Tuesday, September 21, 2010

வளையாப்பட்டித் தவிலும் வயதுக்கு வந்த வயலினும்


வளையாப்பட்டித் தவிலும் வயதுக்கு வந்த வயலினும் இந்த வார விருந்து.

ஒரு புள்ளி மான் அறிமுகப் படுத்த கண்முளித்த புலிக்குட்டிகள் பாடுகிறார்கள்.ரசிக்க வைக்கும் துள்ளலிசை.கவி வளமும் சேர்ந்து தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது.யார் எழுதினார் என்று தெரியவில்லை.மலையாள மொழி என்றாலும் விளங்குகின்ற வித்தியாசமான பாடல் வரிகள்.அவையும் களிப்பூட்டுகின்றன.


மறக்காமல் அடிக்கடி வருபவர்களுக்காக -

சிறு மாற்றமாக ஒரு மொழி கடந்த துள்ளல் பாடல் ஒன்றினை இன்று பதிவேற்றுகிறேன்.

பல சொற்கள் தெரிந்த மலையாள மொழி தான் என்றாலும் எவ்வளவு இனிமையையும் உற்சாகத்தையும் தருகிறது இது இல்லையா? இசை மொழியைக் கடந்தது என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி.

YouTube - Roshan, Sourav, Reshma sing 'Valayapatti...'

மேலே உள்ள ஆங்கில பதிவின் மேல் இரு முறை அழுத்திப் பாடலைக் கேட்கலாம்.

6 comments:

  1. தோழி! இந்த பாடல் மலையாள தொலைக்காட்சியில் வந்தாலும் "அழகிய தமிழ்மகன்" என்ற தமிழ் படத்தில் வந்த தமிழ் பாடல் தான்..அதன் இசையும் பாடியவிதமும் வேற்றுமொழி போன்ற மாயையை தோற்றுவித்திருக்கும் என்று நினைக்கிறேன்...உங்கள் தகவலுக்காக தான் சொன்னேன் ..இந்த பின்னூட்டத்தை நீங்கள் பிரசுரிக்க வேண்டியதில்லை...:)

    ReplyDelete
  2. http://movieduniya.blogspot.com/2007/10/azhagiya-thamizh-magan-tamil-movie.html

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழி.நீங்க நலமா?

    மலையாளத்திலும் அந்தப் படம் வெளி வந்திருக்கும் போல!

    சுப்பர் சிங்கர் யூனியர் 2 என்ற தொலைக் காட்சித் தொடரில் பல திறமைசாலிக் குழந்தைகள் பாடினார்கள். அதில் ரோஷன் என்ற பையனின் குரல் மிக மென்மையும் இனிமையும் வாய்ந்ததாக இருந்தது. அப்பையனின் பாடல்களைத் தேடிக்கொண்டு போன போது அது இங்கே கொண்டுவந்து விட்டு விட்டது தோழி.

    அந்தத் தொடர் பார்க்கக் கிடைத்தால் பாருங்கள்.(இங்கு கடைகளில் வாங்கலாம்)சிறு பிள்ளைகளின் திறமையையும் ஆற்றலையும் பார்க்க வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  4. பேசியவர்கள் மலையாளத்தில் பேசியதாலும்,அதில் மோளே மோளே என்று வந்ததாலும் மலையாளத்துக்கும் தமிழுக்கும் அதிக நெருக்கம் இருப்பதாலும் அது மலையாளமாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன்.

    இப்போது மீண்டும் ஒரு முறை கேட்டுப் பார்த்தேன்.தமிழாகவே தான் இருக்கிறது!

    நன்றி ஹாசினி!:)

    ReplyDelete
  5. நான் நலம்.அது போல் உங்கள் நலத்துக்கும் பிரார்த்திக்கிறேன்...:)

    //அந்தத் தொடர் பார்க்கக் கிடைத்தால் பாருங்கள்.(இங்கு கடைகளில் வாங்கலாம்)சிறு பிள்ளைகளின் திறமையையும் ஆற்றலையும் பார்க்க வியப்பாக இருக்கிறது.//

    என்ன முக்கியமான வேலை இருந்தாலும் தூக்கிப்போட்டுவிட்டு இரவு 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்க்கத்தவறுவதேயில்லை.:)(இது பழைய கதை.).நீங்கள் சொல்லியது போல் திறமைசாலியான குழந்தைகளின் அற்புதமான நிகழ்ச்சி அது...

    உண்மைதான்.சிறிய வயது என்பதால் குரலில் கொஞ்சம் பெண்பிள்ளையின் சாயல் இருந்தாலும் நல்ல பாடும் திறன் கொண்ட குழந்தை ரோஷன்...(ரோஷனின் தாய்மொழி மலையாளம் என்று கேட்ட ஞாபகம்..அதனால் தான் நீங்கள் மலையாள தொலைக்காட்சி பக்கம் போகவேண்டிவந்துவிட்டது....:))

    ReplyDelete