Monday, August 22, 2011

இளந்தமிழன்

என் சின்னஞ் சிறிய உலகத்தில் என்னைக் காண வரும் தோழமையுள்ள நண்பர்களே!

எல்லோரும் நலம் தானே? உங்களோடு பேச உரிமையோடு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக என் வலைப்பூவுக்குள் அநேக குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. நண்பர்களுடய பின்னூட்டங்கள் காணாமல் போவதும் எழுதும் போது அலைக்கழிவுகள் நிகழ்வதும் எழுதி முடிகின்ற கட்டத்தில் அவை முழுவதுமாக இல்லாது போய் விடுவதும் அவற்றை மீளக் கட்டியெழுப்புவதுமாக அது மிகச் சிரமமான காரியமாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட எரிச்சலூட்டுகின்ற விடயம் என் நண்பர்களுடய பின்னூட்டங்கள் எனக்குத் தெரியாமலே களவாடப் படுவதோ அபகரிக்கப் படுவதோ தான்.

நான் ஒரு போதும் என் நண்பர்களுடய அல்லது இங்கு வரும் எவருடயதும் - அது சாதகமானதோ பாதகமானதோ வருகின்ற எந்தப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்காமல் விடுவதேயில்லை என்பதை என் பக்கம் வரும் உறவுகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்வார்களாக!

இங்கு மட்டும் என்றில்லை. என் மின் தபாலுக்கும் இதே நிலை தான்.என் தபால் முகவரியில் இருந்து எனக்கே தபால் வருகிறது. இப்படி மேலும் எத்தனை பேருக்குப் போகிறது என்பதையும் நானறியேன்.

எத்தனையோ தரம் கணணி விற்பன்னர்களைக் கண்டும் கணணியை மாற்றியும் சேவை வழங்குனரை மாற்றியும் கடவுச் சொல்லை மாற்றியும் பார்த்தாயிற்று.

பலவிதமான நோயாளிகளையும் கூட நாம் சகித்தும் கடந்தும் செல்லவேண்டி இருக்கிறது இந்தக் கணணி உலகத்தில்!

அதனால் சில மாதங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை நிறுத்தி வைத்திருக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் புதிதாக ஒரு மின் தபால் முகவரி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறேன்.தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சொல்ல ஏதேனும் இருந்தால் அந்த முகவரியில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.முகவரி; may22nd11@gmail.com

நன்றி.

அது நிற்க!

.....................................................................................


என் தமிழ் பாடசாலை மானவர்களின் அனுபவங்களை அவர்களின் ஆற்றலை வளர்க்கும் முகமாக அவர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற பெயரில் அவர்களுக்கான வலைப் பூ ஒன்றைத் தனிப்பட்ட முறையில் அமைத்திருக்கிறேன்.அது என் வலைப்பூவின் அருகில் இருக்கின்ற ’சுவைக்க....’ என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.தயவு கூர்ந்து இங்கு வருகின்ற யாரும் கூடவே நேரமும் இருந்தால் அங்கும் சென்று,என் மானவர்களின் ஆக்கங்களைப் பார்த்து, அவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தை தூண்ட முன்வருமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

  1. எனக்கும் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடுவதில் சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. சிலருக்கு name/url பயன்படுத்தி பின்னூட்டம் இடுகிறேன். சிலருக்கு AIM-ம் மூலமாக பின்னூட்டமிடுகிறேன்.பலருக்கு நான் இட்டாலும் அவர்கள் படிக்கமுடிவதில்லை... என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

    -சே.குமார்.
    மனசு

    ReplyDelete
  2. நன்றி குமார்.கரிசனையோடு வந்து தகவல் தந்தமைக்கு.

    அப்படியாக இருக்குமென்றால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும் எனக்கு.

    பார்ப்போம் தோழா!

    ReplyDelete