Saturday, August 3, 2024

தோழியர் வீட்டுத் தோட்டங்கள்















மேலே உள்ளவை தோழி லோகா வீட்டு முன்புறத் தோட்டம். நகர சபையால் அழகாகப் பராமரிக்கப் படும் தோட்டம் என்ற விருது பெற்ற வீட்டு முகப்பு.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
12.05.2024 மதியம்.

செழித்து வளர்ந்துள்ள கறிவேப்பிலைச் செடி


மதாளித்து நிற்கும் வாழை



கத்தரிச் செடி



மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்திருந்து தோட்டம் பார்த்துச் சொக்கிப் போயிருக்கும் புத்தர்


தேனீக்களுக்காக மாத்திரமே விடப்பட்டிருக்கும் துளசிச் செடி.


இது ஒரு மரம் தான் என்றால் பாருங்களேன்!

தோழியும் உறவினளுமான இந்து வீட்டுக் கொல்லையில்...
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
10.05.2024 மதியம்


கொத்தாகப் பூத்திருக்கும் றோசாச்செடி



மறைந்திருந்து அழகு சேர்க்கும் றோசாச்செடி


இந்து வீட்டு முன்புறத் தோட்டம்
படப்பிடிப்பு:யசோதா.பத்மநாதன்
காலம்:12.11.2023.


சின்ன இடத்திலும் செழித்துச் சிரிக்கும் கனகாம்பரம்

மாதுளை

முருங்கை


இலங்கையில் முற்றாக அழிந்து போய் விட்ட முள்முருக்கு.



கெளரி வீட்டுப் பின் கொல்லை. மகனின் திருமணத்திற்காக நடப்பட்டிருக்கின்ற முள்முருக்கு
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
காலம்: 25.01.2024.

15 comments:

  1. Nice job Yaso! Thanks for including my garden too🙏🏽🌈💐

    ReplyDelete
  2. எல்லாமே அழகும் பயனுள்ளதும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் நல்வரவும் தங்களுக்கு.
      ‘என்வீட்டுத் தோட்டத்துக்குள்’ முதல் தடவை வந்திருக்கிறீர்கள். சிரமம் பாராமல் வந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  3. தோழியர் வீட்டுத் தோட்டங்கள் அழகும் பயனும் நிறைந்து மனதைக் கொள்ளை கொள்கின்றன. கவுன்சிலின் விருது பெற்ற லோகாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. லோகா வீட்டில் இருப்பது சுண்டைச் செடி போல இருக்கிறதே. சுண்டைக்காய், கனகாம்பரம், முள்முருக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது மனம் பால்யத்துக்குப் போய்விடுகிறது. தோழிகள் இருவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. சுண்டங்காய் நிற்பது என் தோழி இந்து வீட்டில் கீதா. அவவை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வசந்தகாலம் வரட்டும் எல்லோரும் ஒரு தடவை சந்திப்போம்.
      தோட்டக்கலை நிபுணி கீதா வந்து கருத்துரைத்தால் அது கொஞ்சம் extra special! :)
      வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா.

      Delete
  5. மகனின் திருமணத்துக்காக கொல்லையில் முள்முருக்கு நடப்பட்டிருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. கௌரி வீட்டில் என்பதைப் பிறகுதான் கவனித்தேன். கௌரிக்கும் என் அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ’கன்னிக்கால் நடுதல்’ என்று இந்தச் சடங்கைக் குறிப்பிடுவார்கள்!
      முள் முருக்கினை எங்கிருந்து பெற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அபூர்வமாகக் கிடைக்கின்ற மரக்கன்று. பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஊரிலும் இந்த மாதிரி திருமணச் சடங்குகள் செய்வதுண்டா?

      Delete
  6. இலை பச்சை நிறம் என்று இனி சின்னப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்த முடியாது. இலையை பாரு! எத்தனை திணுசு!! என்றுதான் பாடம் நடத்தணும் இனிமே. அழகு இலைகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! பலவண்ண நிறங்கள்; பல வடிவ இலைகள்! செழிப்பானவைகளும் கூட. உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
      நாம் சிறுவர்களாக இருந்த போது இலை பச்சை நிறம் என்று படித்திருக்கிறோம். இப்போதெல்லாம் உலகம் சுருங்கி கையடக்கத் தொலைபேசிக்குள் வந்த பின்னால் தானே தெரிகிறது; உலகத்தில் எத்தனை வண்ணங்களிலும் வடிவங்களிலும் இலைகள் உள்ளன என்பது பற்றி...

      Delete
  7. உங்கள் தோழிகள் வீட்டுத் தோட்டங்கள் அனைத்துமே அழகு. தோட்டத்தில் இருக்கும் புத்தர் மனதைக் கவர்ந்தார். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. தோட்டத்தை பராமரிக்கும் தோழிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. 'என் வீட்டுத் தோட்டத்திற்கு’ உங்கள் வரவு நல்வரவாகட்டும், வெங்கட். :)
    உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete