Sunday, July 21, 2013

இலக்கிய சந்திப்பு - 14 -



வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

மாதம் ஒன்று மிக விரைவாக உருண்டோடி விட்டது.

அது பற்றி அறியாமலே நம் முதல் நாள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தச் சந்திப்பிற்கு உரமான ஓர் அடிக்கல்லை நாட்டி வைத்த ஆசுகவியாரும் மெல்லினம் சஞ்சிகையின் இணையாசிரியரும் கடந்த மே மாதம் புதிதாக ஓர் உணவு விடுதியினை ஆரம்பித்து வைத்துள்ளவருமான உயர்திணையின் உற்ற தோழனும் நிர்வாக உறுப்பினருமான திரு. குமார செல்வம் நமக்கு தன் அஞ்சப்பர் உணவு விடுதியில் உணவோடு கூடிய ஓர் இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அவருக்கு நம் உயர்திணை அமைப்பின் சார்பில் நம் மனமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ளும் அதே வேளை நமக்கு உணவளித்து உபசரிக்கப் போகும் அவருக்கு அந் நாளின் நிறைவில் உங்கள் வாழ்த்துக்களையும் நன்றியினையும் உங்கள் வழியில் தெரிவித்துக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

வருகின்ற வார சந்திப்பில் நம்முடய மனங்களின் ரசனைகள்; அது பெற்றுத் தந்த ஆற்றல்கள்; அதனை நீங்கள் வெளிப்படுத்திய விதம், அதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்,அது உங்களை அழைத்துச் சென்ற பாதை; அதன் பயணக்கால அநுபவங்கள் இவற்றைப் பற்றிப் பேசலாம் என தீர்மானித்திருக்கிறோம்.

உங்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டிருக்கிறீர்கள் என்ற உங்கள் ரசனா அனுபவங்களை; அதன் வியாபகங்களை செட்டிநாட்டு உணவோடு பகிர்ந்து கொள்ள உயர்திணை இலக்கிய அமைப்பு உங்களை அன்போடு அழைக்கிறது.

( ஒரு சிறு குறிப்பு:புதிதாக எவரும் வர விரும்பின் வருபவர்கள் முன்கூட்டியே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்க.)

நன்றி.

அமைப்புக் குழு சார்பில்

யசோதா.பத்மநாதன்.

4 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி நண்பரே!

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஒரு சிறு சந்திப்பு தாம்பா.ஆனால் ஒரு சந்தோஷமான இலக்கியப் பகிர்வும் ஒத்ததான ரசனைகள் கொண்ட ஒரு கூட்டத்தின் சந்திப்பாகவும் அது இருக்கும்.

    தாங்ஸ்ப்பா.

    ReplyDelete