Wednesday, July 15, 2026

வெளிச்சத்தின் விழுதுகள்

 

கைத்தொலைபேசியும் வட்ஸப்பும் வந்த பிறகு வரும் செய்திகளுக்கு அளவே இல்லை. காலை எழுந்தால் எத்தனையோ காலை வணக்கங்கள். பகிரப்படும் தகவல்கள், தொலைதூர அழைப்புகள் என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒரு வலைப்பின்னல் அது.

என்னைப் பொறுத்தவரை முக்கியமான தகவல் தொடர்புகளுக்கு மாத்திரம் தான் தொலைபேசி. அதனால் பெரும்பாலான பகிரப்படும் தகவல்கள் காலை நேர வாழ்த்துக்களுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை; பார்ப்பதும் இல்லை.

அதில் பலருக்கு வருத்தம்!

என்ன செய்வது!

அதற்காக என் இயல்பிலிருந்து விலத்திக் கொள்ள முடியுமா என்ன?

ஆனால் நேற்றய தினம் ஒரு வெளிச்சத்தின் விழுதினைப் போல வந்த இந்த இரண்டு காலை வணக்க செய்திகளும் பொருள் பொதிந்ததாய்; வளம் மிக்கதாய்; சிறியதாய் இருந்தது.

உங்களோடும் அதனைப் பகிரத்தோன்றியது.




உங்கள் கிண்ணங்களும் அன்பாலும் அமைதியாலும் அழகாலும் நிறைவதாக!
வாழ்க்கை நம் கையில் இருக்கும் வரை நாம் எதையும் இழப்பதில்லை; ஆண்டவனின் ஆசீர்வாதம் வீட்டையும் இதயத்தையும் ஆத்மாவையும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.

No comments:

Post a Comment