Wednesday, January 14, 2009

தைத்திருநாள் வாழ்த்துக்கள்

வலைத்தள நண்பர்கள் எல்லோருக்கும் என் மனம் கனிந்த தமிழர் திரு நாள் நல்வாழ்த்துக்கள் உரியதாகுக!

சஞ்சலமுற்றிருக்கும் உள்ளங்கள் எல்லாம் மன அமைதி பெறுவதாக!

நோய் உடல் உபாதிகளால் அவதியுறும் மனிதர்களுக்கெல்லாம் நம்பிக்கை பிறப்பதாக!

கூடு கலைந்த தாயகக் குருவிகளுக்கெல்லாம் விமோசனம் கிட்டுவதாக!

அன்பானவர்களை இழந்த மனங்களெல்லாம் அவை இயல்பென்று மீள்க!

மக்கள் மனங்களெல்லாம் மன நிறைவால் மகிழ்வெய்துவதாக!

மனிப்பதையும் மன்னிக்கப்படுவதையும் இயற்கையின் இயல்புகளையும் இன் நன் நாளில் உணர்வோமாக!

மனிதர்களாய் வாழ மனிதம் வாழ்வதாக!

கண்ணுக்குப் புலப் படாத தர்மமொன்று எங்கோ வாழ்கிறதென்று நம்பிகை கொள்க!!

2 comments:

  1. //கூடு கலைந்த தாயகக் குருவிகளுக்கெல்லாம் விமோசனம் கிட்டுவதாக!

    அன்பானவர்களை இழந்த மனங்களெல்லாம் அவை இயல்பென்று மீள்க!//

    அருமையான வார்த்தைகள்; உங்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete