பூ கொடியின் புன்னகை
அலை கடலின் புன்னகை
மழை முகிலின் புன்னகை - அந்த
பெளர்னமி என்பது
வானத்தின் புன்னகை.............
என்றொரு பாடல்.
இங்கு இப்போது வசந்த காலம்.முகிலில் முகம் துடைத்து சூரியன் பளீச்சென வெளி வரும் காலம். பூமி மெல்ல சோம்பல் முறித்து எழுந்து கொள்ளும். பூக்கள் பூக்கத் தொடங்கும்.பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஆரம்பிக்கும்.அநேகமாக எல்ல சிற்ரூர்களிலும் வசந்த கால விழாக்கள் street festival, spring festival என்ற பெயர்களில் களை கட்ட ஆரம்பிக்கும்.
கன்பரா அவுஸ்திரேலியாவின் தலைநகரம்.அங்கு வருடம் ஒரு தடவை (செப்ரெம்பர் 15இல் இருந்து) இதேகாலப் பகுதியில் பூக்களின் கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை tulip பூக்களால் நிறைந்திருக்கும் நகரம். அதைப் பார்க்க பல இடங்களில் இருந்தும் மக்கள் செல்வார்கள்.நாமும் போனோம்.
ஆனால் இப்போதெல்லாம் முன்னரைப் போலில்லாமல் கடைகளுக்கும் வியாபாரத்துக்கும் முன்னுரிமை கொடுத்து பூக்களை ஒரு ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.அது சற்றே ஏமாற்றத்தை அளித்தது.அத்தோடு பூக்களின் தொகையையும் வெகுவாகக் குறைத்து விட்டிருந்தார்கள்.

மேலே உள்ள இப்பூவை bottle brush என்று கூறுவார்கள். native வகையைச் சார்ந்தது. பொதுவாக எங்கும் இது காணக் கிடைக்கும். பலநிறங்களிலும் உண்டு. பறைவைகளுக்கு மிகப் பிடித்தமான மலர். கூடவே ஒரு வித மூலிகை வாசம் கொண்ட, பறவைகள் மட்டுமே கண்டுகொள்ளக் கூடிய வகையில் நிறையத் தேனை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் மலர். பராமரிப்பில்லாமலே மரமாய் வளரக் கூடியது.
மேலே உள்ளது big sheep Restaurant. Goulburn என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. சிட்னியில் இருந்து செல்கின்ற பயணிகள் இவ்விடத்தில் தரித்து தம் சிரமபரிகாரங்களைச் செய்து கொள்வார்கள். இச் செம்மறியாட்டு காலடி வாரத்தில் உணவு விடுதியும் ஏனைய வசதிகளும் உண்டு.
செம்மறியாட்டுப் பண்ணைகளும் wool எடுக்கும் தொழிலும் குல்போர்னில் பிரசித்தம்.
கன்பராவுக்கு போயாகி விட்டது. மேலே உள்ளது காட்சிப் பொருட்கள் விற்கின்ற ஒரு கடை. வாலை நிமிர்த்தி வைத்திருக்கின்ற பூனைகள் எதற்கென்று சற்றே யூகிக்க முடிகிறதா?
இந்தப் பூனையின் வாலில் தான் மோதிரங்களைக் கொழுவி வைக்கிறார்கள். Ring holder!
மேலே உள்ளது விளக்குச் சரங்கள் விற்கும் ஒரு கடை. இவற்றை வர இருக்கும் நத்தார் கொண்டாட்டங்களுக்காக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
காணக்கிட்டிய பூக்கள் சில. பெயர் தெரியாது.
மேலே உள்ளது பொய்கால் குதிரை மாதிரி உயரமான தடியில் நின்று ஒரு பெண் ஆடும் நடனம். குழந்தைகள் வெகுவாக இதனை ரசித்தார்கள்.
மேலே குழந்தைகளுக்கான ராட்டினம்.எல்லாவற்றுக்கும் கட்டனம் அறவிடப்படுகிறது.
இது கன்பராவில் இருக்கும் தண்ணீர் காட்சி. கீழ் இருந்து தண்ணீர் இத்தனை உயரத்துக்கு எழும்புகிறது. இதிலிருந்து தெறிக்கின்ற தண்ணீரில் வானவில் காட்சியைக் காணலாம். படத்தில் அது வரவில்லை.
அரிதாகக் காணக்கிடைக்கும் கறுப்பு நிற அன்னங்கள்!
மேலே இருப்பது வருகிற பாதையில் காணக் கிட்டிய காட்டோரத் தான் தோன்றிப் பூ.
மேலே இருப்பது அவுஸ்திரேலியப் பாராளுமன்றம்.
படங்கள்:ஜெ.ஹர்ஷி.
வசந்த காலம்.முகிலில் முகம் துடைத்து சூரியன் பளீச்சென வெளி வரும் காலம்.
ReplyDeleteபுன்னகை நிரம்பிய பூக்களின் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..
நன்றி மணிமேகலா. உங்கள் தயவால் கான்பெரா மலர்க்காட்சியைக் கண்டுகளித்துவிட்டேன். அழகிய புகைப்படங்களுடன் அவற்றுக்கானத் தகவல்களையும் வழங்கியமைக்கு நன்றி.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை... நன்றி...
ReplyDeleteஅழகின் முழுவுருவம்! பராமரித்துப் பூப்பவைகளும் பாதையோரப் பூக்களும் சளைப்பதில்லை கவர்வதற்கு! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!
ReplyDeleteஅடடா! உங்கள் எல்லோராலும் என் நாள் இன்று பூவாய் மலர்ந்தது.
ReplyDeleteஎன் வீட்டுக்கு வந்து புன்னகை பூக்கும் உங்கள் எல்லோரையும் இன்று ஒன்றாகக் கண்டதில் மிக மிக சந்தோஷம்.பகிர்வில் மலர்கிறது நெஞ்சம்.