Saturday, February 1, 2014

சொல்லும் முறை



அந்த ஆள் ஒரு மாடு

அந்த ஆள் ஒரு பசு.

இரண்டு வசனங்களும் குறிக்கிற விடயம் ஒன்று தான். ஆனால் அதனை சொல்லும் முறையில் எத்தனை பாரிய கருத்து வேறுபாடு இருக்கிறது இல்லையா? - எங்கோ பார்த்தேன்.

சொல்லும் முறையில் ரொம்பக் கவனம் தேவையாய் இருக்கிறது.

உதிரியாய் இன்னொன்று. ஆண்கள் ஒரு காதால் கேட்டு இன்னொரு காதால் வெளிவிட்டு விடுகிறார்களாம். பெண்கள் இரு காதுகளாலும் கேட்டு வாய் வழியாக வெளிவிடுகிறார்களாம்.

சுவாரிசமாக இருக்கிறது இல்லையா?

இந்த வாரத்துக்கு அஷ்ய பாத்திரத்தில் இவ்வளவு தான் சாப்பாடு.:)

8 comments:

  1. ஆக எதையும் மனதில் நிலைநிறுத்துக் கொள்ளதில்லை... ஹா... ஹா...

    ReplyDelete
  2. சொல்லும் முறையில் கவனம் என்பது மிகச்சரிதான் மணிமேகலா. நான் ஒரு கண் மருத்துவரிடம் சென்றிருந்தேன். கண்ணில் பல பரிசோதனைகள் செய்துவிட்டு மருந்து போட்டார். நான் சொன்னேன், 'எரிச்சலாயிருக்கு டாக்டர்.' அவருக்கு கோபம் வந்துவிட்டது. 'கண் பரிசோதனை என்று வந்துவிட்டால் தொடர்ந்து இப்படி பல சோதனைகள் இருக்கும். எரிச்சல்பட்டால் எதுவும் நடக்காது' என்றார். பிறகுதான் என் தவறு புரிந்தது. 'கண்ணிலே எரிச்சலாயிருக்கிறது' என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்!

    இன்னும் நிறைய வேடிக்கையான விஷயங்கள் எல்லாம் நடந்துள்ளன. ஒரு பதிவாகவே போடலாம். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  3. :) அப்படித்தானே தனபாலரே!

    அதனால் தானே / அப்படித்தானே பெண்களை எரிச்சல் படுத்துகிறார்கள் / சமாளிக்கிறார்கள். இல்லையா? :)

    ReplyDelete
  4. :) நல்ல ஒரு பொருத்தமான உதாரணம் சொன்னீர்கள் கீதா. உங்களிடம் இருந்து இது சம்பந்தமாய் ஒரு பதிவை பார்க்க ஆவலாய் இருக்கிறேன். அது பயனுடயதாய் இருக்கும்.

    தொடர்பாடல் ஒரு கலை இல்லையா கீதா? அதனால் எம்மை நாம் அலங்கரிக்க வேண்டும். குண அழகின் வசீகரமாய் அது மிளிரும்.

    தாங்ஸ்மா. வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  5. முதல் வாக்கியம் 'மாடு மாதிரியான உழைப்பு' என்பதற்கும் இரண்டாவது 'பசு போல் சாது' என்பதற்கும் அர்த்தப் படுத்தினால் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
  6. மாடு என்று பேசுவதும் உண்டல்லவா? நாய், மாடு, கழுதை ...என்ற மாதிரியாக...

    உண்மையில் அவை நல்ல வார்த்தைகள் தான். நாம் தான் அவற்றை மாறான அர்த்தத்தில் பிரயோகிக்கிறோம் போலும்!

    எங்கே நிலாவை கன நாளாய் காணோம்?

    ReplyDelete
  7. ஒரே பொருள் தரும் சொற்கள்
    மாறுபட்ட உணர்ச்சிகளை வரவழைப்பது சுவாரஸ்யம்தான்

    வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete