Tuesday, June 25, 2013

வன்னி ’மண்’ ணின் விளைச்சல் :புதியவன்

( சற்றே ஒரு இடக்கு முடக்கான பதிவாக இது இருப்பது ஒரு நெருடலாகவே இருக்கிறது. ஏதோ ஒரு விதமான மனோ வேகத்தில் உடனடியாக எழுதி பதிவிடுகிறேன். உங்கள் வெளிப்படையான விமர்சனங்களை எனக்குத் தாருங்கள் நண்பர்களே! அதட்டியோ தட்டியோ கேட்க உங்களுக்கில்லாத உரிமையா? )

பொதுவாக தமிழ் சினிமா மீது எனக்கு எந்த விதமான மோகமும் கிடையாது..

சினிமா ரசிகர்கள் யாரும் அதைப்பற்றி வியாகூலம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் நான் ஒருத்தி பார்க்காமல் விட்டதால் தமிழ் சினிமா ஒன்றும் நட்டமடைந்து விடப் போவதில்லை.

எனக்கு ஏன் இந்த கொலைவெறி என்று நீங்கள் நினைத்தால் அதற்குச் சொல்லிக் கொள்ள எனக்கொரு காரணம் இருக்கிறது. மக்களை மடையர்கள் ஆக்குகிறது தமிழ் சினிமா. மடையர்களாக தொடர்ந்து வைத்திருப்பதிலும் பெரும் முனைப்புக் காட்டி வருகிறது; மேலும் ஒரு மாயைக்குள்ளும் கனவுக்குள்ளும் தொடர்ந்து மயக்கி மக்களை வைத்திருந்த படி அதில் பணம் சம்பாதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறது அது.

பெண்களை அது நடத்துகிற பாங்கும் கவர்ச்சி பாவைகளாய் அவர்களை உலகுக்கு படம்போட்டுக் காட்டி கவர்ச்சியை விற்றுக் காசாக்கும் அதன் வடிவமும் விபச்சாரத்துக்கு சற்றேனும் குறைந்ததல்ல. வன்முறையும் சண்டைக்காட்சிகளும் ஒப்பனைகளும் உண்மைத்தன்மைக்கு சற்றேனும் ஏற்புடையவையுமல்ல. தேவையற்ற பாடல்காட்சிகளாலும் சண்டை வன்முறைக் காட்சிகளாலும் பெண்களை ஆடவைத்து ரசிக்கும் ஆண் வக்கிரத்துக்கு வடிகாலாகும் சினிமா பாணிகளாலும் வெறுப்பேத்தி வெறுப்பேத்தி என் பொன்னான நேரத்தை சேர்த்து வேறு வழிகளில் பயனுடய போக்கில் செலவளிக்க வைத்தமைக்கு இந்திய சினிமாவுக்கு பெரும் பங்குண்டு.

கோவிக்காதைங்கோ. நல்ல படங்களே வருவதில்லையா என தமிழ் சினிமா ரசிகர்கள் என்னோடு சண்டைக்கு வரக்கூடும். வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. வருவதில் எத்தனை நல்லவை: யதார்த்த தன்மை; கலைத்தன்மை வாய்ந்தவை என்பது தான் என் கேள்வி. இந்த நல்லதொன்றைக் கண்டடைய எத்தனை படங்களைப் பணம் செலவளித்துப் பார்த்து அதை விட அதிகமான நேரத்தை விரயமாக்கி அந்த நரக சோதனையூடாக சிறந்த அந்த மணி நேரங்களை  கண்டடைய வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா திருந்த வேண்டும். அல்லது தமிழ் ரசிகர்கள் திருந்த வேண்டும். இரண்டும் சாத்தியமில்லை என்பதால் நான் ’திருந்தி’ விட்டேன்.

ஏதோ ஒரு வேலை வெளியில் நான் தொலைந்திருந்த நேரம் கடந்த மாதம் எனக்கொரு தொலைபேசி அழைப்பு.



நான் சண்பேசுகிறேன்.
எந்த சண்?
நான் தான் கனகராயன் குளம் சண்.

ஒரு கணம் என் 16 வயதினுள் போக அந்த சொல் போதுமாக இருந்தது.

சண் - எங்கள் G.C.E.A/L வகுப்பில் மொத்தம் இருந்த 12 பேருக்குள் முதன்மையான மாணவன். நகைச்சுவையாலும் சிறந்த பேச்சாற்றலாலும் இயல்பாய் விளைந்த கெட்டித்தனத்தாலும் வகுப்பில் எல்லோரின் பிரியத்துக்கும் பாத்திரமானவனாய் இருந்தவன்.

வகுப்பறை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மேசை கதிரை அடுக்கப்பட்டிருக்கும். நடுவே ஆசிரியர் நடந்து சென்று தன் மேசை கதிரையை சென்றடைவதற்கான வழி விடப்பட்டிருக்கும். இரண்டாவது வரிசையின் வலது கை பக்க முதல் மேசை கதிரை என்னுடயது. இரண்டாவது வரிசையின் இடது கைப்பக்க முதல் மேசை கதிரை சண் ணிற்கானது. அருகருகே எனினும் நடுவே ஆசிரியருக்கான பாதை.

எங்களுக்கு அப்போது பிரத்தியேக வகுப்புகளுக்கு போக வேண்டிய தேவை எதுவும் இருந்திருக்கவில்லை. அது பற்றி படலைக் காரன் ஒரு காவியம் படைத்திருக்கிறார் தன் படலைப் பதிவொன்றில். நல்ல வேளையாக அந்தப் ’பண்பாடு’ நம்மை அண்டவில்லை. நமக்கு வாய்த்த ஆசிரியர்கள் அவ்வாறானவர்கள். பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து முதல் முதல் புது உற்சாகத்தோடு படிப்பிக்க வந்தவர்கள். திருமணம் ஆகாத கன்னிகைகள்.சுபத்திரா ரீச்சர், சிவனேஸ் ரீச்சர், லோகேஸ் ரீச்சர் என நீளும் அந்தப் பட்டியல்.

பாடசாலை விட்டு வீடு செல்ல பஸ் எதுவும் நேரத்துக்கு வந்து சேராது. பிரமச்சாரிய ஆசிரியர்கள் வீதியோரம் வந்து நின்று எல்லோரையும் பஸ் ஏற்றி அனுப்பி வைக்க யாரிடம் இருந்தும் எதையும் அறவிட்டதில்லை. செலவேதும் இல்லாமல் எங்கள் வன்னிப் பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகம் போனார்கள். யாழ் மண் பெற்றெடுத்த புதல்வர்களிலும் பார்க்க முன்னணியிலும் திகழ்ந்தார்கள் என்று நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.


மகிழ்ச்சியும் நகைச்சுவையும் கற்றலும் வயதும் பருவமும் பள்ளிச் சீருடைகளுமாக உலாவந்த காலங்கள் அவை. காலை நேர இடைவேளையில் கிணற்றடியைச் சுற்றி தண்ணீர் குடிக்க நிற்கும் பிள்ளைகளுக்கு தண்ணீர் அள்ளி ஊற்றிவிடும் மேல்வகுப்பு மாணவர்களுக்கு அதை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. உயர் வகுப்பு மானவர்கள் கலந்து பேசி சிரித்து அரட்டையடித்து படித்த பொழுதுகளை விரகமாகவோ விரசமாகவோ விகாரமாகவோ எவரும் பார்த்ததில்லை. பள்ளிக் கிணற்றுக்குள் பிள்ளை விழ தூக்குவதும்; சரஸ்வதிப்பூசைககு பாடசாலை விழாக்கோலம் பூணுவதும்; ஒளிவிழா,கலை விழாக்களாலும் நிறைந்த பள்ளிக் கூடம் அது. சரஸ்வதிப் பூசைக்கு செவ்வரத்தம் பூவில் மாலை கட்டிப் போடுவாள் ஒரு கிறீஸ்தவ மாணவி. அவர்கள் தேவாலயம் செல்ல பிள்ளைகளை ஒழுங்காக்கி அனுப்புவாள் ஒரு இந்து மாணவி.

 தமிழ் மன்றம், இந்து மா மன்றம், கிறீஸ்தவ மன்றங்களும் அடிக்கடி கூடின. பொறுப்பான ஆசிரியர்களின் வழிகாட்டலில் கையெழுத்துப் பிரதிகளும் வந்ததாக ஞாபகம்.

லோகசிங்கம் அதிபரை யார் மறக்க முடியும்?

எங்கள் பள்ளிக்கூட அழகு அது. அது போகட்டும்.

அப்பாவி பாமர சனங்களால் நிறைஞ்ச ஊர் அது. குளங்களைச் சுற்றிய குடிமனைகளும் குளம் என்று முடியும் பெயர்களை கொண்ட ஊர்களுமான வன்னிக் குடிகளுக்கு விவசாயமும் மந்தை மேய்ப்பும் பிரதான தொழில் துறை. அவர்களின் பாமரப் புன்னகையையும் கடின உழைப்பையும் பிள்ளைகளைப் படிப்பிக்கும் ஆர்வத்தையும் அவர்கள் முகங்களில் எப்போதும் காணலாம்.

கிராமத்துக்கு ஓடும் மனதை நிறுத்தி மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன்.

அப்படி இருந்த ஓர் நாளில் பாடசாலை வந்து போன சண் அவனது வீட்டில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஓரிரவில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்

மறு நாள் செய்தி பாடசாலைக்கு வந்தது.

எங்கள் வகுப்பில் யோகராஜா என்றொரு மாணவன் மிகத் தத்துரூபமாக சீர்காழி கோவிந்த ராஜனின் பாடல்களைப் பாடத்தக்க வல்லமை பெற்றிருந்த கிறீஸ்தவன். எப்போதும் நம் வகுப்பில்”நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ....” என்ற பாடலை அணுவளவும் பிசகாமல் ஒரே பாடுபவன்.

அன்றும் பாடினான். அவன் பாடும் போது அது ஏனோ நம் வகுப்புக்கு பெரும் துக்கத்தை வரவைத்த நிகழ்வாக இருந்தது. அதன் பின் அவன் பாடி நாங்கள் கேட்கவில்லை.

மறுநாளும் விடிந்தது. அதற்கடுத்த நாளும் விடிந்தது. காலங்கள் உருண்டோட அதன் போக்கில் நான் யாழ்பல்கலைக்கழகம் சென்று சேர்ந்தேன். சிலர் ஆசிரியர்கள் ஆனார்கள், சிலர் திருமணம் முடித்துக் கொண்டார்கள், சிலர் தலைமறைவானார்கள். மூன்றாவது வருடத்தில் நான் இருந்தபோது சண் விடுதலையானான் என்ற செய்தியும் லண்டன் பயணமானான் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.

அதன் பின் எந்தத் தகவலும் இல்லை.

இப்போது 50களை நெருங்குகின்ற இந்தத் தருணத்தில் சண்ணின் குரல்.அதுவும் சிட்னியில்.

ஒரு தெய்வீக தருணம் அது.

வாடா என்பதா வா என்பதா வாங்கோ என்பதா?

எனினும் வீட்ட வாங்கோ சண் என்றேன். எனினும் நான் நல்ல குண்டாகிப் போனேன். தலையெல்லாம் நரைச்சுப் போச்சு  இனி சந்திக்கிறதுக்கு முன்னம் தலைக்கு கொஞ்சம் டை அடிக்க வேணும் என்றேன். எனக்குள் ஒரு 16 வயதுக் குதூகலம் நிறைந்து விட்டிருந்தது.

உமக்காவது பறவாயில்லை டையடிக்க தலையில மயிர் இருக்கு. எனக்கு டையடிக்கவே தலையில ஒரு சொட்டு மயிருமில்ல என்ற போது அவன் இயல்பு மாறாது இருக்கிறான் என்றொரு நின்மதி பிறந்தது.

மகிழ்ச்சியாகவும் இருந்தது. வாழ்க்கையின் அனுபவங்கள் எல்லோரையும் அவர்களின் இயல்பு நிலையில் இருக்க விடுவதில்லையே! அவ்வாறு இருக்க முடிந்தவர்கள் பாக்கிய சாலிகள்.

அதில் அவன் ஒருவன்.

வீட்டுக்கு வந்தான் அந்த சூர்ய புத்ரன். பிரகாசமான ”புதியவன்”!

அதே மகிழ்ச்சி புன்னகை,புத்துணர்ச்சி, நம்பிக்கை, எளிமை, தலைமைத்துவப் பண்பு எல்லாவற்றுக்கும் மேலான வெளிப்படையாக உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் மனசு!

நீங்கள் எப்போதேனும் ஒருவர் அருகில் இருந்தால் ஒரு பாதுகாப்புணர்வை - என்னை எவரும் எதும் செய்து விட முடியாது என்ற ஒரு இறுமாப்பான மனத்தைரியத்தைப் பெற்றதுண்டா?

இந்த மனிதன் உங்களுக்கு அருகில் நிற்கும் போது நீங்கள் அதை உணர முடியும். முன்னர் மோகன் அண்ணாவிடம் மாத்திரம் கண்டு வியந்த ஒரு அதிசயம் அது.

முதலில் ஒருவன் மனிதனாய் நேர்மையாய் உண்மையுள்ளவனாய் வெளிப்படையானவனாய் ஆரோக்கியமான குண இயல்புகளைப் பெற்றவனாய் எளிமையானவனாய் இருக்க வேண்டும்.அதற்குப் பிறகு தான் அவனது திறமை என் கண்ணுக்குப் படும்.

என்னைப் பொறுத்தவரை இம்மனிதன் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். இதனை எழுதுகின்ற போது இவன் என் பால்ய நண்பன் என்பதால் பக்க சார்பாக எண்ணம் ஓடுகிறதோ என்று என்னை விமர்சித்துப் பார்த்தேன்.

இல்லை நண்பர்களே!

கதைகள் பேசத்தொடங்கினோம். சுமார் 30 வருடக் கதைகள் இருந்தன. சொல்ல.

சிறையிருந்த வரலாறும் நடந்த சித்திரவதைகளும், அதற்குள் இருந்த ஒருவரிடம் அம்னாஸ்டி இன்ரநஷனல் மாதம் ஒரு தடவை சிறையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சிகரட்களை சிறை ஊழியர்களுக்கு கொடுத்து பேனா வாங்கி சிகரட் அட்டைப்பெட்டியை விரித்து அதில் நோட்ஸ் எடுத்து ஆங்கிலம் படித்தது பற்றியும்;  பின்னர் அண்ணனின் தயவால் வெளிவந்து லண்டன் போனது பற்றியும்  முதல் வருடம் சுப்பர்மார்க்கட்டுகளில் நின்று இரவு பகலாய் உழைத்து வந்த கடன் அடைத்தது பற்றியும்; அதன் பின்னரே தன் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடிந்தது என்பது பற்றியும்; படிக்க ஆர்வமான துறைகள் வேறு வேறு இருந்த போதும் அங்கு தனக்கிருந்த ஆங்கில அறிவுக்கு பொருத்தமான பாடத்திட்டமாக கணக்கியலே இருந்ததால் அதில் வேலை செய்த படியே படித்து பாட்டம் பெற்றது பற்றியும்: தன்னுடய காதல் திருமணம் பற்றியும் தன் இரண்டு பெண் பிள்ளைகள் பற்றியும் எந்த வித அலட்டல்களும் மிகைப்படுத்தல்களும் இன்றி சொன்னான்.

என் மனதில் அவன் உயர்ந்து கொண்டே போனான்.

இந்த விடா முயற்சி; வென்று காட்ட அவன் உழைத்த உழைப்பு; கண்ட வெற்றிகள்.....மழை கார் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது அல்லவா? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்பதற்கு இந்த மனிதன் ஒரு சாட்சி.

’பின்ன எப்பிடி இஞ்சாலப் பக்கம்?’ இது என் குடும்பத்தாரின் ஆர்வம் மிக்க கேள்வி.

நல்லா உழைச்சன். குடும்பத்துக்கு நல்ல அடித்தளத்தை போட்டிட்டன். இனி நான் என்ர விருப்பத்த செய்யப் போறன் என்று தான் தன்னை அடையாளம் கண்டு அதற்கு உழைக்கப் போன தகவல்களை சொல்லத் தொடங்கினான்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களால் வெளியிடப்பட்டு வந்த சஞ்சிகைகள் சொற்ப நாளிலேயே உயிர் விட்டு விடுவதால் சினிமா தான் தன் கருத்துக்களைச் சொல்ல ஒரு சிறந்த வழி என முடிவெடுத்து, மிக வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு லண்டனில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக தன்னை இணைத்துக் கொண்டாராம். ஏனெனில் அப்போது தான் தனக்கு, தனக்கு பிடித்த துறையில் படிக்க நேரம் இருக்கும் என்பதால் தான் அந்த முடிவை மேற்கொண்டதாகச் சொன்னான்.

அந்த விரிவுரையாளர் பணியைச் செய்த படி திரைப்படத்துறையில் முதுகலைமானிப் பட்டத்தை பெற்று படம் எடுக்க ஆரம்பித்ததாகச் சொன்னான்.

அவனால் எடுட்க்கப்பட்ட படம் தான் “ மண்”

மறு நாள் படத்தைத் தந்து பார் என்றான். எனக்கு ஒரு விதமான நோய் இருக்கிறது. ஒன்றை அது எதுவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு விதமான மனநிலை வாய்க்க வேண்டும்.ஆறுதலான ஒரு நேரம் கிட்ட வேண்டும்.

ஒரு விதமான ’ஒற்றைறோட்டு’ நான்.

எனக்கு இன்று தான் அதற்கான தருணம் வாய்த்திருந்தது.

ஈழத்தின் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பம்.”மண்” புதிய காலடி!!

நல்ல வேளையாக இந்திய பாதிப்புகள் எதுவும் நேர்ந்து விடாமல் யதார்த்தம் ததும்பத் ததும்பப் படமாக்கப் பட்ட சினிமா.  இயல்பு நிலை பேசும் ஒரு கதை. பாத்திரப்படைப்புகள் நடிப்பாற்றல், திரைப்பட பின்னணி, காட்சியமைப்பு, யதார்த்த தோற்றம், பேச்சு வாசனை, உச்சரிப்புத் தெளிவு, ஈழ மண் வாசம், திரை கதை வசனங்கள் சொல்லி விட்டு போகும் சில வசனங்கள் சாட்டையடியாக வந்து விழும் பாங்கு, பொருத்தமான கருத்தமைவுடனான சிறந்த பாடல்கள், விரசங்கள் அற்ற காட்சிகள்,  ... என எல்லாம் ஈழத்தமிழனின் தனித்துவம் சொல்லிப் போயின வெளிநாட்டின் தொழில் நுட்பத்தோடு.

இந்தப் படத்தைப் பார்த்த போது எனக்கு இரண்டு விடயங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

1. சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களில் வரும் அந்த தனித்துவமான துல்லியம் /தத்ரூபம் மற்றும் தரம் / நுட்ப பார்வை!

2. வ.ஐ.செ.ஜெயபாலனின் கவிதைகள்.பாலியாறும் வன்னி மண்ணும் அதில் முகிழ்ந்து நிற்கும் வன்னி மண்ணின் வண்ண எழில்.

அது நிச்சயமாக யாழ்ப்பாணத்துக்கும்  புதிது!

வன்னி மண்ணின் விளைச்சல் இந்தப் புதியவன். வன்னி மண்ணுக்கு இந்த ஒரு விதை நெல் மூட்டை போதும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

வன்னி மண்ணில் மீண்டும் நெற்கதிர்கள் அசைந்தாடும்

புது நாற்றை  நட்டுச் செல்வாள் வெளிநாட்டுக் வன்னிச் சுறுக்கி. டிஜிட்டல் வேல்ட்டில் வன்னி மண் தன் வரலாற்றை கலையால் எழுதிச் செல்ல காலம் பூராய் நிலைத்திருக்கும் பண்னாடர வன்னியனின் தீரம்!



அது போதும். “மண் வாழும்”

இதை என எழுத நினைக்க இப்போது வ.ஐ. செ. ஜெயபாலன் எழுதிய கவிதை மனதில் நிழலாடிப் போகிறது.

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் வ.ஐ. செ.ஜெயபாலன்.

பாலி ஆற்றின் கரையில் இருந்தேன்
மணல் மேடுகளில்
உயிர் வற்றும் நாணல்கள்.
காற்றில் பெருமூச்சைக் கலக்கும்
இரு மருங்கிலும்
பருத்து முறுகி தொந்தி வைத்த
கிழட்டு மருத மரங்கள்
கீழே புதியவை.

கூனிக் கூனி கூசிக் கூசி
ஏழைப்பட்டதோர் நிலக்கிழான் தனது
குலத்தொரு வீதியில் நடைமெலிதல் போல
கோடை தின்ற ஆறு நடந்தது
நாணற் புதர்களை நக்கி நனைத்தது
அல்லிக் கொடிகளின் கிழங்குகளுக்கு
நம்பிக்கை தந்தது
தூற்றி அகலும் பறவையைப் பார்த்து
மீண்டும் மாரியில் வருக என்றது
மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக் குரைத்தது
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறைவாகி
வாழ்வுக்காகப் போரிடச் சொன்னது.
............
(எனத் தொடரும் அப்பாடல்)
(1986ம் ஆண்டு எழுதியது. நன்றி: நூலகம்)

மேலும் சில கவிதைகள்......

பாலி ஆறு நகர்கிறது

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.
1968
* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.




இளவேனிலும் உழவனும்


காட்டை வகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.

தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது:
இதயத்தைக் கொள்ளையிட
வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையே தூதனப்பி
கண்சிமிட்டும்.

அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.

ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.

-1970


இப்படத்தை பார்க்கும் தோறும் வன்னியின் அந்த வளமும் வாழ்க்கை முறையும் கவிதைகளைப் போல வழியெல்லாம் துணை வந்தது.

என் அன்புக்குரிய இந்திய நெஞ்சங்களே! வருகிற மாதம் அல்லது அதைத்தொடர்ந்த மாதம் புதியவன் என்ற புனைபெயரில் இயங்கும் சண்ணின் புதிய திரைப்படம் “யாவும் வசப்படும்” இந்தியாவில் ஒரே சமயம் பல திரையரங்குகளில்  திரையிடப்பட இருக்கிறது. இங்கு வருகிற 6ம் திகதி திரையிட ஏற்பாடாகி இருக்கிறது.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

முடிந்தால் படம் பார்த்து கருத்துச் சொல்லுங்கள்.

நானும் பார்ப்பேன்.



Monday, June 24, 2013

இலக்கிய சந்திப்பு - 13



இம்மாதமும் வழமை போல இறுதி ஞாயிறன்று ( 30.6.13 மாலை 5.30 - 6.30 வரை) யாழ் நிகழ்வரங்கில் நம் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இம்மாதம் நம் அதிதியாக சென்ற மாதம் வந்து கலந்து கொண்ட குறும்படங்கள் பலவற்றை இயக்கிய திரு. செல்வன் அவர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் உலகில் குறும்படங்களுக்கான இடம் அதன் நடைமுறை சாத்தியப்பாடுகள், தமிழ் சமூகத்தில் அதன் இருப்பு என்பது பற்றி பல விடயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். 

மேலும் வருகிற சந்திப்பில் வாசிக்கும் பாரம்பரியத்தை பேணும் முகமாகவும் சிறந்த புத்தகங்களை அறிமுகப்படுத்து முகமாகவும் " புத்தகப் பேரேடு” ஒன்றை அடுத்த சந்திப்பில் அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணுகிறோம்.அங்கத்தவர்கள் நீங்கள் படித்ததில் அதி சிறந்தது என எண்ணும் புத்தகங்களை அல்லது நீங்கள் எழுதிய புத்தகங்களை பேரேட்டில் பதிந்து, இங்குள்ள அங்கத்தவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டுத் தன்மை பற்றிச் சொல்லி பரிமாறி செல்ல அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இலக்கிய சந்திப்பு சம்பந்தமான மேலதிக விபரங்கள் யாவும் http://uyarthinai.wordpress.com/ என்ற வலைப்பதிவில் பதிவேற்றப் படுகின்றன என்ற தகவலையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இலக்கிய ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறது உயர்திணை.

Friday, June 14, 2013

பாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்

சுமார் 35, 40 வருடங்களுக்கு முன்னர் பாலர்களின் பள்ளியெழுச்சியோடு கோபால் பல்பொடிக்கு ஒரு தவிர்க்க முடியாத தொடர்பிருக்கும்.காலை எழுந்தவுடன் பல்லினைத் துலக்கும் கோபால் பல்பொடியினால் பல்துலக்குதல் அவர்களின் நாளாந்த கடமைகளில் ஒன்று.அது இளம் றோஸ் வண்ணத்தில் சற்றே இனிப்புச் சுவை சேர்த்த பல்துலக்கும் தூள்.உமிக்கரியினால் உண்டாக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.



இப் பல்பொடி வருவதற்கு முன்னர் உமியினை எரித்து அதனை ஒரு கொள்கலனில் போட்டு வைத்து அதனைப் பல்துலக்கப் பயன் படுத்தியது நம் முன்னோரின் தொழில் ரகசியம். அதற்கும் முன்னர் கரித்துண்டுகளும் பல்துலக்கப் பயன் பட்டதாக அறிகிறோம்.

இவற்றினால் பல்துலக்கி பாடசாலைக்கு புறப்பட்ட பின் கொண்டு செல்லும் பையில் ஒரு சிலேட்டும் சிலேட் பென்சிலும் இருக்கும்.அது எப்படி ஆக்கப் பட்டது என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது. ஆனாலும் அது உடையத்தக்க கறுப்பு வண்ண மரச்சட்டங்கள் நாற்புறமும் பொருத்திய ஒரு தட்டு வடிவம். அதற்கெனக் குறிப்பிட்ட பென்சிலும் இருக்கிறது. அழித்து எழுதக் கூடியது. அதுவும் ஒரு சிறுமியின் படம் போட்ட பாலர் போதினியும் புத்தகப் பையினுள் இருக்கப் பாலர்கள் பாடசாலைக்குப் புறப்படுவார்கள்.



சற்றே வளர்ந்த முதலாம் இரண்டாம் வகுப்புக்குப் போகிற பாலர்களாக இருந்தால் ஒற்றைறூள், இரட்டை றூள், நாலுறூள், சதுரறூள் கொப்பிகள் திருத்தமான எழுத்து வடிவத்தைத் தீர்மானிப்பதற்காகப் புளக்கத்தில் இருந்தன.

அரிச்சுவடியும் வாய்ப்பாடும் அதாவது எண்ணும் எழுத்தும் பாடமாக்கச் சொல்லிப் போதிக்கப் பட்டன.பனையோலையைச் சீவி வாரி பதப்படுத்தி அதில் தெளிவான தமிழ் அகர வரிசை எழுதப் பட்டிருக்கும்.மறு பக்கம் 1 - 9 வரையான எண்கள் பதியப் பட்டிருக்கும்.



அதில் ஒரு சுபமுகூர்த்தத்தில் சரஸ்வதிப் பூசையின் கடசி நாள் விஜயதசமி அன்று கோயிலிலோ பாடசாலையிலோ ஒரு குருவானவரால் அரிசியில் எழுதி கற்கண்டு வாங்கிய தருணத்தில் இருந்து அந்த ஏடு கையோடு வரும். பின்னர் அவை மட்டைகளிலும் புத்தகங்களின் பின் புறங்களிலும் இடம் பெற இவற்றின் முக்கியத்துவம் குறைந்து போயிற்று.

பெரும்பாலான பாடங்கள் பாடமாக்கவே சொல்லித் தரப் பட்டன. குறிப்பாக மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், 1 - 16 வரையான வாய் பாடுகள் கட்டாயமாகப் பாடமாக வேண்டியவையாக இருந்தன.கணக்குப் பாடம் குறிப்பாக கூட்டல் கழித்தல் என்பன விரல்களால் மடித்து எண்னவும் மனதில் வைத்து கூட்டிக் கழிக்கவும் சொல்லித் தரப்பட்டன.



பள்ளிக் கூடப் பைகளும் தண்னீர் போத்தலும் ஆடல் பாடலும் மர நிழலில் விளையாட்டும் பாலர்களின் சந்தோஷத்துக்குரிய பகுதிகள். விளையாட்டுகள் பெரும்பாலானவை ஓடிப்பிடித்து, ஒழிச்சுப் பிடிச்சு, கண்கட்டி விளையாட்டு, மாபிள் அடித்தல், காகிதக் கப்பல் விடுதல், எவடம் எவடம் புளியடி புளியடி போன்ற விளையாட்டுகள் அவர்களிடம் பிரபலம் பெற்றிருந்தன.



நேர்சரி றையம் என்று சொல்லக் கூடிய பாலர்களின் பாடல்களில் வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது  பார்,பறக்குது பார், அழகான செட்டைகள் அழகான செட்டைகள் அடிக்குது பார் அடிக்குது பார் .... பாட்டும் புள்ளிப் புள்ளி மானே துள்ளித் துள்ளி ஓடுறாய் அள்ளி இந்தப் புள்ளியை யார் உனக்கு தந்தது என்ற பாடலும் பிரபலம் பெற்றிருந்தது.

இன்று கால மாற்றங்கள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பல விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துவது போல இப்பாலர்களின் வாழ்வு முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்பொடி இல்லை. அதற்குப் பதிலாக பற்பசையும் பற்தூரிகையும் வந்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன. பற்தூரிகையும் பற்ரறியில் இயங்குவனவாக நவீன வடிவம் கொண்டு விட்டன. பிள்ளைகள் தொலைக்காட்சியில் காட்டூன் பார்த்து பள்ளிக்குப் போகிறார்கள்.பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் பொருட்கள் வந்து விட்டன. பாடமாக்க வேண்டிய தேவைகள் அற்றுப் போய் அவற்றைக்  கல்குலேற்றர்களும் கணணிகளும் செய்கின்றன. விளையாட்டுக்களும் கணணியூடாகவே நடைபெறுகின்றன. ஆங்கிலப் பாடல்களைச் சொல்லிக் காட்டும் பாலகர்களே இப்போது அதிகம்.

இதனால் நட்பு அன்னியோன்னியம்,உடல் ஆரோக்கியம்,பகிர்ந்து கொள்ளும் இயல்பு, வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம், இவற்றினால் ஏற்படும் குண இயல்பு என்பன இன்னொரு தளத்தை அடைந்திருக்கிறது.

ஒரு மூன்று வயதுப் பாலகன் மிகச் சரியாக கைத் தொலைபேசியில் படம் எடுக்க கற்றுக் கொண்டிருக்கிறான். ஐபாட்டில் கூகுளுக்குப் போய் தனக்குப் பிடித்த படத்தை கண்டடைகிறான்.சுற்றி வர இருப்பவர்களை புறக்கணித்து பசிதாகம் மறந்து கொபியூட்டர் விளையாட்டில் அல்லது காட்டூன் சித்திரத்தில் மூழ்கிப் போய் விட விரும்பும் சிறார்கள் இன்று அதிகம். மனித சகவாசத்தை விட இந்த டிஜிட்டல் கருவிகள் அவர்களின் சிந்தனைப் போக்கிலும் ஆழுமையிலும் அதிகம் தாக்கத்தைச் செலுத்துகின்றன

நாம் வாழும் காலத்தில் நாம் கண் முன்னால் கண்ட மாற்றங்கள் இவை!


Tuesday, June 11, 2013

யாரோ சொன்னார்கள்




Death asked Life :Why does everyone love you and hate me.
Life replied :
Because I am a beautiful Lie and you are a painful Truth










Temple is a 6 letter word
Church is a 6 letter word
Mosque is also a 6 letter word
Geeta is a 5 letter word
Bible is a 5 letter word
Quran is also a 5 letter word










A Lovely Logic for a beautiful Life:
Never try to maintain relations in your life
Just try to maintain life in your relations










Always welcome the problems
Because problems give you dual advice
First, you know how to solve it
Second, you know how to avoid it in future




3 stages of Life:
Teen Age – Has time; energy – But no Money
Working Age – Has Money; Energy – But No Time
Old Age – Has Money; Time – But No Energy







We are very good Lawyers for our mistakes
Very good Judges for other’s mistakes




World always say – Find good people and leave bad ones.
But I say, Find the good in people and ignore the bad in them
Because No one is born perfect




A fantastic sentence written on every Japanese bus stop.
Only buses will stop here – Not your time
So Keep walking towards your goal




Negative Thinkers focus on Problems
Positive thinkers focus on Solutions





Never hold your head high with pride or ego.
Even the winner of a gold medal gets his medal only when he bows his head down





Define TODAY
This is an Opportunity to Do A work better than Yesterday



African Saying:
If you want to walk quick, walk alone
If you want to walk far, walk together together




Friday, June 7, 2013

அலைந்து திரியும் சுவாரிஸங்கள்....


அண்மையில் வாசிக்கக் கிட்டிய சில சுவாரிசங்கள்: மின்காந்த அலைவரிசைகளிலும் வந்து போகும் சஞ்சிகைகளிலும் இருந்து......

ஆண் மற்றும் பெண்......


பெண்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆண்கள் பிரச்சினைகளைத் தீர்த்து விட வேண்டும் என்று! ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் பெண்கள் பிரச்சினைகளை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும் என்று!

பெண்களின் வெட்கத்தைப் புகழ்ந்து பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு! ஐநூறு வார்த்தைகளிலாவது புகழ்ந்து பேசினால் தான் ஆண்களுக்கு வெட்கமே வருகிறது.

பெண்கள் நினைப்பது, ஆண்கள் அவர்களின் பேச்சை ஐந்து நிமிடமாவது கேட்கவேண்டுமென! ஆண்கள் நினைப்பது பெண்கள் ஐந்து நிமிடமாவது பேசாமல் இருக்கவேண்டுமென!

ஆண்கள் பெண்களை ஜில்,ஜங், ஜக் என மூன்று வகைப்படுத்துகிரார்கள்.பெண்களோ ஆண்களை முன்னால் அலைஞ்சவன், பின்னால் அலைஞ்சவன் என இரண்டு வகைப்படுத்துகிறார்கள்.

பெண்கள் பயப்படுவது ஆணுக்கல்ல, ஆண்களுக்கு! ஆண்கள் பயப்படுவது பெண்களுக்கல்ல, பெண்ணுக்கு!

(நன்றி: குங்குமம்; 1.4.2013. )


வெளிநாட்டில் இப்படி இருந்தால் மாத்திரம் தான் நீங்கள் தமிழர்கள்: புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்த பிள்ளை ஒன்றின் பார்வையில்.......

You are Tamilian only if....

1.You arrive one hour late to the party and find out you are the first one to arrive.

2.You think it's perfectly mormal to call someone who's 30 years younger than you 'அண்ணா’ just because he's behind the counter.

3.You ware a suit to a wedding .... and you are only 3 years old.

4. The wedding takes an hour and the group pictures take five hours.

5.Your mum and sister together own more jewellery than the Chinese jewellery store.

6.Your parents' idea of a vacation is to go down to the temples in India.

7.You talk for an hour at the front door when leaving someone's house.

8.The second your guests leave the house, your parents start talking about them.

9. you rent a cassette from the grocery store, It's been dubbed 6 times.....& you return it 3 months later.

10.you go to a Tamil cultural program only to find one barathanatyam and six hip hop shows.

11. you are somehow  related to every new friend you meet.

12.Your remote control is still in its plastic packet.

13.You get a 95% on a test and your parents ask what happened to the other 5% !

14.You stare at Tamil people when they walk by.

15.You see married couples kissing on TV but have never your mum & dad get within 3 feet of each another.

16.You parents never address each other by name.

17.When you get your first part - time job, your parents expect you to give them half.

18.Your mother has a miner dispute with her sister in law and doesn't talk to her for 10 years.

19.Your parents say Swiss instead of Switzerland , Germany is German and England is London.

20.You go to a party and your aunt comments on how your skin colour has changed.

21.You watch a Tamil wedding tape and all the songs from roja are dubbed in it.

22.You shortened your name to make it sound Anglo.

23.You have dinner at 10 pm.

24.When your parents say 'BBC' they don't mean the news station but your uncle Nathan or aunty Kamala.

25.It is normal for all relatives to bathe the groom on his wedding day.

26.You know that your promiscuous second cousin on your father's side is pregnant even before she does.

27. Your aunties tease you about a particularly eligible cousin ....& you like it.

28.You serve all your guests tea with milk and 3 spoons of  sugar.

29.You only stop putting more rice on your guest's dinner plate 7 times after they tell you to stop.

30.Any time you speake back to your parents, you get; 'i toiled my life for you. and this is how you repay me?' - ’நாங்கள் இப்பிடி கஸ்ரப்பட்டதுக்கு நீ இதுவும் சொல்லுவாய் இதுக்கு மேலையும் சொல்லுவாய்’

31 If you are a girl, you are expected to come home before dark - however if it's a son, ok ராசா,ஜாக்கிரதையா போயிற்று வா”

32. Halfway through your shower you realize that your head and shoulders shampoo is gone and has been replaced by siyakkai shampoo.

33.You walk in to another Tamil family's house and they have the same furniture and dinning set as yours.

34.You are true Tamilian if you forward this mail to another Tamilian.


இது நம் சந்ததியின் பார்வையில்..........

எங்களைப்போல் அதிஸ்டசாலிகள் யாருமே இருந்ததில்லை..

ஏனென்றால்...
நாங்கள் எங்கள்
இளமைக்காலங்களை

இயற்கையுடன் ஒன்றாகி..
உறவுகளுடன் ஒன்றாகி ..
நண்பர்களுடன் ஒன்றாகி ..
குறையாத பாசத்துடன் ..
குதூகலமாக வாழ்ந்தவர்கள் ..
இதைவிடவும் அதிஸ்டம் இவ்வுலகில் உண்டோ ....
 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?



'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள  நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே


தனி படுக்கையில்  அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
·
         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·
         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·
         புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
·
         சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
·
         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·
         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட்  நண்பர்களிடம் இல்லை.
·
         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·
         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·
         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·
         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·
         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·
         உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·
         எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·
         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
·
         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம்  அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·
         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
·
         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால்  செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·
         எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன்,  எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
·
         வேண்டும் பொழுது  நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
·
         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·
         உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
·
         நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல  எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·
         இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
·
         இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப
சொல்லுங்கள் .....


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?