Friday, April 22, 2016

அனுபவித்தல்.....
வாழ்க்கை......
வேலை, குடும்பம், உறவுகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டது.

அதற்கும் மேலே கொஞ்சம் போனால் வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் என்றும் சொல்லலாம்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்கள்......

50 சதத்திற்கு வாங்கிய வாழ்த்து அட்டை ஒன்று “ celebrate the precious gift of life " என்று எழுதி ஒரு கடற்கரையும் கரையில் ஒரு தேவதையும் வரையப்பட்டிருக்கக் கண்டேன்.

எங்களில் எத்தனை பேர் வாழ்க்கையை கொண்டாடுகிறோம்? அனுபவம் செய்கிறோம்?

துன்பச்சுவையையும் ஒரு அனுபவமாக உணர்கிறோம்? அவை தரும் படிப்பினைகளை பின் புலமாகக் கொண்டு  வாழ்வின் தார்ப்பரியங்களை புரிந்து கொள்கிறோம்?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்துக் கடக்கும் சின்னச் சின்ன விடயங்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவற்றில் பொதிந்து கிடக்கும் சந்தோஷ கணங்களை ஆகார்ஷிப்பதும் இல்லை. 


கடந்த வாரம் ஒரு வட இந்திய சினேகிதி ஒருத்தியின் மகனாரின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆடலும் பாடலும் சாப்பாடும் கொண்டாட்டமுமாய் ஒரு வாழ்வின் வரவை அவர்கள் கொண்டாடினார்கள்.

20.4.2016 அன்று காலை எடுத்ததாகத் தன் நாயினுடய படத்தை என் நண்பன் காட்டினான். இந் நாய் காலை நேர குளிர் காற்றை கண்மூடி அனுபவிப்பதைப் பார்த்தீர்களா? இந் நாய் - அதன் பெயர் Bear. நமக்கு வழங்குகின்ற பாடம் ஒன்று உண்டு. அது,

"Enjoy the simple things in life" 

11 comments:

 1. அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் கற்கவும் மேம்படவும் நமக்கு கொட்டிக் கிடக்கின்றன இவ்வுலகில் இல்லையா தோழி...! நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நிலா,
   எங்கே காணோம் பல மாதங்கள்? கண்டது மிக்க மகிழ்ச்சி நிலா. கன காலத்துக்குப் பிறகு நம் பழைய சினேகிதியைக் காண்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி! மன நிறைவு!!

   /நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை./ சரியாச் சொன்னீங்க நிலா.
   பதிவுலகில் இணைந்திருங்கள் நிலா....

   Delete
 2. நாயும் எஜமானின் அதிகாரத்தின் கீழ்தான் தனது சுதந்திர காற்றை அனுபவிக்க முடிகின்றது.....கழுத்தில் பட்டி ,சங்கிலி.....

  ReplyDelete
  Replies
  1. :) புத்த பகவானுக்கு வணக்கம்.கட்டுப்பாட்டுக்குள்ளும் விதிமுறைக்குள்ளும் விளையாடும் போது தானே விளையாட்டுக்கள் சுவாரிஷமாகின்றன. இல்லாவிட்டால் அதில் ஏது சந்தோஷம்.

   எல்லோருக்கும் வாழ்வில் இருக்கிறது ஒரு வித கட்டுப்பாடு. ஒவ்வொருவருக்கும் வேறு வேறான விதிமுறைகள். அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் நமக்கான சந்தோஷத்தை!!

   அலைகளோடு இருக்கின்ற கடலோடு தான் நம் நீச்சல்.....

   மகிழ்ச்சி புத்தன். வந்ததற்கும் பகிர்ந்து கொண்ட கருத்திற்கும்.

   Delete
 3. வணக்கம் தோழி. தங்கள் உற்சாக வரவேற்பு அதிக சக்தி ஊட்டுகிறது எனக்கு. நீந்திக் கடக்கவியலா வாழ்வெனும் நதிப்பிரவாக வேகத்தில் எழும்பி எழும்பி கரை காண வேண்டியிருக்கிறது. மன நெருக்கத்தில் எப்போதும் போல் தானே நாம்!

  ReplyDelete
 4. அப்படியாக இருக்கும் போது தான் இப்படியான வடிகால்கள் வேண்டி இருக்கிறது நிலா. அவரவர் உயரத்துக்குத் தக்கபடியாக அவரவர்க்கு ஜன்னல்கள் வேண்டும்.
  காற்று வர.
  இல்லையென்றால் நாங்கள் செத்துப் போவோம் தோழி. இணைந்திருப்போம் நாங்கள்!- ஒன்றாக!!

  ReplyDelete
 5. இறுக்கம் நிறைந்த இருட்டு வாழ்க்கையில் கிடைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் உற்சாகம் தரவல்லது. உண்மை தோழி.. வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்தல் வரம் அல்லவா?

  ReplyDelete
 6. இன்றைய என் பதிவில் என்னைக் கவர்ந்த பதிவுகள் தொடரில் தங்கள் பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வருகை தர அழைக்கிறேன். நன்றி தோழி.

  ReplyDelete
 7. மிக்க மகிழ்ச்சி கீதா.
  வருகிறேன், வருகிறேன்...

  ReplyDelete
 8. கீதாவின் பதிவின் மூலம் இங்கு வந்தேன்... நீங்கள் கூறுவது போல் வாழ்க்கையை ரசிக்காமல் விரட்டிச் செல்கிறோம்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete