Sunday, January 22, 2017

ஒலி வடிவில் ஒரு கலை வலம்

வருகிற வியாழக்கிழமை 26.1.17 அன்று மாலை யாழ்நிகழ்வரங்கில் கீதா.மதிவாணனின் ‘என்றாவது ஒரு நாள்’ - அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு வைக்கப் பட இருப்பது நீங்கள் அறிந்ததே!

இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரச ஊடக வானொலியில் (சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது) கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்தது.

அவ் ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.

கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)

ஒலிவாகனம் ஏறி அகிலமெல்லாம் ‘கலைவலம்’ செய்ய வைத்த கலைஞ உள்ளங்கள் அனைவருக்கும் நம் மனம் நெகிழ்வான நன்றிகளைச் சொரிந்து மகிழ்கிறோம்.........
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ciinnnttvnnninnn-aavi?language=ta

“சீனத்தவனின் ஆவி”

Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெரும் எழுத்தாளர். அவரின் உருவப்படத்தை ஆஸ்திரேலிய பணத்தில் அச்சிடுமளவு அவர்மீது இந்த தேசம் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது. Lawson எழுதிய சிறு கதைகளை தமிழில் மொழிபெயர்த்து என்றாவது ஒருநாள் என்ற தலைப்பில் எதிர்வரும் 26ம் திகதி புத்தகமாக வெளியிடுகிறார் கீதா மதிவாணன் அவர்கள். அந்தச் சிறுகதைகளில் சீனத்தவனின் ஆவி எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றேணுகா துரைசிங்கம்.

14 comments:

 1. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இதனைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

  26.01.2017 அன்று ஆஸ்திரேலியாவில் புத்தக வெளியீட்டு விழா வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடக்கட்டும்.

  நூலாசியர் அவர்களுக்கும், மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா அவர்களுக்கு வணக்கம்.
   உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
   கீதாவால் தமிழுக்கு எடுத்து வரப்பட்ட கலைகலந்த ஒரு வரலாற்றுப் பேழை அவரின்’என்றாவது ஒருநாள்’ அது பலரையும் சென்றடைய வேண்டும்....

   Delete
  2. அன்புடையீர், வணக்கம்.

   //கீதாவால் தமிழுக்கு எடுத்து வரப்பட்ட கலைகலந்த ஒரு வரலாற்றுப் பேழை அவரின் ’என்றாவது ஒருநாள்’ அது பலரையும் சென்றடைய வேண்டும்....//

   இதே தங்களின் நோக்கமே எனக்கும் இருப்பதால், தங்களின் இந்தப்பதிவினில் உள்ள படங்களையும், விஷயங்களையும், நான் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டுள்ள, இதே நூலின் என் புகழுரையில், தங்கள் அனுமதியில்லாமல் இன்று புதிதாகச் சேர்த்துக்கொண்டுள்ளேன். அதற்காக என்னைத் தாங்கள் தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன். தங்களின் இணைப்புகளையும் அதே பதிவின் பின்னூட்டப்பகுதியில் பின்னூட்ட எண்ணிக்கை 65 மற்றும் 66 இல் நான் குறிப்பிட்டுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2015/09/part-5-of-5.html

   >>>>>

   Delete
  3. நம் அன்புக்குரிய ‘கீத மஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் இந்த இனிய நூலினை நான் இந்த அட்டைக்கு அந்த அட்டை, பக்கம் பக்கமாக, வரிவரியாக, வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாக முற்றிலும் மனதில் வாங்கிக்கொண்டு ரஸித்துப்படித்து, நூல் அறிமுகமாகவோ, நூல் விமர்சனமாகவோ இல்லாமல், ’நூல் புகழுரை’ என்ற தலைப்பினில், மொத்தம் ஐந்து பகுதிகள் உள்ள மிகச்சிறிய தொடராகவே என் வலைத்தளத்தினில், தகுந்த படங்களுடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளேன்.

   அதனைப் பாராட்டி ஏராளமானவர்கள் பின்னூட்டங்களும் கொடுத்துள்ளார்கள்.

   இதோ அதற்கான ஐந்து இணைப்புகள்:

   பகுதி-1 http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html - 85 Comments

   பகுதி-2 http://gopu1949.blogspot.in/2015/09/part-2-of-5.html - 66 Comments

   பகுதி-3 http://gopu1949.blogspot.in/2015/09/part-3-of-5.html - 53 Comments

   பகுதி-4 http://gopu1949.blogspot.in/2015/09/part-4-of-5.html - 47 Comments

   பகுதி-5 http://gopu1949.blogspot.in/2015/09/part-5-of-5.html - 66 Comments

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   >>>>>

   Delete
  4. 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல், அதே ஆண்டு தீபாவளி பண்டிகை வரை நான் என் வலைத்தளத்தினில் 10 மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாகத் தொய்வின்றி நடத்திய, 40 வார சிறுகதை விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட, தங்களின் தோழி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள், ஒட்டுமொத்த வெற்றியாளர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை கீழ்க்கண்ட பதிவுகள் மூலம் தாங்கள் அறிந்து மகிழலாம்:

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html ..... 123 Comments

   http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html ............... 38 Comments

   http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html ................ 42 Comments

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html ..... 54 Comments

   http://gopu1949.blogspot.in/2014/10/5.html .. (கீதா அவர்களின் நேயர் கடிதம்) 41 Comments

   http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html (எனது நன்றி அறிவிப்பு) 41 Comments

   Delete
  5. மேலதிக தகவல்களுக்கும் உங்கள் அன்பு கலந்த அக்கறைக்கும் மிக்க நன்றி.

   இவை எல்லாம் அவரைப்பற்றி மேலும் அறிய நிச்சயமாக உதவும். அக்கறையோடு அவற்றை இங்கும் பகிர்ந்து கொண்டமை மனநிறைவளிக்கிறது.

   Delete
 2. பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!
   ஊடகங்கள் புத்தகத்தின் பெறுமதியை உணர்ந்து தருகிற ஆதரவு மனதை நெகிழ்விக்கிறது...

   Delete
 3. Link for கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...

  http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html

  Written By கீத மஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.

  ReplyDelete
 4. என்ன தவம் செய்தேனோ.. இங்கு உங்களை நட்பாய் நான் பெறவே... அன்பும் நன்றியும் தோழி.

  ReplyDelete
 5. தகவல்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தொகுத்தளிக்கும் பாங்கினை உங்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் கோபு சார். இங்கே நூல் குறித்த தங்கள் விமர்சனப் பதிவுகளின் சுட்டிகளையும் விமர்சனப் போட்டியில் நான் பெற்ற வெற்றிகள் குறித்த சுட்டிகளையும் பதிவிட்டு பலரும் அறியத்தந்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 6. ஒலிப் பதிவு வழி மொழிபெயர்ப்பு எங்களையும் வந்தடைந்தது. பின்னணி இசை அருமையான மெய்ப்பாடுகளைத் தந்தது. நன்றி தோழி! மகிழ்வான வாழ்த்துக்கள் ...தங்களுக்கும் கீதா மதிவாணன் தோழிக்கும்.

  ReplyDelete