Thursday, October 2, 2014

பூப்பூவா பூத்திருக்கு.....

பூமியிலே ஆயிரம் பூ!

பூவிலே சிறந்த பூ என்ன பூ?

அன்’பூ’ என சொல்கிறது ஒரு பாடல்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு 21 இல் கீத மஞ்சரி இந்தப் பூக்களைப் பார்த்து விட்டு அவரது பதிவொன்றில் ஒருவர் பார்க்க பார்க்கச் சலிக்காதவை என்ற தலைப்பில் குழந்தைகள், பூக்கள், கடல் அலை, யானை, ........, என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறினா.

பார்க்க பார்க்க சலிக்காதவை என்ற சொல்லுக்கும் அழகு என்ற சொல்லுக்கும் தூரம் அதிகமில்லை தானே?

அழகு என்ற தலைப்பினை நினைத்தவுடன் எனக்கு அழகு என்று தெரிவது யாது என்று யோசித்துப் பார்த்தேன். புறத்தோற்றத்தை விட அகம் சார்ந்து தெரிகிற குணாம்சங்கள் தான் எனக்கு பேரழகாகத் தோன்றுகிறது.

தாய்மையான குணாம்சம், குழந்தையின் மழலை, முதிர்ந்த புன்னகை, உறுதியான இயல்பு, இக்கட்டான வேளையில் நீளும் ஆதரவுக் கரங்கள்... இப்படியாக.

இப்போது இதனை பதிகையில் ஆழியாழ் (நம் கன்பராக் கவிஞை) எழுதிய ’!’ என்ற தலைப்பிட்ட கவிதை நினைவுக்கு வருகிறது. அது இப்படி நீளும்.

“!”

நட்டாழக் கடலின் அமைதி
நிரபராதிகளைக் காப்பாற்றும் சட்டங்கள்
உண்மையைப் பதிவு செய்யும் புகைப்படங்கள்
முறுவல் பூத்தபடி நடமாடும் இளவரசி
குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாதிரிகள்
சுயநலமற்ற தாய்மை
ஆண்கள்

உங்களுக்கு  சலிக்காதிருக்கிற அழகு எது?

கடந்த வாரம் 28.9.2014 பரமற்ரா பார்க் (Parramatta Park) இப்படித் தோற்றமளித்தது.

( மேலும் சில படங்களை இலக்கிய சந்திப்பு பற்றி எழுதும் போது பதிவிடுவதற்காகச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை விரைவில் வெளிவரும்)














































































(படப்பிடிப்பு - யசோதா) (28.9.14)

8 comments:

  1. வண்ணவண்ணமாய், வகை வகையாய், அழகு வடிவங்களில் எத்தனை எத்தனை மலர்கள்! தங்கள் இனத்தை வாழ்விக்க எத்தனை எத்தனை வழிகளில் முயற்சி செய்கின்றன இத்தாவரங்கள்!
    கான்பரா கவிஞையின் '!' தலைப்பிட்ட கவிதை அசத்தல். ஆச்சரியக்குறிக்குள் அடங்கிவிடுகிற அத்தனையும் ஆச்சரியமே!
    சந்திப்பின் இனிய நினைவுகளை ஏந்தியபடி மனமும் மலர்ந்து நிற்கிறது தோழி.

    ReplyDelete
  2. பார்க்கச்சலிக்காத மலர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் செந்தாமரைத் தோழி.

      Delete
  3. :) தாங்ஸ்ப்பா

    வண்ணங்களும் வாசங்களும் வடிவங்களுமாக தேன் சுமந்த பூக்கள் வருந்தி அழைக்கின்றன வண்டுகளை!

    பெண்களின் நினைவு வருகிறது.

    ReplyDelete
  4. உள்ளம் கொள்ளை போகுதே...

    காணாத கண்களை காண வைத்தமைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  5. உள்ளம் கொள்ளை போகுதே; கொள்ளை இன்பம் காணுதே; தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே.....
    :)

    ReplyDelete