அண்மையில் நம் வீட்டில் இருந்து 10 நிமிட வாகன தூரத்தில் இருக்கும் ஒரு சிறு பூங்காவுக்குப் போயிருந்தோம். கோடை காலம் என்பதால் தட்ப வெப்ப நிலை சற்றே ஏறுக்கு மாறாக இருந்தது. மதியம் வேறு. மதிய நேரம் 29 பாகை வெப்பநிலையில் எடுத்தவை இவை.
இந்த மர வேரைப் பார்த்த போது எத்தனை அழுத்தமாய் உறுதியாய் நிலத்தைப் பற்றிப் பிடித்த படி இருக்கிறது எனத் தோன்றியது. பறவைகளின் கால் அலகுகளை மாதிரியும் இருக்கிறதில்லையா?
இவ தான் அந்த வேர் கொண்டிருக்கிற கிளை. அகன்று விரிந்து பரந்து கிளை பரப்பி நிற்கக் காரணம் அந்த உறுதியான வேரின் பிடி தான்.
இது ஒரு சாதி பச்சோந்தி மரம் மாதிரி. மரத்தில ஒரு மரம். இலையால மரத்தை பிடிச்சுக் கொண்டு கொஞ்சம் வித்தியாசமா.....
இது பந்தல் இலைகள் ஒழுக விட்ட வெளிச்ச வட்டங்கள். அதுவும் போடுது கோலம்!
குட்டி இன நாய்களுக்கு இங்கு இப்படித்தான் மயிர் வெட்டி ரிபனும் கட்டி விடுவார்கள். விசித்திர இலைகள்!
மயிரிலைகள் தன் ‘கிளை’களோடு!
மரத்துக்கு மனித வலு சேர்த்த வண்ணம்!
பாதைக்கு நிழல் தந்த வண்ணமாக!
உறவுகளோடு இலைக் குடும்பம்!
நீரருகே வாழும் மரங்கள்.
மரம் பூக்குது ஒரு பெரும் பூ!
வெய்யிலினால் படம் தெளிவாய் தெரியவில்லை. மூன்று வித பச்சையில் மூன்று வித இலை வடிவங்களில் அருகருகே. சிநேகிதர்களாக்கும்!
பாறைக்குள்ளும் முளைக்கும் தாவரங்கள். அவை பூக்கவும் செய்யும் அதிசயம்!
இவையும் அவையே!
மர மான்மியம் இவ்வளவு தான். அங்கு ஒரு மயிலும் சுதந்திரமாய் இம்மரங்களுக்குள்ளே மாயோ மாயோ என்று அகவிய படி இருந்தது.
அவை அடுத்த பதிவில் வரும்.
(Auburn Botanical Garden 12.2.15)
(ஆனால் அடுத்த பதிவு எப்ப வரும் எனத் தெரியாது. ஏனென்றால் விடுமுறை முடிந்து நாளை வேலை ஆரம்பம்.)
படங்கள் அழகு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சந்தோஷம்! :)
ReplyDeleteஉண்மையிலேயே இந்த வலை ஒரு அக்ஷய பாத்திரமே.
ReplyDeleteஎத்துனை அழகு காட்சிகளை எம் கண்களுக்கு
விருந்தாக தருகிறது. !!!
இயற்கை தனை நாடின் ,
இயல்பான அட்சய பாத்திரம் காண்போம் என்பது திண்ணமே.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
வணக்கம் சுப்புத் தாத்தா.
ReplyDelete:) நீங்கள் வந்ததே எனக்கு சந்தோஷம்!
வரட்சி குளிர்ச்சி, சந்தோஷம், துக்கம், கோபம், சலிப்பு,புரட்சி, தெளிவின்மை,.......இவைகளும் உள்ளன தாத்தா.
நீங்கள் வந்ததே எனக்கு சந்தோஷம்.
மறுபடியும் அந்த இடத்துக்கு சென்றுவிட்டாற்போன்ற பிரமை. ஒவ்வொன்றும் ஒரு வித அழகு. நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கீங்க. பாராட்டுகள் மணிமேகலா.
ReplyDeleteசந்தோஷம்பா! :)
ReplyDelete