கடந்த மாத இலக்கிய சந்திப்பு சிட்னியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் மூடிய மண்டபம் ஒன்றுக்கு இடம் மாற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இடம் பெற முடியாது போய் விட்டது. அதனால் ஒரு மாத காலம் பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு இம்மாதம் “yaarl Function Centre ஸ்தாபனத்தாரின் ஆதரவோடு அவர்களின் நிகழ்வரங்கில் இடம் பெற இருக்கின்றது.
அவர்களுக்கு நன்றியினைக் கூறிக்கொள்ளும் அதே வேளை, இம் மாத நிகழ்வில் நம் உயர்திணை அமைப்புக்கான இலட்சினையினை நம் ஊரில் வசிக்கும் ஓவியக் கலைஞர் திரு.ஞானம் ஐயா அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறோம்.
அவை பற்றிய முக்கிய முடிவுகளும் இம்மாதம் எடுக்கப்பட இருப்பதால் உறுப்பினர்களையும் ஆர்வலர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
உங்கள் பிரசன்னம் அறிதலுக்கும் பகிர்தலுக்கும் வளர்தலுக்கும் அத்தியாவசியமானதாகும்.
இலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்!
இலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்!
ReplyDeleteவாழ்த்துகள்..!
மிக்க மகிழ்ச்சி என் அன்பு செந்தாமரைத் தோழி. உடனடியாக வந்து பதில் தந்து மகிழ்வூட்டிச் சென்றமைக்கு நன்றியும் கூடவே!
ReplyDeleteஇன்றைய கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்திருக்கும் என்று நம்புகிறேன். கலந்துரையாடல் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். உயர்திணைக்கான இலட்சினை உருவாக்கம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. உருவாக்கிய ஓவியர் அவர்களுக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
ReplyDeleteபெண்டில் கில் பண்ணுவாளோ? ஐயையோ. எஸ்கேப்.
ReplyDeleteஆம் கீதா. மிகச் சிறப்பாக நடந்தது.விரைவில் அவற்றைப் பதிவிடுகிறேன். உயர்திணைக்கென தனிப்பக்கம் ஒன்று திறக்கப் பட்டிருக்கிறது. அங்கு அது பதிவாவது தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.
ReplyDeleteஇப்பக்கத்தின் வலது கைப்புறத்தில் என் விருப்பப் பக்கங்களில் அது இருக்கிறது. இங்கு வந்தும் அங்கு செல்லலாம்.அது ஒரு அழுத்தத் தூரம் (கிளிக் தூரம்) தான்.
உங்கள் அக்கறையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கீதா.
அடடா! என்ன ஒரு சிலேடைச் சொல்லாடல்!:)
ReplyDeleteசாதாரணமாக பெண்டில் (மனைவி) கில் பண்ண மாட்டாள்.பெண்டிலையும் கில் பண்ண முடியாது.
அது pendle Hill. Pendle kill இல்லை.
பென்டில்கில் என்று வேணுமென்றால் எழுதலாம்.இப்படி எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. என்னவென்றால் பென் என்ற எழுத்தை அழுத்தி விட்டு டி என்ற எழுத்தை அழுத்தினால் உடனடியாக இரண்டு சுழி ன மூன்று சுழியாகத் தன் பாட்டிலே மாறி விடுகிறது.
இலக்கணம் அதுவோ?
அநாமதேய சிலேடைச் சிற்பி / சொல்லாடல் விற்பன்னர் இதற்கும் ஒரு காரணம் சொன்னால் நலம்.
மொழிபெயர்த்துப் பார்க்கும் போது பல சுவாரிசமான சொல்லாடல்கள் பிறக்கின்றன.
4 பேர் இருக்கின்ற வீடொன்றில் வசிக்கின்ற குடும்பத்தினர் இருக்கின்ற வீட்டு வீதியின் பெயர் No 4, Buffalo Place.அதனைச் சுவாரிசமாக அவர்கள் 4 எருமைமாடுகள் இருக்கிற இடம் தான் எங்கள் முகவரி என்று நகைச்சுவையாகச் சொல்லுவார்கள்.
ஒரு முறை இது பற்றி பலமணி நேரம் பேசினோம்.
போடிலேன், ஈழம் றோட் .... இப்படியாக!