கடந்த இரு மாதங்களுக்கு முன் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் ஒலி வடிவத்தை கீழ் வரும் link இல் அழுத்திக் கேட்கலாம்.
மடக்கு 16.6.20
இலக்கியங்களில் அழகுணர்ச்சியை சொற்களைக் கொண்டே அமைத்து அதனை பொருள் நயமும் ஓசைநயமும் விளங்குமாறு செய்தனர் தமிழர். செய்யுளில் சொற்களின் அமைப்பு, அதன் வைப்புமுறை, சொற்களைக் கொண்டு பொருள் கொள்ளும் முறை என்று நுட்பமாக அவற்றுக்கு இலக்கணங்களும் அவர்கள் வகுத்துள்ளார்கள். அவை சொல்லணி, பொருளணி என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவன.
அந்தவகையில் வரும் சொல்லணிகளான எதுகை, மோனை, சிலேடை, பின்வருநிலை,மடக்கு, அந்தாதி என்பவற்றுள் ஒன்று இந்த மடக்கு என்பதாகும். சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வரு நிலை அணி என்ற இந்த மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான சில வித்தியாசங்கள் உள்ளன.
சிலேடை என்பது ஒரு சொல்லே செய்யுளில் வரும் போது இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளக் கூடியது. உதாரணமாக ’சென்னை வரவேற்கிறது’ என்பதை ’சென்னை வர வேர்க்கிறது’ என்று சொல்லலாம். அதாவது இங்கு ஒரு வசனத்திலேயே இரு பொருளும் அமைந்திருக்கும்.
ஆனால் மடக்கில் அடுத்ததடவை அதேசொல் வரும் போது அது வேறொரு பொருளைத் தருவதாக இருக்கும். அதாவது மடக்கில் வரும் சொல் மறுதடவை வரும் போது அதே சொல் வேறொரு பொருளைக் குறிப்பதாக வருவது. அப்படியென்றால் பின்வருநிலையணியில் அது எப்படி வருகிறது? பின்வரு நிலைஅணியில் ஒரே சொல் அடுத்தடுத்த இடத்தில் வரும் போதும் தனித்தனியாகவும் கூட அது ஒரே அர்த்தத்தையே கொண்டிருக்கும்.
உதாரனமாக 200 வது திருக்குறளை எடுத்துக் கொண்டால் அது
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.’ (குறள் எண் - 200)
அதில் சொல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் அது சொல் என்ற ஒரு அர்த்தத்திலேயே வருகுதல் காண்க. இதுவே பின்வருநிலை அணியாகும்.
வடமொழியில் மடக்கு என்பதை யமகம் என்று அழைப்பார்கள். சொற்களை எழுத்தெழுத்தாகப் பிரித்தும் கூட்டியும் முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளக்கூடியதாக அமையப்பெறும் சொல்லணிகளிலே அழகு வாய்ந்தது மடக்கு. புலமைக்கும் மொழிஆழுமைக்கும் சொல்விளையாட்டுக்கும் வழிவிட்டுக் கொடுப்பது மடக்கு.
மடக்குஎன்றால்என்ன?
மடக்குஎன்பது ’எழுத்துக்களது தொகுதி பிறஎழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறுவேறு பொருளை விளைவிப்பது மடக்கு என்னும் அலங்காரமாகும்’ என்று தண்டியலங்காரம் அதற்கு விளக்கம்கூறுகிறது. அதாவது ஓர்எழுத்து அல்லது ஒருசொல் மீண்டும்மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் வருமாறு அமைத்தல் மடக்குஆகும்.
ஊதாஊதாஊதாப்பூ…
https://www.youtube.com/watch?v=IbyWiib5ZxQ
ஆனாலும் சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வருநிலைஅணிக்கும் என்று மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் நுட்பமான வித்தியாசம் உள்ளது.
’அரவம்அரவம்அறியுமா’ என்றவசனத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் முதலாவது அரவம் பாம்பையும் இரண்டாவது அரவம் என்றசொல் சத்தத்தையும் குறிப்பதாக ஒருவசனத்தில் ஒரேசொல் இருவேறுஅர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா? அதுதான்மடக்கு.
இப்போதுமடக்குவகையில்அமைந்தபாடல்ஒன்றுகேட்போமா?
ஆடவரெலாம்ஆடவரலாம்....
https://www.youtube.com/watch?v=w5DjkjH8qME
ஆடவரெலாம்ஆடவரலாம்என்பதில்வரும்ஆடவரெலாம்என்பதுஇருவேறுஇடங்களிலும்இருவேறுபொருள் தாங்கிவருவதைக்கண்டீர்களா?
மடக்கணியில் இலக்கியவகை சார்ந்த பாடல்கள் அனேகம் உள்ளன.
திருக்குறள்,கம்பராமாயணம்தொடக்கம்பக்திப்பாடல்கள் ஈறாக அநேகபாடல்கள் இந்தமடக்கணி வகையில் உருவாகி வந்துள்ளன. இராமாயனத்தில் அமைந்துள்ள பாடல் ஒன்று இது.
'வண்டலம்புநல் ஆற்றின் மராமரம்,
வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன;
விண்டலம் புகம் நீங்கிய வெண்புனல்,
விண்டலம் புக நீள் மரம் வீழ்ந்ததே." (32).
இந்தப் பாடலில் வண்டலம்’ என்பது முதல் இரண்டு அடிகளிலும் விண்டலம்பு என்பது ஈற்று இரண்டடிகளிலும், பாடலடிகள் மடங்கி வந்துள்ளன. இப்பாடலைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்:
'வண்டு அலம்புநல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன;
விண்டு அலம்பு கம்.நீங்கிய, வெண் புனல்
விண்கலம் புக நீள் மரம் வீழ்ந்தவே'
அதாவது, அனுமன் எறிந்த மரங்களுள், வழிப் பாதையிலிருந்து மரங்கள் சில வண்டல் நீர் பொருந்திய ஆற்றில் விழுந்தன. அனுமன் உயரே தூக்கியெறிந்த நீண்ட மரங்கள் விண்ணிலே புக விண்னகத்திலே ஒடுகின்ற நீர் சிதறி அகலும்படி ஆகாய கங்கையில் வீழ்ந்தன.’ என்பது அதன் பொருளாகும்.
கவி காள மேகத்தாரின் பாடல் ஒன்று மடக்கணியில் இப்படியாக அமையப்பெற்றுள்ளது.
’வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்
கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ!’
இதிலே மூன்றாம் அடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பது (காலின் அடிப்பகுதியால்) அடிப்பதும் அத்தாலே என்றும்; இறுதியடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பதில் அடிப்பது( தயிர்கடையும்) மத்தாலே என்றும் வருதல் காண்க.
1889ம்ஆண்டில் ஈழத்திலுள்ள.கொல்லங்கலட்டி என்றஇடத்தைச் சேர்ந்த பூ. பொன்னம்பலப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட மாவையமகஅந்தாதி ஒன்று மாவைக் கந்தனை துதிசெய்வதாக மடக்கணியில் இப்படியாக வருகிறது.
’வானில வானிலவும் பொழின்மாவையின் மாணருள்செய்
வானில வானிலயம் புகுந்தேத்தல் செய்வாய் மலர்க்கோ
வானிலவானிலமால் குளிர்நீரெரி வன்னி சல
வானிலவானிலயப் பொருளா மவன் மன்னடியே’
அதாவது
வானத்திலுள்ள மதிமண்டலத்தின் கண் அவாவி நிற்கும் சோலை சூழ்ந்த மாவைப்பதியின்கண் மிக்க திருவருளைச் செய்பவனாகிய முருகனுடய இடமாகிய கோயிலின் உள்ளேசென்று அவன்திருவடிகளை ஏத்துவாயாக. தாமரைமலரினல் இருக்கும் இறைவனாகிய பிரமதேவனது சத்தியலோகம் உட்பட நிலமும் பெரிய குளிர்ந்தநீரும் எரிகின்றதீயும் அலைகின்ற காற்றும் ஆகாயமும் அவனுடய பெருமையுற்ற திருவடியில் ஒடுங்கும் பொருள்களாகும்’ என்பதுஅப்பாடலின் உள்ளே அமைந்திருக்கும் கருத்தாகும்.
கந்தாநீஒருமலைவாசி.....
https://www.youtube.com/watch?v=UIMvJH9LL30
3.49 – 6.55
மடக்கணியில் பல இலக்கியப் பாடல்கள் உள்ளன. உதாரணமாக மருத்துவநூல் ஒன்றில் அமையப் பெற்றிருக்கும் மடக்குஅணிஒன்றை இப்போது காண்போம்.
பத்தியத்தை நோயை யனுபானத்தை லங்கணத்தைப்
பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் - பத்தியத்தை
யேகமாயார்த்தாலு மேறாச்செவிபோல
யேகமாயார்த்தாலு மெய்''20
இந்தவெண்பாவில், பத்தியத்தை என்னுஞ்சொல் மூன்றுஇடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ்சொல் இரண்டிடங்களில் அமைந்திருக்கிறது.
முதலாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பிணிநீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப்பிரிந்து, பத்தியமுறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச்சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐஎனப்பிரிந்து, பத்துவிதமான இசைக்கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமையப் பெற்றிருக்கிறது.
ஏகமாயார்த்தாலும் என்பது, ஒருமுகமாக முழங்குகின்றபோது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப்பிரிந்து பார்த்தால் போய்விட, கெட்டு, ஆரவாரம்செய்து என்னும்பொருளில் மாறிமாறி நின்று பொருளமைக்கும்.
இந்தப்பாடலின் பொருள்என்னவென்றால் பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்கவேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணைமருந்தான அனுபானத்தையும், நோய்நீங்கத்துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மாமியாரைப்போல நோயாளி பத்தியமுறைகளை ஏற்றக்கொள்ளவும். பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின்போது சொல்லுகின்ற சொல் காதில் நுழையாததைப்போல இருந்தால், நோய்கள் ஆரவாரம்செய்துகொண்டு உடலைக் கெட்டுப் போய்விடச்செய்யும் என்பதால், பத்தியம்முக்கியம்என்பதைஉணர்க’ என்னும் பொருளை இது உரைக்கிறது.
வித்துவத் திறமைக்கு களம் அமைத்துத்தரும் இத்தகைய பாடல்கள் உடைத்துப் பொருள்அறியவேண்டியவை.
இன்றய காலங்களில் சினிமாக்களிலும் இந்த அணியினை புகுத்தி சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
கொஞ்சும் கிளி பாட வச்சான்...
https://www.youtube.com/watch?time_continue=182&v=VnmD2j3bEng&feature=emb_logo
2.40 – 3.00
இப்போது ஒலித்த இப் பாடல் வரிகளில் மடக்கின் எழில் கொஞ்சுகிறது அல்லவா? .மடக்குஅணியின் அழகை வெளிப்படுத்தும் பல பாடலகள் கொண்ட கதம்பத்துடன் விடைபெறுகிறது இன்றய நம்மதமிழ்.
தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை....
https://www.youtube.com/watch?v=FvRlKreWTX4&lc=UghmL7M5AUy2zngCoAEC
1.40 – 2.00
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...
https://www.youtube.com/watch?v=tXU1r0OVf3g
(8.05 – 8.22 )
உதய கீதம் பாடுவேன்.....
https://www.youtube.com/watch?v=Om3lOwdgxcw
(2.04 – 2.10 )
திருமண மலர்கள் தருவாயா....
https://www.youtube.com/watch?v=528O3U7qMco
மண்ணை அடிபதுமத்தாளே அளந்தானை என்ற பொருள் குறிப்பது விஷ்ணு தம் தாமரைப் பாதத்தால் உலகை அளந்ததையே குறிக்கும். மண்ணை அடி பதுமத்தாலே (பதுமம்-தாமரை) அளந்தானே
ReplyDelete