கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.
அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!
அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.
ஆங்கிலேய அவுஸ்திரேலியர்களிடம் தேனீர் விருந்துக்குப் போனால் அவர்கள் தேனீர் தருகிற கப் அண்ட் சோசர்களிலும் இத்தகைய கலை நயத்தைக் காணலாம். கேத்திலும் சீனி,பால் வைத்திருக்கும் அழகாக வடிவமைக்கப் பட்ட பீங்கான் குவளைகளும், அதில் நம் விருப்பப் படி கலந்து குடிக்கும் பாங்கில் வைக்கப் படுவதும்; வந்தமா குடித்தமா போனமா என்றில்லாமல் உரையாடலுக்கு கூடுதல் கவனம் கொடுப்பதும் அவர்கள் பாங்கு. அதனோடு கூடவே ஒத்துப் போகும் விடயங்கள் பற்றி உரையாடிய படி இத்தகைய கலை நயமிக்க குவளைகளில் தேனீர் பருகுவதில் தேனீருக்குக் கூடுதல் சுவை!
நம்மவர் வைக்கிற விருந்துபசாரங்களுக்குச் சென்றிருக்கிறேன்.சோறும் எக்கச் சக்கமான கறிகளும் வைக்கப் பட்டிருக்கும்.உறைப்புக் கறியிலேயே மீன் இறைச்சி, கணவாய், நண்டு என்று நீளும் அதன் பட்டியல். அதற்குள் எண்ணையில் பொரித்தெடுத்த வறுவல் பொரியல் என்று இன்னொரு வகை. மரக்கறிகள் இன்னொரு பெரிய பட்டியல். அதை விட இனிப்பு உணவு வகை. சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று உபசாரம் வேறு மனதையும் சங்கடத்தில் ஆழ்த்தும்.
அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஏன் இவ்வளவு நேரத்தை விரயம் செய்து இத்தனை வேலைகளைச் செய்து நம்மை ரசித்து உண்ண முடியாது பண்ணி விடுகிறார்கள் என்பதைத் தான். ஒரு உறைப்புக் கறியும் ஒரிரு மரக்கறியும் ஒரு சலட்டும் ஒரு பழச்சலாதும் எவ்வளவு ருசியாய் இருக்கும். ஒரு பதார்த்தத்தின் செய்நுட்பத்தை- அதன் சுவையை ருசியை அதைச் செய்த அந்தக் கைவண்ணத்தை அறிய ரசிக்க,சுவைக்க அது எவ்வளவு சுகமாக இருக்கும்! வயிறுக்கும் உள்ளத்துக்கும் அது எத்தனை திருப்தியாக இருக்கும்.வேலை, நேரம், களைப்பு என்று அதிகம் இல்லாமல் முக மலர்ச்சி கூட முகங்களில் பரினமிக்கலாமில்லையா?
நான் எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய் விட்டேன். சொல்ல வந்தது இதைத்தான்.அந்தத் துணிக்கடையில் அந்தக் கத்திரிக் கோலைப் பார்த்தேன் என்று சொன்னேன் இல்லையா? அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.
வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))
எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.
படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.

ஒரு பதார்த்தத்தின் செய்நுட்பத்தை- அதன் சுவையை ருசியை அதைச் செய்த அந்தக் கைவண்ணத்தை அறிய ரசிக்க,சுவைக்க அது எவ்வளவு சுகமாக இருக்கும்! வயிறுக்கும் உள்ளத்துக்கும் அது எத்தனை திருப்தியாக இருக்கும்.வேலை, நேரம், களைப்பு என்று அதிகம் இல்லாமல் முக மலர்ச்சி கூட முகங்களில் பரினமிக்கலாமில்லையா?
ReplyDeleteஅழகாக பரிணமித்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
ஆஸ்திரேலியாவில் மகன் இல்லத்தில் உலர்ந்த பாதாம் போன்ற பலவகைக் கொட்டைகள் நிரம்பிய அழகிய டின்னும் அதற்குள் அவற்றை உடைத்துச்சாப்பிட வைத்திருந்த அழகிய பாக்கிவெட்டி போன்ற உபகர்ணத்தையும் பார்த்து வியந்துபோனேன்...
ReplyDeleteஎத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்!
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ஒரே கணம் ஒரே நேரம் அழகுணர்வால் ஒன்று பட்டோம் தோழி!
ReplyDeleteஇந்த அனுபவம் - எனக்கிது தான் முதல் முறை.
இன்றய நாள் உங்களால் மலர்ந்தது.:) இயல்பான ஒரு அகமலர்ச்சியையும் முகத்தில் ஒரு புன்முறுவலையும் தந்து செல்கிறது உங்கள் உடனடியான பின்னூட்டம்.
மிக்க மகிழ்ச்சி தோழி! என் செந்தாமரைத் தோழி!:)
அந்த பதாம் உடைக்கிற கருவியைப் பார்க்க ஆவல். இப்போது வேலைக்கு போக வேண்டும். வந்து பார்க்கிறேன்.:)
பாக்குவெட்டி சேகரிப்பு முயற்சிக்கு ஒரு பெரிய சல்யூட் மணிமேகலா. எத்தனை விதம், எத்தனை கலைநயம்! அரிய பொக்கிஷங்களைக் காணத்தந்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவிருந்து பற்றிக் கூறியது மிக உண்மை. ஆனால் சில ஆண்கள் அப்படி எளிமையாய்ச் செய்ய மனைவியரை அனுமதிப்பதில்லை என்பதும் உண்மை.
எண்ணப்பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
உங்களுடய கருத்தோடு முழுவதுமாக உடன் படுகிறேன் தோழி.
ReplyDeleteகடந்த வாரம் என் தொழில் நிமித்தமான கலந்துரையாடல் ஒன்றுக்காக ஒரு தமிழ் வைத்தியரோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவர் சொன்னார் நமக்கு உணவு கூடி நிறைய வருத்தங்கள் நம் தாயகத்தில் உணவு இல்லாமல் பல வருத்தங்கள் என்று.
உலகமெங்கும் அந்த சமநிலை எப்போ வரப்போகிறது என்று தெரியவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.