Thursday, October 22, 2009

வீடு


எனக்கோர் வீடு வேண்டும்
நாலு சதுர அறைகளும்
நன் நான்கு மூலைகளும்
நீள் சதுர விறாந்தைகளும் அற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

என்னைச் சுளற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய
கல் மதில்களுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

பூட்டற்ற கதவுகளுடன்
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு.

குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த

ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்




ஆழியாழ். நன்றி -மை-

ஒரு கவிதை உனக்குப் புரியவில்லை என்றால் அது உனக்குரிய கவிதை அல்ல - யாரோ -

2 comments:

  1. தமிழ்நதியின் வீட்டைச் சுமக்கிற பெண்கள் கட்டுரை ஞாபகம் வருகிறது..

    ReplyDelete
  2. நன்றி தோழி. வருகைக்கும் பகிர்வுக்கும்.

    தமிழ் நதியின் 'உலகு'க்குப் போய் வந்திருக்கிறேன். ஆனால் அந்தக் கட்டுரை வாசிக்கக் கிடைக்கவில்லை.

    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete