’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’
காணொளி வாயிலாய்
பாரெங்கும் பரவுகிறது
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று.
’நேருக்கு நேர்’ நின்று பேசுகிறார் இளைஞர்
‘மெல்லத்தமிழினி சாகுமா சாகாதா’
என்றவர் வைக்கிறார் வாதங்கள்.
நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்குகிறது
‘தி சென்னை சில்க்’
புகழ் பூத்த பேச்சாளர் மேடையில் வீற்றிருக்க
திரையில் விழுகிறது
அக்கறைக்குப் பதிலாய் அக்கரை என்றொரு வார்த்தை.
அக்கரையில் தான் தமிழினி வாழுமோ?
வலைத்தளப் போராளி கொள்கிறார் ஆவேசம்!
23.05.23.
உங்கள் ஆவேசம் நியாயமானது. பொதுமக்கள் பிழை செய்தால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஊடகங்களில் உள்ளவர்கள் இப்படி தமிழைப் பிழையாக எழுதுவது ஏற்றுக்கொள்ள இயலாதது. செய்தித்தாள், தொலைக்காட்சி, பத்திரிகை என எல்லா ஊடகங்களிலும் பிழைகள் சரளமாக மலிந்திருக்கின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவருக்குக் கூடவா இது குறித்த அறிவு இல்லாமல் போயிற்று. காட்சிகள் யாவும் கற்பனையே என்பதை கர்ப்பனையே என்று எழுதுகிறார்கள். உங்களைப் போலவே எனக்கும் ஆத்திரம்தான் வருகிறது.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் கீதா. எங்கு பார்த்தாலும் எல்லாவற்றிலும் ஒரு மேம்போக்கான நிலை தான் தெரிகிறது....அண்மைய நகைச்சுவை என்னவென்றால் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியில் இத்தனை மலினங்கள் மலிந்து போய் கிடப்பது தான்...தமிழே தெரியாத தமிழர்கள் தமிழ் ஊடகங்களில்.... தமிழ் எங்கே போகிறது கீதா? தப்பி வெளி நாடுகளுக்கு ஓடி வந்து விட்டதோ என்னவோ....
Deleteஇந்த ஒரு காட்சியிலேயே எத்தனைப் பிழைகள்! அக்கறை, வலைத்தளம், விளம்பரத் தேடல்!
ReplyDeleteஆமாம் கீதா!!
Delete