Monday, October 21, 2013

பூக்களின் மொழி....

பூக்களின் சங்கத மொழி அறிந்ததுண்டா நீங்கள்? சிலவற்றுக்குக் குரல் நிறத்தில் உண்டு. சிலவற்றிற்கு வாய் வாசத்தில் இருக்கிறது.மேலும் சிலவற்றுக்கு அதன் தோற்றவடிவங்களே பேசும்.


ஓர் ஆணின் சிரிப்பு


ஓர் பெண்ணின் சிரிப்பு


முழுமையான புன்னகை 


எளிமையான புன்னகை


பாமர புன்னகை



பணிவான புன்னகை


பள்ளித் தோழிகளின் புன்னகை


அழகிய புன்னகை


ஜோடிப் புன்னகை


கொல்லெனச் சிரிப்பவை


மேலே உள்ள ஊதாப்பூவையும் கீழே உள்ள மஞ்சள் பூவையும் பார்த்த போது கோபக்கார பூவை போலவும் மீசையும் தலைப்பாகையும் உள்ள சீக்கிய ஆண் போலவும் ஒரு பிரமை! :)



இதமான புன்னகை


மதிலேறிச் சிரிப்பவை



மேலே சில குழந்தைப் பூக்கள்

மேலும் சில றோஜாக்கள் கீழே














நாங்கள் போன இந்த றோஜாத்தோட்டத்திற்கு சில குழந்தைப் பூக்கள் தங்கள் ரீச்சர் மாரோடு வந்திருந்தார்கள். அவர்கள் தான் கீழே.







இந்த றோஜாப்பூக்களுக்கு அழகிய கரைகளாக இந்த வண்ண வண்ண சிறுமலர்கள் நிலத்தோடு படர்ந்த படி.






கீழே உள்ள மொட்டு ஒரு சிறுமியைப் போல.



கீழே உள்ள பூ கன்னிப் பெண்ணைப் போல.





இந்த நாடு இத்தனை அழகாக இருப்பதற்கு இந் நாடு செல்வந்த நாடாக இருப்பது ஒரு காரணமா என்று நினைத்துப் பார்த்தேன். அதுவும் ஒரு காரணமே தவிர அது மட்டும் காரணமல்ல என்பதற்கு அங்கேயே ஒரு காரணமும் கிட்டியது.

ஒரு மலரை மிக அருகாக குனிந்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அத்தறுவாயில் பின்புறமிருந்து ஓர் ஆண்குரல்.’பூக்களைப் பறிக்க வேண்டாம்’ என்றது. நான் நிமிர்ந்த போது தான் அந்த மனிதர் என் கையில் புகைப்படக் கருவியைக் கண்டார். நான் பறிக்கவில்லை என்பதை அறிந்து வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மாறாக நான் அந்த அக்கறைக்கு நன்றியே கூறினேன். அது ஒரு சிறந்த உதாரணம். இம்மக்கள் தம் நாட்டின் பொதுச் சொத்தின் மீது எவ்வலவு மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்கள் என்பதற்கு. அது தம் கடமை என ஒவ்வொரு பிரஜையும் நினைக்கிறார்கள்.

முன்பு ஒரு தடவை என் ஆசிய நாட்டுத் தோழி ஒருத்தியோடு பேசிக்கொண்டிருந்த போது இந் நாட்டு வீதி விதிமுறைகளை மீறுபவர்கள் நம் போன்ற வந்தேறுகுடிகள் தான் என்று சொன்னாள். ஒரு தடவை தன் சின்ன மகளை அழைத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனாளாம்.கடைகளுக்கு முன்புறமாக இருந்த வீதியைக் கடக்க முயன்ற போது ஒரு அவுஸ்திரேலிய இளைஞன் அவளை வழிமறித்து இங்கு கடக்கவேண்டாம் என்றும் பாதசாரிகள் கடப்பதற்கான கடவை அருகில் இருக்கிறது என்றும் அங்கு சென்று கடக்கும் படி தனக்கு அறிவுறுத்தல் தந்தான் என்றும்; அவன் அத்தோடு நில்லாது தம்மை அழைத்து அங்கு பச்சைமனிதனுக்காகக் காத்திருந்து கடக்கப் பண்ணி விட்டே நகர்ந்தான் என்றும் சொன்னாள். 

அதற்கு அவன் கூறிய காரணம் தான் முக்கியமானது. அதற்கு அவன் சொன்ன காரணம் உயிர் பாதுகாப்பு - நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைக்கிறீர்கள்; வாகனத்தில் வரும் ஒருவரை பிரச்சினைக்குள் மாட்டுகிறீர்கள், சட்டத்தை மீறுகிறீர்கள், இறுதியாக உங்கள் பிள்ளைக்கு தவறான ஒரு விடயத்தைக் கற்பிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருங்கள் என்று சொன்னான் என்றும் தான் அன்று வேலைக்குச் போக வேண்டிய தேவை இல்லாத பொலிஸ் உத்தியோகஸ்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் சொன்னாள்.

அதன் பிறகு தான் எப்போது எங்கு போனாலும் பாதசாரிகளின் கடவையில் பச்சை மனிதனுக்காகக் காத்திருந்தே கடப்பதாகச் சொன்னாள்.

அந்த நாடுமீதான அக்கறையும் அபிமானமும் எவ்வாறு ஊட்டப்பட்டது என்று தெரியவில்லை. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் தான் போடுகிறார்கள். பகீரங்கக் கழிவறைகள் எப்போதும் சுத்தமாகவே காணப்படுகிறன. சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சாதாரண பிரஜையும் அதட்டிக் கேட்கிறான்.

பலவீனமானவர்கள் எனக்கருதப்படும் குழந்தைகள், பெண்கள், வலது குறைந்தவர்கள் போன்றோருக்கு சட்டத்தால் பாதுகாப்பளிக்கப் படுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் அதனை சிறப்பாக அமுல் படுத்தப்படுவதில் அக்கறை காட்டுகிறான். சட்டம் எங்கேனும் மீறப்படும் பட்சத்தில் சட்டத்திற்கு அதனைத் தெரிவிக்க  அவன் அஞ்சுவதோ தயக்கம் காட்டுவதோ இல்லை. பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும்  தவறு இளைக்கப்படுவதாக அறியும் பட்சத்தில் பக்கத்து வீட்டுக்காரரே பொலிசுக்கு அறிவித்து விடுவார்கள். பாடசாலைகளில் பிள்ளைகளின் உடல்,மன நலம் ஆசிரியர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு பிரஜையும் தனக்கான தார்மீகப் பொறுப்பினை எடுத்துக் கொள்வது என்பது இந் நாட்டின் இன்னொரு அழகு. ஒரு பூவினைப் பறிப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. 

அரசியல் விவகாரங்களிலும் அவ்வாறு தான். தாம் செலுத்துகின்ற வருமான வரி எவ்வாறு செலவளிக்கப்படுகிறது என்பதை கவனிப்பதோடு தட்டிக் கேட்கவும் மறப்பதில்லை. அரசாங்கம் விளக்கம் சொல்லாமல் தப்பமுடிவதும் இல்லை.

தம் மண், நாடு ,அதன் எதில்காலம் இவற்றின் மீதான தார்மீகப்பற்றை, தன் கடமையாக அவன் கையில் எடுத்துக் கொள்கிறான். 

ஒரு நாடு மேன் நிலைக்கு வர ஒவ்வொரு பிரஜையும் தன் கடமையைக் இவ்வாறு கையில் எடுத்துக் கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது.

என் தாய் நாடு நினைவுக்கு வந்து போகிறது!


9 comments:

  1. அடடா... என்ன என்ன அழகு...!!! மிக்க மகிழ்ச்சி...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகிய பூக்கள்..,,
    அழகான கருத்து...
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பூக்களை வைத்து சிரிப்புக்கான அகராதியே
    படித்துவிட்டீர்கள்..
    அருமை..
    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  4. குமாருக்கும் மகேந்திரருக்கும் வணக்கமும் அன்பும் நன்றியும்.

    மகிழ்ச்சி.
    ( இப்போது இங்கு காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது.இயற்கைக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்று புரிகிறது. இயற்கையின் சக்தி....)

    ReplyDelete
  5. அடடா... காட்டுத்தீயா..
    கவனமாக இருக்கவும்....
    இயற்கையை மிஞ்சுவதற்கு
    வேறோர் சக்தி இல்லை
    இவ்வவனியில்...

    ReplyDelete
  6. வணக்கம் மகேந்திரரே! நலம் தானா?

    உண்மைதான். இந்த அவனி இயற்கையை மதிக்காததன் கொடுமை இப்போது பல ரூபங்களில்! பல நாடுகளில்! பல விதங்களில்.

    அது சொல்லுகிற செய்தியை யாரும் செவிமடுப்பதாக இல்லை. இன்னும்! என்பது தான் இன்னும் அச்சத்துக்குரிய அம்சம்.

    நன்றி நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும்.

    தொடர்ந்து வருக!

    ReplyDelete



  7. அந்த நாடுமீதான அக்கறையும் அபிமானமும் எவ்வாறு ஊட்டப்பட்டது என்று தெரியவில்லை. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் தான் போடுகிறார்கள். பகீரங்கக் கழிவறைகள் எப்போதும் சுத்தமாகவே காணப்படுகிறன. சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சாதாரண பிரஜையும் அதட்டிக் கேட்கிறான்.




    பலவீனமானவர்கள் எனக்கருதப்படும் குழந்தைகள், பெண்கள், வலது குறைந்தவர்கள் போன்றோருக்கு சட்டத்தால் பாதுகாப்பளிக்கப் படுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் அதனை சிறப்பாக அமுல் படுத்தப்படுவதில் அக்கறை காட்டுகிறான். சட்டம் எங்கேனும் மீறப்படும் பட்சத்தில் சட்டத்திற்கு அதனைத் தெரிவிக்க அவன் அஞ்சுவதோ தயக்கம் காட்டுவதோ இல்லை. பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் தவறு இளைக்கப்படுவதாக அறியும் பட்சத்தில் பக்கத்து வீட்டுக்காரரே பொலிசுக்கு அறிவித்து விடுவார்கள். பாடசாலைகளில் பிள்ளைகளின் உடல்,மன நலம் ஆசிரியர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.




    ஒவ்வொரு பிரஜையும் தனக்கான தார்மீகப் பொறுப்பினை எடுத்துக் கொள்வது என்பது இந் நாட்டின் இன்னொரு அழகு. ஒரு பூவினைப் பறிப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.




    அரசியல் விவகாரங்களிலும் அவ்வாறு தான். தாம் செலுத்துகின்ற வருமான வரி எவ்வாறு செலவளிக்கப்படுகிறது என்பதை கவனிப்பதோடு தட்டிக் கேட்கவும் மறப்பதில்லை. அரசாங்கம் விளக்கம் சொல்லாமல் தப்பமுடிவதும் இல்லை.




    தம் மண், நாடு ,அதன் எதில்காலம் இவற்றின் மீதான தார்மீகப்பற்றை, தன் கடமையாக அவன் கையில் எடுத்துக் கொள்கிறான்.




    ஒரு நாடு மேன் நிலைக்கு வர ஒவ்வொரு பிரஜையும் தன் கடமையைக் இவ்வாறு கையில் எடுத்துக் கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது.......................................................நன்றிகள் இணைப்புக்கு...எனக்கு உங்கள் பூக்களின் படங்களை விட...இந்த நாட்டு குடிமக்கள் பற்றிய விமர்சனம் பிடித்துள்ளது

    ReplyDelete