ஒரு லைட் ரீடிங்குக்காக கொண்டு செல்ல ஆனந்த விகடன் நல்லதொரு வார ஏடு. மிக இயல்பாக வந்து விழும் நகச்சுவைகள் களைத்திருக்கிற / கனத்திருக்கிற மனதை நொடிப் பொழுதில் இலகுவாக்கி விடும்.அத்தகைய வல்லமை அச்சிறு சஞ்சிகைக்கு நிறையவே உண்டு.வாராவாரம் எங்கிருந்து தான் சிறு சிறு துணுக்குகளாக அவற்றை எல்லாம் அள்ளி வருகிறார்களோ தெரியவில்லை.
இது நான் ரசித்துச் சிரித்தவை.நீங்களும் கொஞ்சம் சிரிங்களேன்!
*இன்னிக்கு டாக்டர் லீவுஅதனால உங்களுக்கு நாளைக்குத் தான் ஆப்பிரேசன்.
நீங்களே எனக்கு ஆப்பிரேசன் பண்ணிடுங்களேன் நேர்ஸ்.போற உசிரு உங்கட கையால போனதா இருக்கட்டுமே!
*ஒன்றே செய்..நன்றே செய்...அதையும் இன்றே செய்...னு கூட்டத்தில யாரோ சொன்னதும் தலைவர் ஏன் டென்ஷனாயிட்டாரு?
தேர்தலில் தோற்றால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன்னு தலைவர் சொன்னப்ப தான் அப்பிடிச் சொன்னாங்களாம்.
*எதிர்கட்சித் தலைவர் உருவ பொம்மையை எரிச்சீங்களே..அதுக்காக உங்களைக் கைது பண்ணுறோம்.
நீங்க கூடத்தான் அதை அணைக்க அதும் மேல தண்ணி ஊத்தி மிதி மிதின்னு மிதிச்சீங்களே!விடுங்க சார்.
* மாடிப் வீட்டுப் பொண்ணைக் காதலிச்சியே என்னாச்சு?
படிப்படியா மறக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.
* லவ் பண்ணினாலே இது ஒரு கஸ்டம்.
என்ன?
உனக்கு மெரேஜ் ஆகுற வரைக்கும் நான் டென்ஷனிலேயே இருக்கணும்.
* உங்களப் பாத்தா என்னோட மூணாவது மனைவி மாதிரியே தெரியுது.
ஐயோ உங்களுக்கு எத்தன மனைவி?
இரண்டு!
* பேஷண்ட் வயித்துக்குக் குறுக்கே ஏன் றிபன் கட்டியிருக்கு?
டாக்டருக்கு இது முதல் ஆபிரேசனாம்.
* உங்களுக்காக என்னைப் பெத்து வளர்த்த அப்பா அம்மாவையே தூக்கி எறியத் துணிஞ்சிட்டேங்க...
அடிப் பாவி! அப்புறம் உனக்கு யாரு மாப்பிள பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க?
* டாலிங்!எங்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்னோட அறிவா..அழகா?
இப்படி எல்லாம் நீ கமெடியா பேசுறா பாரு, இதான் உங்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது.
* இப்ப விருட்டுன்னு கிளம்பிப் போன பஸ்ஸில யாரும் டிக்கட் எடுக்க வேண்டியதில்ல.
ஏன்?
கண்டாக்டர் நான் தான். இங்கல்ல நிக்கிறன்.
இந்த வாரம் ஆ.வீ பார்த்தேன்.
ReplyDeleteஎன் மச்சான் சொன்னான் ,
எனக்கு ஒண்டுமே புரியேல்லை எண்டு.
நமீதாவின் மார்பும்
நித்யா அண்ட் ரஞ்சிதாவும்..
அற்லீஸ்ற் ஷ்ரேயா வாவது தெரிந்தால் மட்டுமே உன்னால் படிக்கமுடியும் என்றேன் நான்.