த்தல்

* ஆண்களாயின் நண்பர்களோடு ரெனிஸ்,கிறிக்கெற் விளையாடுதல்.

*பாடல்,இசை கேட்டல்.படம் பார்த்தல்,புத்தகம் வாசித்தல்

*டையறி எழுதுதல்

*கடைகளுக்குப் போய்வருதல்

* தலை முடியை வேறுவிதமாக மாற்றிக் கொள்ளுதல், முக ஒப்பனை

*பிற்போடப் பட்டுக் கொண்டிருந்த வேலைகளைச் செய்து முடித்தல்
(உ+ம் புத்தகங்களை அடுக்குதல்,அலுமாரியில் ஆடைகளை அடுக்குதல்,குறையான தையல் வேலைகளை முடித்தல்,போன்றன)

*குழந்தைகளோடு விளையாடுதல்

*செல்லப் பிராணிகளோடு நேரம் செலவளித்தல்.

*உணர்வுகளைக் கலைவடிவமாக்கிப் பார்த்தல்.
(கவிதை,கதை,ஹக்கூ,....)

*பாதகமில்லாத புதிய ஒரு விடயத்தை தொடங்குதல்.
(உ+ம் உண்டியலில் காசு சேர்த்தல்,சமூக சேவை,நண்பர்களாகச் சேர்ந்து ஒரு விடயத்தை சாதித்தல்....)

*எல்லாம் நன்மைக்கே என்ற மனப் போக்கு.

*நண்பர்கள் வீட்டுக்குப் போய் வருதல்.

*விட்டுப் போன விருந்தாளிகளை அழைத்து சுவையான விருந்தளித்தல்

*கோயிலுக்குப் போய் வருதல்

இப்படிப் பல.

உங்களது சின்னச் சின்னச் சந்தோஷங்கள் என்ன?

உங்களுக்கு தெரிந்தவற்றைப் பின்னூட்டமிடுங்கள்.மற்றவர்களுக்கும் அது பயனுடயதாக இருக்கும்.

சின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிரம்பியிருக்கிறது வாழ்க்கை

2 comments:

  1. சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைய இருக்கிறது யசோ..நீங்க எப்படி இருக்கீங்க..ரொம்ப நாளாச்சு உங்கள் பதிவுகளை வாசிச்சு. இன்னிக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன். ;))))

    ReplyDelete
  2. உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது இனிய தோழி.

    நான் நலமே!உங்களிடமிருக்கின்ற இந்த உற்சாகத்தின் ரகசியம் என்ன தோழி?:)

    உங்களுடய சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன் உமா.நாமும் கொஞ்சம் முயற்சித்துப் பார்க்கலாம்.

    உங்களுடய ஒரு பதிவு இது பற்றி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கலாமா? அதுவும் விரைவில்! பிளீஸ்!!

    ReplyDelete