முதல் பதிவை எழுதிய பின்பு தான் மறை மலை அடைகளார் ஞாபகத்தில் வந்தார். அவரை எவ்வாறு சொல்லாமல் விடலாம்?தனித்தமிழ் இயக்கத்தை நடத்தி அதன் அழகைப் பட்டை தீட்டி அதனைச் செயல் வடிவிலும் செய்து காட்டி மறைந்தவரல்லவா அவர்!
அவரது தமிழ் சொல்லாடல் இன்னொரு வசீகரம் பேசும்.அது தர்மத்தால் சூழப் பட்ட தமிழ்.நீதியிலும் சத்யத்திலும் தோய்த்தெடுத்த தமிழ்.அவரது எழுத்துக்களை வாசிக்கும் தோறும் தர்ம தேசத்தில் வாழுவதை மனமுணரும்.தீமைகளே இல்லாததும் புண்ணிய ஷேத்ரமுமான தர்மபுரியில் மனம் நிலைத்திருக்கும்.சாதாரண உலகுக்கு வரும் போது தான் அவரது உயரத்தையும் அங்கு எம்மையும் அழைத்துச் சென்ற அவரின் சிறப்பையும் அறிய முடியும்.அது அவரால் தமிழுக்குக் கிட்டிய சிறப்பு.அவரது புத்தகங்களில் எதை எடுப்பது? எதை விடுவது? எல்லாமே நழுவ விட்டு விட முடியாதவை.
சரி, இனி விடயத்துக்கு வருவோம்.
1)-(இவை 'எஸ்போ ஒரு பன் முகப் பார்வை' என்ற புத்தகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்)-
...கலாசாரத் தூதனாக இந்த நூலை அனுப்பலாம்.
வரண்ட முகமன் /வித்துவ ஏமாப்பு / ஈரமுள்ள தீ
மண் அப்பிய எழுத்தோவியம்
கருத்து எதிர் நீச்சல்
ஓட்டம் அலட்சியமாக இருந்தாலும் பொருள் கவனமாகத் தீர்மானிக்கப் பட்டது.அதன் இலக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டது.
பல வண்னப் பூக்களை அள்ளிச் சொரிந்தது போலவும் மலையினின்று அருவி சரேலெனக் கொட்டுவது போலவும் வரிசை கட்டிக் குருகினம் பறப்பது போலவும் சொற்களால் பொழியும் கை வண்ணம்.
யாழ்ப்பாணத்து மானத்தைக் காக்கும் கிடுகு வேலிகள் யாழ்ப்பாணத்துச் சிக்கனத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கின்றன.
உண்மைத் தோற்றத்தில் பேயறையப் பட்ட சிலர்
கலா சத்தியம்
உள்ளுணர்வின் உதிர்வு முறுவல் என்னும் நிகழ்வு.
உதட்டத் தாண்டாத உவகை.
கூலிக்கமர்த்தி போலித் துயர் பாடி..
புத்தி ஜீவித சர்வாதிகாரம்
ஆரோக்களின் நகை(த்தல்)
சுய வெப்பிசாரம் / சிந்தனைக் களம்
ஆண்மாவைப் பீடித்துள்ள பிணி
சதா மாற்றமடைந்து கொண்டே இருக்கும் நமது சூழ்நிலைக்கேற்ப எம்மையும் நாம் மாற்றிக் கொள்ளா விடின் நம் வாழ்வு தேங்கிய குட்டையாய் விடும்.(இது பற்றி அ. முத்துலிங்கம் 'நான் தயார்' என்றொரு சிறப்பான சிறுகதை எழுதி உள்ளார்)
மன்னிப்புக் கோரலும் என் கைகுலுக்கலுக்குள் இருக்கும்.
தமுக்கம் / இலக்கிய அரசியல்
தமிழ்த்துவ அக்கறை
ஆக்க வீச்சு மொழிக்குள் வித்தை புரிகிறது.
தங்களைத் தகவமைத்துக் கொள்கிறது.
கெட்டி தட்டிப் போன நடுத்தர வர்க்கத்துக்கும் பொருந்தும்
தீவிரப் பட்ட தத்துவத் தேடல்
மன உலகம் மொழிக்குள் பிடிக்கப் படுகிறது
உண்மையின் உபாசகனாய் வாழ்தல்
அந்தரங்க உழைச்சல் / நளின நயம்
நெருப்புப் பார்வை / சோக விமோசனம் / தத்துவ கடைசல் / சொற் சிக்கனம்
திட்டமிட்ட புத்தி ஜீவித இருட்டடிப்பு
புதிய உச்சங்கள் / புதிய சிகரங்கள்
அடைப்புக் குறிக்குள் படைப்பு நிகழ்த்தாது சத்தியம் நுரை
க்கின்ற முழு உயிர்ப்பும் தெறிக்க பிரளய கால ஊழி வெள்ளமாய்...
சிருஷ்டி ரகசியம்
மலரின் கர்ப்ப நிலை மொட்டு.
தவ வேள்வி / இலக்கிய மேட்டிமை
எரியும் விளக்கில் கை வைத்தால் சுடும்.அதனால் விளக்கையே அணைத்து விடலாமா? விளக்கும் வேண்டும் விவேகமும் வேண்டும்.
கற்பு ஒருகால கட்ட வளர்ச்சி ஏற்படுத்திய ஒழுங்கு.
அவரவர் பயம் அவரவர் தர்மம்.
வாழ்க்கையை வாய்ப்பாடாய் சுருக்கி விடும் சில மனித மனம்.
காலத்தின் நாக்கு / காம வாடை வீசும் வார்த்தைகள்
அயர் தட்டிய காயமாய் தோற்றம் காட்டும் சமுதாயம்.
மரபுடைப்பும் சுய விடுதலையும்.
இந்த உலகத்தைப் பார்ப்பது நம் கண்ணல்ல மனம்.(கீதை)
2)'வினவு வின செய்' என்றோர் இணையத் தளம் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல அரசியல் கட்டுரைகளை வெளியிட்டது.தமிழை அதன் ஆக்ககாரரில் ஒருவர் மிக அநயாசமாக ஒரு ஆக்ரோசமிக்க வீரனின் வாளைப் போலப் பயன் படுத்தியிருந்தார்.அந்த வாள் வீச்சின் சுழற்சியையும் அதன் லாவகத்தையும் பார்ப்பதற்காகவே அக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன்.அதிலிருந்து சில.
ஒரு காரசாரமான் அரசியல் கட்டுரையின் இறுதியில் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்.
".....என்பன போன்ற கேள்விகளுடன் எதிர் வாதத்திற்குச் சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும்.முதலில் கூரை ஏறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம்.வானமேறி வைகுந்தம் போகும் வழியைப் பற்றி அப்புறம் விவாதிக்கலாம்".
ஈழத்தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெரித்த 'வீரம்'.....
3)'பனிக்குள் நெருப்பு' என்ற புத்தகத்திலிருந்து;-
உன்னத ஊழியம்
குழு நலப் பஜனை
தமிழின் பிரம்மத்துவம்
4)இறுதியாக மேலும் சில...
கொப்புளானா என்ற சிறுகதையில் அ.முத்து லிங்கம் ஒரு குடும்பப் பெண்னை இப்படியாக வர்ணித்திருந்தார்.
"பத்மாவதிக்கு ஆறாம் வகுப்பு மாணவி போல முகம்.ஒரு கூட்டத்தில் தொலைந்து போனால் கண்டு பிடிக்க முடியாது.எல்லோருடய முகமும் அவருடையது போலவே இருக்கும். பார்த்தவுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்ற உணர்வை அது தூண்டி விடும்"
5)ஒரு முறை 'சும்மா' வாசிக்க என்று கொண்டு சென்ற தினக்குரல் பத்திரிகையில்(29.கார்த்திகை 2009; பக்.39)சிற்பி பாலசுப்ரமணியம் என்பவர் மகாகவியின் 'பொருள் நூறு' என்ற புத்தகத்தைப் பற்றி பனுவல் ஒன்று எழுதி இருந்தார்.அவரது கவிதைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.
"அலையலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாக கவிதையை மிதக்க விட்டார்.அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும் படி செய்தார்.வானத்தையும் பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தைக் கனக்க கனக்க முன் வைக்காமல் சாளரத் திரையினூடே தெரியும் நந்த வனம் போல - மெல்லிய காற்றில் அதிரும் வீணைத் தந்தி போல - தத்துவங்களை உணர வைத்தார்"
பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரிந்ததில் வியப்பென்ன!இது நம் நாட்டு மகாகவியை அறியாதவர்களுக்காக அவரது பாடல் ஒன்று.
"சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
வெறு வான வெளி மீது மழை வந்து சீறும்
வெளி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்"
மேலே சொன்ன சிற்பியின் நயம் பாடலோடு இசைவது போலில்லையா?