Sunday, March 13, 2011

யாழ்ப்பாணம்; சில நினைவுகள்



என்னுடய வலைப்பூவுக்கு வருபவர்கள் மிகச் சொற்பம். ஆனால் வருகிறவர்கள் பெரும்பாலும் கிரமமாக வருவதையிட்டு எனக்கு மிகுந்த மனத் திருப்தி உண்டு.
இந்தியா,இலங்கை,அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற என் தோழர்களைத் தவிர அமெரிக்கா, அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பின்னணியில் இருந்தும் தன்சானியா, யப்பான், கொறியா,தாய்வான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் அன்பர்கள் வருவது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் ஒரு விடயம்.அங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எவ்வளவு பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு விடயம் இல்லையா!

கடந்த வெள்ளிக்கிழமை 11.03.2011 அன்று ஜப்பானில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது இந்த வலைப்பூவைத் தேடி வரும் அன்பர்களையும் நினைத்துக் கொண்டேன்.அவர்கள் நலமாக இருப்பார்களாக!


அது ஒரு புறம் இருக்க,கடந்த வாரம் எங்கள் ஈழத்து முற்றம் என்ற கூட்டு வலைப் பதிவு தமிழ்மணத்தால் இவ்வார நட்சத்திரமாகத் தெரிவு செய்யப் பட்டிருந்ததை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.

அதில் வந்து சேர்ந்த நினைவோடைக் குறிப்புகளும் அனுபவங்களும் பகிர்வுகளும் நிஜமாலுமே நம் ஊரின் நினைவுகளையும் பிரிவின் தாக்கங்களையும் மிகையாகத் தூண்டி விட்டது.ஒரே உணர்வோடு அங்கு கூடி இருந்த உலக ஈழத்துச் சகோதரர்கள்;அவர்களிடையே இருந்த அன்பு,நேசம்,ஒற்றுமை,ஒத்துழைப்பு,ஏக்கம்,சோகம்,பகிர்தல் எல்லாமே அதன் பலத்தில் இருந்து என்னை அசையவே முடியாத படி அந்த ஒரு வாரத்தை அது கட்டிப் போட்டு விட்டது.

தாய்நாட்டின் பலம்;தாய்மண்ணின் வாசம்; அது தந்த வாழ்க்கை; இவை எல்லாம் இலகுவாக நம்மை விட்டு அகன்று போகக் கூடிய ஒன்றல்ல.


அதன் ஒரு விளைவாக யூரியூப்பில் யாழ்ப்பானத்தின் வாழ்க்கையை; அது இன்று எப்படி இருக்கின்றது என்றெல்லாம் கான ஆவலோடு ஓடினேன்.அதிலிருந்து சில வீடியோ கிளிப்புகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


இதில் வருகின்ற பாடல்களோ அல்லது பதிவில் வருகின்ற படத்தில் ஏதாவதொன்றோ உங்கள் நினைவுகளைக் கிளறிவிடப் போதுமானதாக இருக்கும்.

மனதில் ஏதோ ஒரு விதமான ஏக்கத்தையும் கவலையையும் இவை ஏனோ தூண்டி விட்டுச் செல்கின்றன.

எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தோம்! எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம் என்ற நினைவுகளை; அந்த மக்களின் உயிரோட்டமான அன்பு,நேசம்,வாஞ்சை; வாழ்க்கை முறை தருகின்ற எளிமையான,உண்மயான,நின்மதியான வாழ்க்கை இவற்றை எல்லாம் இழந்து போனோமே!என்ற ஏக்கத்தை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

நேரமிருந்தால் இவற்றைக் கேட்டுப் பாருங்கள்.







2 comments:

  1. நல்ல பதிவு, தமிழ்மணத்தில் உங்கள் இடுகையைச் சேர்க்கவும் பலரை இது சென்றடையும். தமிழ்மணத்தில் இடுகையை இணைக்க http://www.tamilmanam.net/user_blog_submission.php

    ReplyDelete
  2. :)மிக்க நன்றி பிரபா.

    உங்கள் கருத்துரையைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete