Tuesday, February 8, 2011

கிளிப் பூ

கிளிப்பூ(parrot flower) என்றுஅழைக்கப் படும் இவ் அபூர்வ மலர் வட தாய்லாந்திலும் பர்மாவிலும் இந்தியாவின் குறிப்பிட்ட சில இடங்களிலும் காணப்படுகிறது.ஒக்ரோபர் நவம்பர் மாதங்களில் பூப்பதாம்.இதன் தாவரவியல் பெயர் Impatiens psittacina என்பதாகும்.

கிளியைப் போலவே இருக்கிறது இல்லையா?

இயற்கை எத்தனை அழகுகளைத் தான் தன்னுள்ளே கொண்டு விளங்குகிறது!கிறீஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மேதை பிளேட்டோ கூறினார்,’யார் நம்புவார்? கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே பிரபஞ்சக் கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கியிருக்கிறது என்று.’

இவ்வகிலம் முழுக்க இயற்கையின் பேராற்றலும் அழகுச் செல்வங்களும் மலிந்து கிடக்க, நாம் ஏன் இவற்றை அழித்து இயந்திரங்களை ஆக்கி நாமும் இயந்திரமாக ஓடுகிறோம்?













(படங்கள் நன்றி;கூகுள் இமேஜ்)

2 comments:

  1. கிளிப்ப்பூ உண்மையிலேயே கிளி மாதிரி தான் இருக்கு..தகவலுக்கு நன்றி..படங்களும் அருமை...:)

    ReplyDelete