Sunday, June 28, 2009

வல்லாரைச் சம்பல்

தேவையான பொருட்கள்;

கழுவிக் காம்பு நீக்கிய வல்லாரை இலைகள் 2 கைப்பிடி
தயாராக்கப் பட்ட தேங்காய் பூ -ஒரு சிறங்கை
பெரிய வெண்காயம் -பாதி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் -1
நற் சீரகம் - சிறிதளவு
மிளகு - 4-5
தேசிக்காய் - பாதி

செய்முறை:

புதிய வல்லாரை இலைகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.(குறுனலாக அல்ல). அதே போல வெண்காயத்தையும் பச்சை மிளகாயையும் வெட்டிக் கொள்ளவும்.இவற்றோடு மிளகு, சீரகம் என்பவற்றையும் தேங்காய்பூவையும் போட்டு மிக்சியில் உங்களுக்கு விருப்பமான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.சம்பல் பதம் சிறப்பாக இருக்கும். இறக்கிய பின் தேசிக்காய் புளி விடவும்.

5 நிமிடத்தில் செய்து விடத்தக்க இப்பாகம் மிகச் சுவை நிறைந்ததும் சத்துக்கள் சேர்ந்ததும் மலிவானதுமாகும்.

சோறோடு சாப்பிடலாம்.செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.இது போல் முருங்கையிலை வறையும் சோறோடு சாப்பிடச் சுவையானது.

7 comments:

  1. //
    அக்ஷய பாத்ரம்

    "இது நான் கையால் அள்ளிய கடல்"
    //

    அப்ப உது மணிபல்லவத்தில கிடைக்கேல்லையே?

    ReplyDelete
  2. நான் இருக்கிற இடத்திலை வல்லாரை கிடைக்கிறது முயல் கொம்பு. ஆனா செய்முறைக்கு நன்றி :)

    ReplyDelete
  3. இங்கு அநேகமாக தமிழர்களின்,சீனர்களின் கொல்லைப் புறங்களில் மிகச் சாதாரணமாக இது வளர்கிறது.நண்பர்களின் வீடுகளுக்குப் போகின்ற நேரங்களிலும் வீட்டுக்கு வருகின்ற பொழுதுகளிலும் இவை மிகத் தாராளமாகப் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.

    முருங்கை இலைகள் பிஜித் தீவிலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் தமிழ் கடைகளுக்கு வருகின்றன.குயின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து செழிப்பான முருங்கைக் காய்கள் வெப்ப காலங்களில் வருகின்றன.

    கனடாவில் தான் எல்லா தமிழ் மரக்கறி வகைகளும் கிடைக்கின்றன என்று சொல்கிறார்களே?

    ReplyDelete
  4. ரொரண்டோவிலை அனைத்தும் கிடைக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் நான் ரொரண்டோவில் இல்லை.

    ReplyDelete
  5. அட மக்கா....
    வாயருதே.....
    கருவாட்டு பொரியல் செய்முறை இருந்தலும் போடு பிள்ள...
    நல்லா சமப்பா போல

    ReplyDelete