Tuesday, October 1, 2013

பூ - லோகம்

அது ஒரு சனிக்கிழமை 24.8.13.

வசந்தகாலத்து விடுமுறை நாளொன்று.

9.00 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரை நமக்கு ஒரு பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் என்னோடு இணைந்து பணியாற்றும் என் இந்தியத்தோழியை புகையிரத நிலயத்தில் சந்தித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தேன்.

சொன்னது போல 8.30 மணிக்கு ரயில் நிலயத்துக்கு சென்று அழைக்கலாம் எனத் தொழைபேசியை எடுத்தால் அவர் முதல் நாள் இரவே எனக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்ததை அப்போது தான் காண முடிந்தது.செய்தி இதுதான். பயிற்சி 9.00 மணிக்கல்ல 10 மணிக்கு என்பதால் தான் 9.30 மணிக்கு வருகிறேன் என்பது தான்.

சரி, ”எல்லாம் நன்மைக்குத் தான்” இப்போது எதிர்பாராத விதமாக எனக்கு கிடைத்த இந்த ஒரு மணி நேரத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.மிக அருகில் தான் ஒரு பெரிய பூங்கா இருக்கிறது. நடக்கப் போகலாம். ஒரு தரம் சுற்றி வந்தால் 3 கிலோ மீற்ரர்கள்.உடலுழைப்பு இல்லாத தேகம்; காலை நேரம். சுத்தமான காற்று; ஆட்களும் அதிகமாக இருக்க மாட்டார்கள்.

பூங்காவுக்குள் நுழைந்தேன்.மூலையில் ஒரு பூந்தோட்டம். அடிக்கடி கண்ணில் காண்பது தான். என்றாலும் போய் பார்க்கத் துணிந்ததில்லை. இன்று அதை போய் பார்க்கலாம் என மனம் விரும்பியது.

போனேன்: பிறகும் பிறகும் போனேன்; வெளியே வரவில்லை இன்னும்!

உங்களுக்காய் அவற்றைப் படம் பிடித்து வந்தேன். பல நாட்கள் வராததன் சமாளிப்பாகவும் நீங்கள் இதனைப் பார்க்கலாம்.


  உலகவழக்கில் இந்திய ஆத்மீக பாரம்பரியம் உலகங்களை மேல்லோகம் பூலோகம், பாதாளலோகம்  என மூன்றாகப் பிரிக்கிறது. கவனியுங்கள் இந்த உலகம் பூ - லோகம். அதனோடு சம்பந்தப்பட்டே தமிழ் பண்பாடு திரு - மணம் என்றும் பூ - புனித நீராட்டு என்றும் மண - மக்கள் என்றும் பூவோடும் வாசத்தோடும் தம் வாழ்வின் நிகழ்வுகளை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூக்களை அன்பின் நிமித்தமாய் பரிசளிப்பதும் பூமாலைகள் சூட்டுவதும் பூக்களை தலைக்கு அணிவதும் இடங்களை அலங்கரிப்பதுமாய் அதன் அழகுக் கோலங்கள் தான் எத்தனை எத்தனை?

பூக்களுக்கும் அவற்றின் புன்னகைகளுக்கும் வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் வாசங்களுக்கும் மயங்காதார் யார்?

அவுஸ்திரேலிய சுவாத்தியம் பூக்களுக்கு ஏற்றது. இது பூக்களின் நாடு. வசந்தகாலம் வந்து விட்டால் அதன் அழகை சொல்லி மாளாது. வீடுகள் தோறும் பூக்கள்! வீதிகள் தோறும் வண்ணங்கள். இந் நாட்டுப் பிரஜைகள் அவற்றின் மீது காட்டும் கரிசனை தான் எத்தகையது!!

தொடரும்.....

20 comments:

 1. ஆகா...ஆகா...! மனம் கொள்ளை கொண்டது...

  ReplyDelete
 2. மனம் மணக்கும் பூந்தோட்டம் அருமை..!

  ReplyDelete
 3. \\பல நாட்கள் வராததன் சமாளிப்பாகவும் நீங்கள் இதனைப் பார்க்கலாம்.\\

  குளுமைப்படுத்தும் இனிய மலர்த்தோட்டம் கண்டு மனத்துக்குள்ளும் மலர்ச்சி.

  அழகான பூக்களால் அக்ஷ்ய பாத்திரத்தை நிறைத்தமை சிறப்பு. மலர்கள் இதம் தரும் அளவுக்கு மகரந்தப் பொடி சுகம் தரமறுக்கிறதே தோழி எனக்கு.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி தனபாலரே!

  இன்னும் இருக்கிறது சொல்லவும் காண்பிக்கவும். நேரம் தான் சரியாக இன்னும் வாய்க்க்கவில்லை

  விரைவில் வரும் ஒரு ரோஜாத் .தோட்டம்!

  ReplyDelete
 5. செந்தாமரைத் தோழி! சுகமா நீங்கள்? மிக்க மகிழ்ச்சி நீங்கள் வந்ததை இட்டு.

  பகிர்ந்து கொண்ட உங்கள் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. கீதா, மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவு கண்டு. உங்கள் பகிர்வு நிறைவு தருகிறது.

  ஆமாம். அலர்ஜி ஒரு பெரிய பிரச்சினை தான். காற்றில் மகரந்தப் பொடிகள் பரவியே அலர்ஜியை உண்டு பண்ணுமளவுக்கு பாருங்களேன் பூக்களின் அட்டகாசத்தை?

  ReplyDelete
 7. எதிர்பாராத விதமாக எனக்கு கிடைத்த இந்த ஒரு மணி நேரத்தை//

  அந்த ஒரு மணி நேரத்தை இறைகொடை ஆக்கினீர்கள் தோழி எமக்கும்...

  பல நாட்கள் வராததன் சமாளிப்பாகவும் //

  :)
  பூவும் மணமும் விளக்கம் அழகு.

  ஒவ்வொரு படமும் கொள்ளை அழகாய் கண் நிறைக்க, சேமித்துக்கொண்டேன். நன்றி தோழி!

  ReplyDelete
 8. கடைசியில் பூமரத்தொடு நிற்பது நீங்களோ...?!

  ReplyDelete
 9. வணக்கம் நிலாத்தோழி! நலம் தானா? உங்களை மீண்டும் கண்டு கொண்டதில் ஒரு வித திருப்தி!

  இன்னும் நிறைய படம் இருக்கு. சொல்லவும் பகிரவும். நீண்ட வார விடுமுறை ஒன்று வந்து கொண்டிருக்கிறது.கட்டாயமாக வேலைக்கு அழைத்தாலும் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.அந்த நேரத்தில் இந்திய ஆவணப்படக் காட்சிகள் மிக அருகில் காண்பிக்கப்பட இருக்கின்றன. தவறவிட பிரியமில்லை.அதனூடே இங்கு பதிவிட என தேங்கி நிற்கும் பலவற்றையும் செய்து முடிக்க உத்தேசம்.

  உண்மையில் உங்கள் எல்லோரையும் இங்கு காண்பதில் தான் என்ன ஒரு சந்தோஷம்!

  நன்றி நிலா.

  /கடைசியில் பூமரத்தொடு நிற்பது நீங்களோ...?!/

  வேற யாரு நான்தாம்பா. :)

  ReplyDelete
  Replies
  1. இப்படி கண்ணியமாக உடுத்திக் கொண்டால் பெண்கள் வெகு சிக்கல்களிலிருந்து தப்பிப்பார்கள் என்று எண்ண வைத்தது தங்கள் படம்.

   Delete
  2. அவ்வாறெனில் அந்தப் பெருமை நிச்சயமாகப் பாரதப் பாரம்பரியத்துக்குத் தான் போய் சேர வேண்டும் நிலா தோழி.

   இந்தியப்பாரம்பரிய ஆடைகளில் தான் எத்தனை செளகரிகம்! சுகம்! இதம்! வசதி! பருத்தி ஆடைகள், சால்வைகள், சேலைகள்.....

   ஆஹா...ஆஹா....

   அவற்றை அன்னிய நாடொன்றில் உடுத்திக் கொள்வதில் நான் நானாய் இருப்பது போலவும் ஒரு சந்தோஷம்.

   மிக்க சந்தோஷம் நிலாத்தோழி.

   Delete
 10. கடைசியில் பூமரத்தொடு நிற்பது நீங்களோ...?!/

  வேற யாரு நான்தாம்பா. :) என் ஆத்மா தேர்ந்தெடுத்த போர்வை அல்லது ஆத்மா போட்டிருக்கும் அழியத்தக்க ஒரு கவசம் எனவும் அதைச் சொல்லலாம். -

  தத்துவார்த்தமாய் ஒரு சிந்தனை ஓடிற்று! :)

  ReplyDelete
  Replies
  1. ஆத்மாவின் அழியத்தக்கதொரு கவசம்!

   உடம்பால் அழியினும் உயிரால் அழியார் அல்லவா நாமெல்லாம்...!

   ஆயினும் இந்தக் கவசம்தான் பல கேடுகளுக்கும் காரணியாகவும் !

   நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் ஒரு முகமதியப் பெண் ... எனக்கு மூத்தவர். பார்த்தால் பரிவுடன் பேசுவோம். ஒரு நாள் அவர் உடுத்தியிருந்த ஆடை அழகாயிருப்பதாக நான் சொன்னதற்கு, 'அப்படியா, கட்டைமேல் இரண்டாவது தடவையாக ஏறியிருக்குப்பா' என்று சாவதானமாகச் சொல்லிப் போனார்.

   அன்றிலிருந்து இன்றுவரை அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்த வசனம் நினைவில் வந்து வியப்பு கூட்டத் தவறுவதில்லை. அந்த வயசிலேயே 'கட்டை' என்று சொல்லிக் கொள்ள என்னவொரு பக்குவம்!! இன்று உங்களால் மறுபடி அச்சகோதரியை நினைவுபடுத்திக் கொண்டது மனசு.

   Delete
  2. ரொம்ப நன்றி நிலாம்மா.

   உண்மையில் அதற்குள் இருக்கிற ஆத்மாவை அடையாளம் கண்டுகொள்ளுதலும் அதனுடய பசியை அதனுடய தாகத்தை இனம் கண்டு கொண்டு விட்டால் போதும். இந்த உடல் அதற்கான ஒரு கருவியாக இயங்க ஆரம்பித்து விடும். அது ஞானத்துக்குச் சமன்.

   அதன் பிறகு இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பதுவும் விளங்க நாம் அதனை சந்தோஷமாக வேடிக்கை பார்க்கலாம்.

   அது மட்டுமல்ல வாழ்க்கையின் அர்த்தமும் நம் பயணமும் விளங்கி விடும்.

   ஆர்ப்பாட்டங்கள் அடங்கி அடக்கம் வரும்.

   அதன் பிறகு ஆத்மா சொல்லும் பாதையில் பயணம் வாய்க்கும்.

   நெஞ்சோடு நெருங்கி விட்டீர்கள் தோழி.

   Delete
  3. ஒரு விஷயம் சொல்லாமல் விடுபட்டு விட்டது. இந்த உலகத்தில் இருக்கிற சகல ஜீவராசிகளையும் நமக்குச் சமனாக கருதும் பக்குவமும் வந்து விடும் நிலா.

   அதற்கு பறவைகள், விலங்குகள், உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஆண் பெண் என்று எந்த பேதமும் தெரியாது.

   தனக்கான உடலை பெற்றுக் கொண்டிருக்கின்ற என்னைப்போல் சக ஆத்மா அது என்பதைத் தவிர.

   (ரொம்ப தத்துவார்த்தமாகப் போகிறேனோ)

   Delete
 11. இணைப்புக்கு நன்றிகள்

  ReplyDelete
 12. புத்த பகவானை எங்கே பல நாளாய் காணோம்?

  பரமற்ரா பார்க்கின் இடது பக்கக் கரையோரமாய் அமைந்திருக்கிறது இந்த சொற்பகால கொடுங்கோலாட்சி! அடுத்த வருடம் தான் இனி அவை ஆட்சிக்கு வரும்.:)

  கடந்த மாத இலக்கிய சந்திப்பும் அங்கு தான் நடந்தது.சிலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள்.:)

  நீண்டவார விடுமுறை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. மேலதிகமாய் சில தகவல்கள்:

  1.Manakottai - A play in Tamil.- ICE, 8 Victoria Rd, Parramatta. $5.00 ; 5th of Oct' 4.00 pm.

  2.Our Family - 5th of Oct. 5.00pm.Saturday
  3.Like here Like there - 6th of Oct. 5.00 pm. Sunday.
  4.The Bond. 7th of Oct. 5pm.Monday

  At Raffertys, Riverside Theatres, Church st, Parramatta.
  Indian Documentaries : with live Q&A after each film.

  These three critically acclaimed documentaries take an intimate look at spirituality, sexuality and tradition.

  Cost Free. RSVP: 02- 98975744

  ReplyDelete
 14. :) வணக்கம் குமார். எப்படி சுகமா இருக்கீங்களா?

  நீங்க வந்ததோட நம்ம பதிவு முழுமையடைஞ்சிருச்சி. இனி நாம கடையப் பூட்டிட்டு புதுப்பதிவ போட்டாப் போதும்.

  நம்ம தோஸ்துங்க எல்லாரும் வந்தாச்சில்லையா அது தான்.

  தாங்ஸ்ப்பா.

  (இப்பத்தான் ஓர் ஆவணப்படம் பார்த்து விட்டு வந்தேன்.பராமசாலா என்று ஒரு பெரிய இந்தியக் கொண்டாட்டம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வாசம் பாஷையிலும் ஒட்டிக்கொண்டு விட்டது)

  ReplyDelete