இம்மாதமும் வழமை போல இறுதி ஞாயிறன்று ( 30.6.13 மாலை 5.30 - 6.30 வரை) யாழ் நிகழ்வரங்கில் நம் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இம்மாதம் நம் அதிதியாக சென்ற மாதம் வந்து கலந்து கொண்ட குறும்படங்கள் பலவற்றை இயக்கிய திரு. செல்வன் அவர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் உலகில் குறும்படங்களுக்கான இடம் அதன் நடைமுறை சாத்தியப்பாடுகள், தமிழ் சமூகத்தில் அதன் இருப்பு என்பது பற்றி பல விடயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
மேலும் வருகிற சந்திப்பில் வாசிக்கும் பாரம்பரியத்தை பேணும் முகமாகவும் சிறந்த புத்தகங்களை அறிமுகப்படுத்து முகமாகவும் " புத்தகப் பேரேடு” ஒன்றை அடுத்த சந்திப்பில் அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணுகிறோம்.அங்கத்தவர்கள் நீங்கள் படித்ததில் அதி சிறந்தது என எண்ணும் புத்தகங்களை அல்லது நீங்கள் எழுதிய புத்தகங்களை பேரேட்டில் பதிந்து, இங்குள்ள அங்கத்தவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டுத் தன்மை பற்றிச் சொல்லி பரிமாறி செல்ல அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இலக்கிய சந்திப்பு சம்பந்தமான மேலதிக விபரங்கள் யாவும் http://uyarthinai.wordpress.com/ என்ற வலைப்பதிவில் பதிவேற்றப் படுகின்றன என்ற தகவலையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இலக்கிய ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறது உயர்திணை.
சந்திப்பு விழா சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇலக்கியச் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள். நிகழ்வின் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஇலக்கிய சந்திப்புக்கு வாழ்த்துகள்.!
ReplyDeleteவணக்கம் தோழர், புதிய தரிசனம் இந்த இதழில் உங்களது வலை குறித்து எழுதியுள்ளேன். அதை எனது வலையிலும் போட்டுள்ளேன்.
ReplyDeleteஉங்கள் எல்லோருடய ஆதரவும் வாழ்த்துக்களும் என்னை மெய் சிலிர்க்க செய்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்களே!
அவசியம் வரும் கீதா.
நண்பர் எட்வின், முன் பின் தெரியாத என் மீது மிகுந்த காருண்யத்தோடு நடந்து கொண்டீர்கள் நண்பரே! உங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன். என் அன்பும் நன்றியும்.