Sunday, February 7, 2010

சிட்னியில் சில எழுத்தாளர்கள் - சில தகவல்கள்

சென்ற வார நடுப்பகுதியில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கவிஞர் வைதீஸ்வரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அவரது அனுபவ ஞானமும், பட்டறிவும், இயல்பாற்றலும் நாம் எல்லோரும் அறியவும் பெற்றுக் கொள்ளவும் பெரிதும் வேண்டத் தக்கன.அவருடனான ஒரு அனுபவப் பகிர்வும் பயிற்சிப் பட்டறையையும் சிட்னியில் வைக்கத் தீர்மானித்துள்ளோம்.

கவிதை மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வமுடையோர் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். ஆர்வமுள்ள பங்கு பெற்று பயன் பெற விரும்புவோர் உங்கள் எண்ணிக்கைகளை எமக்கு அறியத் தந்தால் மண்டப வசதிகளையும் இருக்கை வசதிகளையும் ஒழுங்கு செய்ய உதவியாயிருக்கும்.

சென்ற ஆண்டின் (1999)முற்பகுதியில் மெல்போர்ன் மாநகரில் நடந்து முடிந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சில எழுத்தாளர்கள் வருகை தந்திருந்தார்கள்.அதில் பிரதானமாக மலையகத்திலிருந்து வருகை தந்திருந்த தெளிவத்தை யோசெப் அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு.திருமதி ஜெய மோகன் அவர்களும் அவர்களோடு கூடவே மெல்போர்னிலிருந்து வந்திருந்த முருகபூபதி அவர்களும் சிட்னி மாநகரைச் சுற்றிப் பார்க்கவும் எழுத்தாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளவும் வந்திருந்தார்கள். அப்போது எடுக்கப் பட்ட படங்கள் இவை.



மேலே இடமிருந்து வலமாக நிற்பவர்கள் முறையே திரு.தெளிவத்தை ஜோசெப்,திரு.முருக பூபதி, திரு.ஜெயமோகன், திருமதி ஜெயமோகன்.

படம் எடுக்கப் பட்ட இடம்; சிட்னி மாநகர் மத்தி.ஆர்ட் கலரிக்கு முன்னால்.

No comments:

Post a Comment