Monday, February 23, 2015

அழகு, சுதந்திரம், கம்பீரம் - மற்றும் ஒரு மயில்


அந்தப் பூங்காவுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்துப் போது காதில் விழுந்த சத்தம் மாயோ மாயோ என்றொரு அகவல் ஒலி. இது மயிலின் சத்தம் என அறிய பெரிதாக அனுமானங்கள் எதுவும் வேண்டி இருக்கவில்லை. 

உள்ளே ஒரு மரக்கிளையில் தோகையோடு  சுதந்திரமாய் கம்பீரமாய் கழுத்தை உயர்த்தி அது இருக்கக் கண்டோம். அதை உடனடியாகப் பார்க்கும் ஆவல் இருந்த போதும் பூக்களையும் பூங்காவையும் பார்க்கும் வழியில் அவரைக் காண்போம் என சமாதனப் படுத்திக் கொண்டு  பூங்கா சுற்றி வந்த பின்னால் அவரைக் காணோம்.

நாம் ஒரு பாட்டம் சுற்றிவிட்டுக் களைப்பாற நிழலான ஒரு மர இருக்கையில் 
( மர இருக்கை - கீதமஞ்சரியின் மொழிபெயர்ப்பில் பொறுக்கியது) அமர்ந்தோம்.

இம்மயில் எங்கிருந்தோ வந்தது. நம்மைச் சுற்றிச் சுற்றி இரண்டு பாட்டம் நடந்தது. தன் அழகினை வலமும் புறமுமாக மேலும் கீழுமாக நடந்து காட்டியது. அது ஒரு அழகுராணிப் போட்டியில் அல்லது புத்தாடை அணிவகுப்பு மகளிரின் நடை ஊர்வலத்தை ஒத்திருந்தது.
பின்னர் என்ன நினைத்ததுவோ எதுவும் சொல்லாமலே நடந்து போய் விட்டது.

அழகு; சுதந்திரம்; கம்பீரம் என்றால் என்ன என்ற பாடத்தை அது மெளனமாய் கற்றுத் தந்து சென்றது.

ஏனோ அதனை ஆண் என்றழைக்க மனம் கூடுதில்லை!






























10 comments:

  1. வணக்கம்
    விளக்கம. மற்றும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன். வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. அச்சோ... எத்தனை எத்தனை அழகுக்கோணங்களில் எல்லாம் படம்பிடித்து அசத்தியிருக்கீங்க. பிரமாதம் மணிமேகலா. \\அழகு; சுதந்திரம்; கம்பீரம் என்றால் என்ன என்ற பாடத்தை அது மெளனமாய் கற்றுத் தந்து சென்றது.\\ மிக உண்மை.

    ReplyDelete
  5. :) சந்தோஷம் கீதா.
    ஒரு வித கம்பீரம், மிடுக்கு, பெருமை....
    நடையில் ஒரு வித அலட்சிய பாவம்.....
    எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகுமாப் போல நோட்டமிடும் முகபாவம்....
    ராஜ கம்பீரம்.....

    எனக்கென்னவோ கீதா சிறந்த கல்வியறிவும் தர்மநெறிமுறைகளும் தீர்க்க சிந்தனையும் எதிர்காலப் பாதையும் தெரிந்த ஓரிளம் பெண் அப்படி இருக்க வேண்டும் போல இருந்தது.

    ReplyDelete
  6. ஓம். பறவைகளுக்குள் எப்போதுமே மயில் தான் அழகு.
    பெருமையான அதன் நடையில் தொனிக்கும் / துலங்கும்/ மிளிரும் ஒரு கம்பீரம் இன்னும் அழகு!
    எனக்கு :)

    ReplyDelete
  7. பெண்ணென்றே கொள்ளுங்கள் தோழர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோஷம் நண்பரே!
      முரணான ஆசைக்கு; ஒரு சின்னப்பிள்ளைத் தனமான விருப்பத்திற்கு அனுமதி கிட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் மறக்க இயலாதது.

      எனக்குள்ளே இருக்கும் ஒரு சிறு குழந்தைக்கு சொக்கலேட் கொடுத்தது உங்கள் ஒரு சிறுவசனம் எட்வின். இதயத்தின் மிக மென்மையானதொரு பாகத்தை வருடிக் கொடுத்துப் போகிறது தென்றல்.

      Delete