Monday, April 27, 2026

நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....

நண்பர்களே!
பல நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். எல்லோரும் நலம் தானே? என்னுடய இரு தசாப்தங்களாகப் பாவனையில் இருந்த கணனி தன் வாழ்வை அண்மையில் நிறுத்திக் கொண்டு விட்டதால் இத்தனை தாமதம். கூடவே நியூசிலாந்துக்கும் போய் வந்ததால் மேலும் சில தாமதங்களும் பின்னடைவுகளும் நேர்ந்து விட்டது. கூடவே படங்களை பதிவேற்றுவதில் மேலும் சில சிரமங்கள்...

ஒரு படியாக இன்று முழுநாளும் உட்கார்ந்து என் நண்பர் ஒருவரின் உதவியோடு தமிழ் எழுத்துருவை தரவிறக்கம் செய்து கொண்டு விட்டதால் உடனடியாக ஒரு பரீட்சார்த்தப் பதிவாக இந்தப் பதிவைப் பதிவேற்றுகிறேன்.

விரிவான பதிவோடு விரைவில் வருகிறேன். அதுவரை நியூசிலாந்தில் எடுத்த இந்தப் படங்களையும் காணொளியையும் உங்களுக்குப் பரிசாகத் தந்து செல்கிறேன்.

உங்கள் வரவுக்கு நன்றி.











2 comments:

  1. மீண்டும் ஒரு பதிவுடன் நீங்கள் இங்கே திரும்பியது கண்டு மகிழ்ச்சி.

    நியூசிலாந்து படங்களும் காணொளிகளும் அழகு. முதலாம் காணொளியில் இருக்கும் பாதை - ஆஹா... இரு புறமும் மரங்கள் இருக்க, நடுவே ஒரு அழகிய சாலை - அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. உண்மைதான் வெங்கட். வழி நெடுகிலும் அதன் அழகும் பயணிக்கும் அனுபவமும் மிக மகிழ்வு தருவது.
    அந்த நாட்டில் நான் கண்ட அழகு என்பது மரங்களும் புற்களும் மலைகளும் மாடுகளும் தான்....முதன் முதலாகச் சப்பாத்துக்களைக் களற்றி விட்டு புற்களில் நடந்த அனுபவம் மறக்கவொண்ணாதது. வெல்வெற் போல மிருதுவும் குளிர்ச்சியும்; ஆஹா... ஆஹா...
    இந்தப் புற்களையா நாங்கள் சப்பாத்துக் கால்களால் நசுக்கித் துவம்சம் செய்து கொண்டு போகிறோம் என்று இருந்தது. இயற்கையை; அதன் குளிர்ச்சியை; ஸ்பரிஸித்த அந்த இதத்தை அதன் நிறத்தை என் ஆத்மாவில் தேக்கி வைத்திருக்கிறேன்.
    நன்றி வெங்கட்; உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும். பதிவு வரும் விரைவாக.

    ReplyDelete