Monday, October 3, 2016

வண்ண வண்ணப் பூக்களூடே.....1.

நம்ம ஊரில இப்ப வசந்த காலம். பூக்களின் காலம். இளஞ்சூரிய சூட்டில் பச்சை புல்வெளிகளில் உட்கார்ந்திருக்கும் சின்ன சின்ன மழைத்துளிகள் வைர ஜாலம் காட்ட குளிரான தென்றல்காற்று வருடிச் செல்லும் காலைகளில் வண்ண வண்ணப் பூக்கள் சிரித்துக் கிடக்க கிளிகளும் குருவிகளும் தேன் குடித்துக் களிப்பது சிட்னியின் வசந்த கால அழகுகள்.

ஏராளமான பாதையோரத்து அழகுகளில் கை தொலைபேசி கிளிக்கியவை தான் இவை. இன்னும் ஏராளம் உண்டு. ஆனால், உங்களோடு பகிர இன்னொரு வண்ண வண்ண பூக்காடு உண்டு. அது புத்தகப் பூக்காட்டுக்குள் விரிந்த வண்ணங்கள். இதைத் தொடர்ந்து தனிப்பதிவாக அது வரும் விரைவில். இப்போதைக்கு கண்ணுக்கு இவை!



























8 comments:

  1. அருமையான படங்கள்

    ReplyDelete
  2. கண்கவரும் வண்ணவண்ணப் பூக்களுடே நடந்து களித்தேன்.. புத்தகப் பூக்காட்டுக்குள் உலவும் நாளை இனிதே எதிர்பார்த்திருக்கிறேன். அன்பின் பரிசாய் எனக்களித்த புத்தகப் பூக்காடும் உங்கள் அன்பை நித்தமும் அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. கீதா, உங்கள் கமரா கண்கள் கிளிக்கிய பூக்காடுகள் காண ஆவல்.மிக ஆவல்...

      Delete
  3. அழகான பூக்கள்..... சிறப்பாகப் படம் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆமாப்பா, நேரில் நல்லதொரு காலநிலை இப்போது.
    தகுந்த நண்பர்களோடு பூக்களூடே கவிதைகள் பேசிய படி உலாவுவதும் அவற்றோடு கூடி இருந்து சிற்றுண்டி உண்டு மகிழ்வதும் வாழும் தருணங்கள் நண்பா.

    ReplyDelete