Wednesday, June 2, 2021

ஒளவை குறித்து ஒரு பார்வை

 தமிழ் மரபில் ஒளவை

கடந்த ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இந்த ஒலிக்கீற்றைக் கேட்டு உங்கள் அபிப்பிராயங்கள்; விமர்சனங்களை எனக்குத் தெரியப்படுத்துவீர்களா? 

மேலே இருக்கிற ‘தமிழ் மரபில் ஒளவை’ என்ற தலைப்பை அழுத்தினால் நீங்கள் நேரடியாக SBS இன் தளத்திற்குச் செல்லலாம். அங்கு இதனைக் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுத்துமொழியிலேயே எழுதியும் பேசியும் வந்ததால் பேச்சு மொழியில் கூறிய இந்த விஷயங்களில் எனக்கான திருத்தங்களை உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஒரு கையளவு மக்களே இங்கு வருவதாக இருந்தாலும்; நானும் எனக்குத் தோன்றிய பொழுதுகளில் மட்டும் தான் இங்கு வந்து போனாலும்; எனக்கு நீங்கள் தானே எல்லாம்.

நம்புங்கள்! உங்களோடு எனக்கு ஓர் மானசீக அன்பு உண்டு....

நீங்கள் எப்பொழுதும் இங்கு வந்து போக வேணும்...

2 comments:

  1. அட, எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். ஔவை குறித்த அழகான புரிதலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி. சங்க கால ஔவை வாழ்ந்த வாழ்வை, அக்காலத்து ஆண் பெண் நட்பை, பெண் புலமையின் வெளிப்பாட்டை, நட்பிழந்த துயரத்தை, ஒரு நல்ல புரவலனை இழந்து புலவர்கள் படும் பாட்டை இந்த ஒரு பதிவிலேயே மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இடையில் ஒலிக்கும் இக்காலப் பாட்டு, குறிப்பிடப்படும் சூழலுக்கு என்னதான் பொருத்தமாக இருந்தாலும், சங்க காலச் சூழலில் லயித்திருக்கும் மனத்தை விருட்டென்று இக்காலத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிடுவது போன்ற பிரமை. அதே சமயம் ஔவையின் வரிகளை அழகான இசைப் பின்னணியோடு வாசிக்கும் பகுதி ஆழ்மனத்தில் ஊடுருவி நெகிழ்த்துகிறது. மிக அழகான தொடக்கம். தொடர்ந்து சிறக்க அன்பு வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி கீதா.
    அடுத்தமுறை இக்காலப் பாடலைப் புகுத்து முன்பாக அது பற்றிக் கொஞ்சம் யோசிக்கிறேன்.
    ஒளவையின் பாடலுக்கு ஒலி தந்தவர் றைசெல்.அவர் வானொலி வல்லுனர் அல்லவோ? சிறக்கக் கேட்கவா வேண்டும்?
    மிக்க அன்பும் நன்றியும் கீதா.

    ReplyDelete