Monday, April 19, 2021

அன்றாட பாடங்கள்

 


தண்ணீர் சொல்லித் தருகிறது

நழுவிச் செல்வதெவ்வாறென


நெருப்பு அறிவுறுத்துகிறது

சுட்டெரித்தல் பற்றி


நிலம் தோண்டியும் பொறுமை காக்கும் பூமி

போதிக்கும் பாடம் 

நெருப்புக்கு எதிர்மாறு


காற்றோ, ஊதிப்பெருப்பித்தும்

வருடிக்கொடுத்தும்

நோகாமல் நகர்கிறது.


இறுதியாக,

எல்லாவற்றையும் 

பார்த்துக் கொண்டிருக்கும் 

ஆகாயத்தின் மீது தான்

கோபமாக சூரியனும்

குளிர்ச்சியாக சந்திரனும்

பவனி வருகிறது.


அன்றாட வாழ்வில்

படிக்கும் பாடங்கள் அநேகம்..


4 comments:

  1. வாழ்க்கைப் பாடங்கள்...

    நன்று.

    ReplyDelete
  2. ஓ.. வணக்கம் வெங்கட். நலமா? உங்கள் வரவு கண்டும் பகிர்வு கண்டும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. க‌விதைக்கு நன்றி ஒரு சின்ன சந்தேகம் படத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்று தான் விளங்க வில்லை

    ReplyDelete
  4. :) நன்றி புத்தன்.
    கோயிலுக்குப் பூ எடுத்துச் செல்லும் தட்டு அது!இயற்கை என் தட்டுக்குள் போட்ட பூக்கள் அவை என எடுத்துக் கொள்ளலாம்.
    எல்லாம் ஒரு கற்பனை தானே! :)

    ReplyDelete