Sunday, February 1, 2009

அடையாளம்

ஒவ்வருவரும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் தனித்துவமானவர்கள் என்பதையும் 3-5 வயதுக்குரிய குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நான் யார்

நீ நீதான்
மிகச்சரியாக உன்னைப் போல்
எவருமிலர் இவ்வுலகில்.

இது பற்றி நீ
சிந்தித்ததுண்டா?
நிறம், கண். கூந்தலெனவும்.....
முகவடிவு, மூக்கு, வாயெனவும்....
.........
நீளும் உன் தனித்துவம்.

ஒத்த இரட்டையர் போல் எனவும்
அம்மா, அப்பா போல் எனவும்
சில வேளை நீ இருப்பதுண்டு.

ஆழ்ந்து பார்த்தால் ஆழம் தெரியும்.
வேறு பாட்டின் வகைகள் புரியும்.

உனக்கு மட்டுமேயான பெயர்
உனதேயான குரல்
உனக்கு மட்டுமே உரித்தான
சிந்தனைகள்...யுக்திகள்...
........
பிடித்தவை....பிடிக்காதவை....
எனவும் அவை நீளும்.

நிறங்கள்...ஆடைகள்...
உணவுகள்...சுவாரிசங்கள்...
மேலும் உன் நண்பர்கள்...
எனவும் பெருகும் உன் அடையாளங்கள்.

உன் சிறப்புகள் எனவும்
விரியும் சில...
விளையாட்டு? கணணி?கணக்கு?
ஓவியம்? இசை? கலை?
........
........

மூளையும் ஐம்புலன்களும்
உதவியதால்
உருவானவன் நீ

தனித்துவமானவன்.

உலகின் விஷேஷ ஷிருஷ்டி.

உமா ஷக்தி குழந்தைகள் பற்றிய சிறப்பான ஒரு கட்டுரையை தன் இனையத்தளத்தில் தந்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய மக்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன்.

ஈழத்தின் போர் அவலங்களும், அதன் தொடர்ச்சியாக முத்துக்குமாரனின் தீக்குளிப்பும் தமிழ் மனங்களை மாளாத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்ற தருணம் இது.வலைத்தளங்களும் வானொலிகளும் வெளி நாடுகளும் தொலை பேசிகளும் இன்னும் அதனை உணர்வு பூர்வமாக இயங்கச் செய்து கொண்டிருக்கிறன.தொலை நகல்கள், கடிதங்கள், ஊர்வலங்கல், உண்ணாவிரதங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் என நகர்கிறது நான் உட்பட நம்மவர் வாழ்வு.

நாம் உணர்வு நிலையில் இருந்து அறிவு நிலைக்கு உயர வேண்டிய வேளை இது.உயிரின் மதிப்பு உணரப்பட வேண்டும்.அதன் சிறப்பும் மதிப்பும் நமக்கேனும் தெரிய வேண்டும்.அவர் எவராய் இருந்தாலும் பாதுகாக்கப் படவேண்டும்.இனியும் இப்படி ஒரு உயிரிழப்பு வேண்டாம் எங்களுக்கு.உணர்வுகளையும் அழுத்தங்களையும் வெளிப்படுத்த வேறு வழிகளைச் சிந்திப்போம்.

மரம் என்ற தலைப்பில் ஒரு சின்னக் கவிதை எங்கோ பார்த்தேன்.


மரம்

வெட்டப்பட்ட பிறகே
உணர்த்துகிறது
அதன் இருப்பை.

முத்துக் குமரனின் மரணம் குறித்த நினைவுகளும் கூடவே வருகிறது.கவிதையைப் போல கையாலாகாத நிலை ஒன்றே எஞ்சியுள்ளது எம்மிடமும்.

அவருக்கு இந்த வலைப்பூவின் கண்ணீர் அஞ்சலி.
இனியும் வேண்டாம் இப்படி ஒரு மரணம்.

6 comments:

  1. \\நாம் உணர்வு நிலையில் இருந்து அறிவு நிலைக்கு உயர வேண்டிய வேளை இது.உயிரின் மதிப்பு உணரப்பட வேண்டும்.அதன் சிறப்பும் மதிப்பும் நமக்கேனும் தெரிய வேண்டும்.அவர் எவராய் இருந்தாலும் பாதுகாக்கப் படவேண்டும்.இனியும் இப்படி ஒரு உயிரிழப்பு வேண்டாம் \\*

    நல்ல கருத்து, நாமும் அதையே வேண்டி நிற்கின்றோம்.

    ReplyDelete
  2. வாருங்கள் காரூரன்

    உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை வழிநடத்திச் செல்லும் ஒரு தலைமை இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  3. மிக அழகாக உயிரின் பெறுமதியை கூறியிருக்கிறாய். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோமோ?????

    கௌரி

    ReplyDelete
  4. உண்மை தான் கௌரி.

    இப்போதய நிலைமையில் உலகத் தமிழரின் இலக்கு சரியாக உள்ளதா என்று தெரியவில்லை.இந்தியா 3000 துருப்புகளையும் இராணுவத் தளபாடங்களையும் இராணுவ தந்திரோபாயங்களையும் இலங்கைக்கு வழங்குமாக இருந்தால் உலகத் தமிழரின் இலக்கும் இந்தியாவாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

    இந்தியா அதற்குள் நின்றால் உலக நாடுகள் பின்வாங்கவே செய்யும் என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. முத்துக்குமாருக்கு முன் கறுப்புகண்ணாடி ”தலை” எலலாம் ஒரு தலையா?
    தமிழனாம்... கடல்ல தக்கிப் போட்டாலும் மிதப்பாராம்..வடிவேலுவின் காமெடியை விட நல்லா இருக்கே இது

    ReplyDelete
  6. நெட்டில் சுட்ட கவிதை http://antogaulbert.blogspot.com/2009/09/blog-post_16.html
    தென்னிந்திய கறுப்புக் (கிழட்டுத்) கண்ணாடித் தலைவனின் சமாதி கட்டும் போது அங்கு கல்வெட்டாய் பொறித்து வையுங்கள் இதை
    (செலவை நான் தருகிறேன்)

    ஊனம்
    பொறித்து
    ஊனமென்பது யாதெனில்.....
    மங்கிய ஒளியும் இருண்ட பார்வையும்
    கொண்டோரல்ல குரூடர்-மாறாக
    கெட்டவை கண்டும் காணா செருக்குடன்
    கடந்து செல்வோர் குரூடர்!

    ஊனமென்பது யாதெனில்.....
    மௌனம் உடைத்து வார்த்தைகள் தொடுக்க
    முடியாதவரல்ல ஊமை-மாறாக
    உள்ளதை சொல்ல உள்ளம் நடுங்கி
    உண்மையை மறைப்போர் ஊமை!

    ஊனமென்பது யாதெனில்....
    ஒலிகள் உணரா செவிகள்
    கொண்டோரல்ல செவிடர்-மாறாக
    சக உயிரின் ஓலம் கேட்டும்
    உயிர் துடிப்பற்றிருப்பர் செவிடர்!

    ஊனமென்பது யாதெனில்.....
    கைகள் நலிந்து கால்கள் இழந்தவருக்கல்ல
    ஊனம்!-மாறாக
    கடமையை செய்ய காசுக்காக நீளும் கரங்களும்,
    கண்ணியமற்று திரியும் கால்களும்

    ReplyDelete