Monday, July 14, 2025

Snugglepot & Cuddlepie - அவுஸ்திரேலியச் சிறுவர் இலக்கியப் பாத்திரங்கள்

 அவுஸ்திரேலிய சிறுவர் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற; மறுபிரசுரங்களைக் கண்டு கொண்டிருக்கின்ற; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதா பாத்திரங்கள் என்றால் இவர்கள் இருவரையும் சொல்லலாம்.

இவர்கள் யார் என்று கேட்கிறீர்களா? இவர்கள் இரண்டு பேரும் Gum Nuts கள். Gum Tree என்று சொல்லப்படுகின்ற, மிகப் பரந்தளவில் அவுஸ்திரேலியா முழுவதும் காணப்படுகின்ற மரம். அதன் விதைகள் தான் இந்த ஸ்னகிள்பொட்டும்  கட்டிள்பையும்.

அவுஸ்திரேலிய வாழ்வியல் பின்னணியையும் வாழ்க்கை முறைகளையும் பேசும் இவை பேசுகின்றன. கற்பனை வளத்திற்கும் குழந்தைகளின் மனநிலைக்கும் ஏற்ற வகையில் கதைகள் பின்னப்பட்டு பாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளனவாக உள்ளன.  

நேற்றய தினம் பழம்பொருட்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தேன். அங்குள்ள புத்தகங்களைக் கிண்டிக் கொண்டிருந்தபோது, இந்த இரண்டு பேரையும் கண்டு பிடித்தேன். அதற்கு முன்னராக இந்த வருட ஆரம்பத்தில் புத்தகக் கடை ஒன்றில் வண்ணங்கள் தீட்டும் புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது  அதன் கற்பனை வளத்தின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக இவர்கள் இரண்டுபேரும் இருக்கின்ற அந்தப்  புத்தகத்தையும் வாங்கி இருந்தேன்.

puzzle இல் விடுபட்டுப் போயிருந்த ஒரு துண்டு கிடைத்ததைப் போல $1.00 க்கும்$2.00 டொலருக்கும் தற்செயலாகக் கண்டெடுத்து வாங்கிய இந்தப் புத்தகங்கள் மகிழ்ச்சியைத் தந்தன. 

அவர்களுடய சாகசப் பயணங்களும் அந்தப் பயணத்தின் போது அவர்கள் சந்திக்கின்ற அவுஸ்திரேலிய விலங்குகளும்  அவர்களுடனான இவர்களின் உரையாடல்களும் அதனூடாக அவை வெளிப்படுத்தும் அவுஸ்திரேலிய வாழ்வியல்களும் சுவாரிசம் மிக்கவை.

இந்தக் கதைகளின் சூத்திரதாரி May.Gibbs என்பார்.  நான் அவரைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்வதை விட நீங்களே கீழே உள்ள link இல் சென்று பாருங்களேன்!

https://maygibbs.org/character/snugglepot-and-cuddlepie/

No comments:

Post a Comment