Wednesday, December 21, 2016

’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -


இனிய தமிழ் இலக்கிய உள்ளங்களே!

வருகிற புது வருடம் உங்கள் எல்லோருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எடுத்து வருவதாக!

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடும் என் தமிழோடும் பயணித்த உங்கள் எல்லோருக்கும் என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறேன்.

புது வருடம் என்னவெல்லாவற்றையும் எடுத்து வரும் என்பது நத்தார் பாப்பா கொண்டு வரும் பரிசுப் பொருள் போல புதினமானது.

இருந்த போதும், ’முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமெல்லோ’? என் அன்புத் தோழி கீதாவின் / கீதா.மதிவாணனின் முதலாவது புத்தக வெளியீடு நம் அமைப்பான உயர்திணை ஊடாக முதலாவது புத்தக வெளியீடாக எதிர் வரும் தைத் திங்கள் 26ம் திகதி அவுஸ்திரேலிய தினமான விடுமுறைநாளாக இருக்கும் வியாழன்று வெளியிட இறையருள் கூடி இருக்கிறது.

கீதாவின் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பிலக்கிய வகை சார்ந்தது. அவுஸ்திரேலியாவின் செவ்வியல் எழுத்தாளரான ஷென்றி லோஷனின் அவுஸ்திரேலியாவுக்கு ஆங்கிலேயர்கள் புலம்பெயர்ந்து வந்த போது அவர்கள் எதிர் கொண்ட சவால்கள்/ வாழ்வியல்கள்/ பாடுகள் / பண்பாடுகளைப் பேசுகிறது. 

தமிழ் இலக்கியத்துக்கு இது வரை வெளிவந்திராத புதுவகை வாழ்வியல் அறிமுகம் இது. எளிய தமிழில் ஒரு பண்பாட்டையே தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழின் ஆழுமை கதைகள் எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்ததால் தமிழுக்கு சாத்தியமாகி வரும் இத்தகைய புதிய இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்றய தினம் அவுஸ்திரேலியா என்ற தேசம் உருவாகிய காலத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குறும் படம் ஒன்றும் காட்டப்பட இருக்கிறது. இவை அக்கால வாழ்வியலை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பது நம் நம்பிக்கை.

நிகழ்ச்சி நிரல் விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப் படும்.

வர முடிந்தவர்கள் வாருங்கள்....
         வர வேண்டும்.....

8 comments:


  1. வாழ்த்துகள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி யாழ் பாவாணரே!
      மகிழ்ச்சியும்....

      Delete
  2. நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புது வரவுக்கும் சிரத்தையோடு வாழ்த்தளித்தமைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.அன்பும். அத்தனை வாழ்த்துக்கும் உரித்தானவர் கீதா. அவரை அது சென்றடைவதாக...

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
      விடுமுறையும் கொண்டாட்ட காலமும் தொடங்கி விட்டதால் இணையப்பக்கம் பல வேலைகள் இருந்தும் வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்க!

      Delete
  3. என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் உங்கள் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் உங்அகளுக்வகும் பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்மாறு செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு நீங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிற விஷயத்தை விட நாம் என்ன செய்து விட்டோம் கீதா?
      இந்தப் புது வருஷம் தமிழ் உலகம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளட்டும் கீதா.

      நீங்கள் இருக்க வேண்டிய உயரம் வேறு...

      Delete
  4. ஹென்றி லோஷனின் எழுத்துகள் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி. கீதா மதிவாணன் அவர்களுக்கு நன்றிகள். விழா சிறப்படைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜேகே. ஒரு படைப்பாளியாகவும் இருந்து கொண்டு புத்தக வெளியீட்டினையும் செய்ய வேண்டி இருக்கும் சுமையின் வலி உங்களுக்குத் தெரியும்.

      இங்கு பல துறைகளிலும் பலவிதமான நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படைப்பாளிகள் வெளியீடுகளின் சிரமங்களாலும் கூச்சம், புகழ் விரும்பாத் தன்மை மற்றும் பல சமூகக் காரணங்களாலும் தம் வெளியீடுகளை வெளியீடு செய்யாமல் இருக்கிறார்கள். விஞ்ஞானப் புனைகதைகள், நுண்கலை நூல்கள், தரமான பெண்ணியல்,புலம்பெயர் சிந்தனைகள் கொண்ட கவிதைத் தொகுதிகள் இப்படியாகத் தேங்கி இருக்கின்றன.

      இந்தப் புத்தகங்கள் எல்லாம் உலக அரங்குக்கு வர வேண்டும். வர ஆவன செய்யப்பட வேண்டும்.

      புது வருஷத்தில் உயர்திணை அத்தகைய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் பேரவா. உங்கள் ‘கந்தசாமியும் கலக்சியும்’ கூட அந்த வரிசைக்குள் அடங்கும்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜேகே.

      தமிழால் இணைந்திருப்போம்.

      Delete