Saturday, January 10, 2009

நம்மை நாம் கண்டு கொள்ள

STARTTS என்றொரு அமைப்புச் சிட்னியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.அது யுத்த மன உளைச்சலினாலும் சித்திரவதைகளுக்காலும் மீண்டு வந்தவர்களுக்கான சேவைகளை இலவசமாக அரச சார்பாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அதன் சேவையின் ஒரு பகுதியாக அது கடந்த ஆண்டு பல்லின கலாசார மக்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் மக்களுக்கான சேவையை அவர்களுக்கான மொழியில் வழங்குவதற்கான பயிற்சியை வ்ழங்கியிருந்தது.அது"பண்பாட்டு அதிர்ச்சியும் அதனை எதிர் கொள்ளும் வழிகளும்" என்ற தலைப்பில் அமைந்திருந்தது.அதில் தமிழர்கள் சார்பாகக் கலந்து கொண்டவர்களில் நானுமொருத்தி.

பயிற்சி நாளின் இறுதியில் தரப்பட்ட தகவல் தரவு ஒன்று எம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.ஒரு தகவல் வழங்குனராக இருப்பதற்கு தன்னைத்தான் அறிந்து கொள்வது அவசியம் என்று அவ்வமைப்பு கருதுகிறது.

உண்மையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமென்றே கருதுகிறேன்.இதோ அவை,இந்தக் கேள்விகளோடு உண்மையோடும் நேர்மையோடும் இருப்பீர்களாக!

1. நீங்கள் யார் என்று விபரிக்கக் கூடிய 3 சொற்களைத் தருக.

2. உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களைப் பற்றி விபரிக்கும் 3 சொற்களைத் தருக.

3. உங்களிடம் இருக்கும் 3 சிறந்த குணாம்சங்கள் எவை?

4. உங்களிடம் இருக்கும் 3 கூடாத குணாம்சங்கள் எவை?

5. உங்களிடம் அல்லது உங்கள் வாழ்வில் மாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் எவை?

6. முக்கியமானவற்றை வரிசைப்படுத்துக.

சிறந்த உடல் ஆரோக்கியம்
பொருளாதார வளம்
கல்வி
சுதந்திரம்
எனது அந்தரங்கமான விடையங்கள்
மகிழ்ச்சி
நண்பர்கள்
பிரஜா உரிமை
என் சமூகம்
விடயங்களில் வெற்றி காணுதல்
புதிசாலித்தனம்
சுத்தம்
திருமணம்
பிள்ளைகள்
சமயம்
அங்கீகாரம்
ஒருவரை வாழ வைத்தல்
வேறு...........

7. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோள் யாது?

இவற்றுக்கு நீங்கள் உண்மையோடு பதில் அளித்தால் உங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

நன்றி STARTTS

4 comments:

  1. நான் யார் என்ற கேள்விக்கு பதிலை கண்டுபிடிப்பதற்கான ஓர் முயற்ச்சி.
    ஆனாலும் ஒரு குறுகிய வட்டத்தி்ற்குள் நின்று கொண்டு திரும்பி திரும்பி பார்ப்பதாலோ என்னவோ எனக்கு பிடித்தமான ''நானை'' காண முடியவில்லை.
    பரந்த பார்வை வந்தபின்பு மீண்டும் முயற்சிக்கிறேன். இதுபோல் இன்னும் பல தகவல்களை எதிர்பார்கின்றோம்

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூபதி.இது மிக அடிப்படையான தகவல் தான்.ஆனால் ஒரு உருவம் பிடிபட்டிருக்கும் இல்லையா?

    "நான்" என்பதைக் கண்டு பிடிப்பது இலகுவல்ல.ஞானிகள், முனிவர்கள் எல்லாம் வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தேடியது அதைத் தானே.

    நல்லது. மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  3. நல்ல வினாக் கொத்து, உளவியலுடன் உலா வருபவர்களுக்கு மனித சிந்தனையை அறிவதற்கு அருமையான வினாக்கள். தகவல் சேகரிப்பு மட்டும் மனித அறிவாகாது. நாம் அறிந்ததை எவ்வளவு தூரம் பாவித்து பயன் அடைந்து மற்றவர்களையும் அந்த தகவல் சேரச் செய்ய வேண்டுமாம். நல்ல பதிவு.

    ReplyDelete
  4. உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் காரூரன்.

    நான் வலைத்தள உலகுக்குப் புதியவள்.உங்கள் விமர்சனங்களை எனக்கு அறியத்தாருங்கள்.அது என்னை வளர்க்கும்.

    ReplyDelete