Friday, June 26, 2009

நெருடல்

உயிருக்காய்
ஊர் விட்டோடிய போது
கட்டவிழ்க்க மறந்த
பச்சிளங்கன்றும் தாய்ப்பசுவும்
எட்டாத அருகில் நின்ற நினைவும்,

வைரவ மடையில்
மனிதக் காலனின்
கத்தியின் கீழ் மிரண்ட
அப்பாவி ஆட்டின்
அவல முடிவும்
நினைவுக்கு வர

பதறுது மனசு.

உன் நினைவு குறித்த நெருடலோடு!

1 comment:

  1. இப்ப பழையபடி கோவி்ல்களில பலிகொடுக்க வெளிக்கிட்டிட்டினமாம். கேள்விப்பட்டனியளே?

    ReplyDelete