Wednesday, January 15, 2014

சோதிட நம்பிக்கைகள்

நம்பிக்கையில் இயங்குகிறது உலகம்.

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?

உலகத்தின் பழம் பெரும் பண்பாடுகள் பலவற்றிலும் அத்தகைய நம்பிக்கைகள் பலவாறாக இருந்தன இன்னமும் இருக்கின்றன.

ஜனவரி ஒன்று ஆங்கிலப் புது வருடம்.

ஜனவரி 31ல் 2014க்கான புது வருடம் ஆரம்பிக்கிறது சீனருக்கு.




ஜனவரி 14ல் தமிழராகிய நமக்கு தைத்திங்கள் முதல் திகதி. ஆனால் ஏப்பிரல் 14 நமக்கான புது வருடமாகக் கணிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


சந்தோஷமாக வாழப்பிரியப்படும் மனிதர்களிடம் சோதிட நம்பிக்கையும்  நாட்காட்டிக் கணிப்பீடுகளோடு தோற்றம் பெற்றது.





எதிர்வு கூறல்களும் எதிர்காலம் கணிப்பிடலும் அவ்வகைப்பட்டவையே. அது நாட்டுக்கு நாடு பண்பாட்டுக்கு பண்பாடு தனக்கான தனித்துவங்களோடு விளங்குகின்றன.


நாடுகள் பலவும் அவற்றை அங்கீகரித்து நாட்டின் சிறப்பாக; தம்முடய வளங்களில் ஒன்றாக அரச முத்திரைகளை வெளியிட்டு அவற்றை அங்கீகரித்திருக்கிறன. அந்த முத்திரையின் படங்களையே இப்பதிவில் ஆங்காங்கே காண்கிறீர்கள்.




எண் சோதிடம், கைரேகை சாஸ்திரம் என்பவற்றோடு ஒரு குழந்தை பிறந்த அந்த துல்லியமான நேரத்தை வைத்து பிள்ளையின் எதிர்காலத்தைக் கணிப்பிடும் முறை நம் பழந்தமிழ் பண்பாட்டில் இருக்கிறது.



சீனரிடம் புத்தபகவான் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஒரு வித சோதிட நம்பிக்கை உண்டு. அது 12 மிருகங்களின் பெயரால் அழைக்கப்படுவதோடு  மரம். நெருப்பு, பூமி,உலோகம், நீர் ஆகிய 5 அடிப்படைகளில் இயக்கம் பெருகிறதாக நம்புகிறார்கள். (அது பற்றி விபரமாக பின்னர் ஒரு தடவை பார்ப்போம்.)



அவுஸ்திரேலியர்களிடம் இன்னொரு விதமான சோதிட நம்பிக்கை உண்டு. அது 4 மூலக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.அது பூமி, நீர், காற்று நெருப்பு ஆகியவையாகும். இவை 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு மாத, திகதி அடிப்படையில் அவரவருக்கான இயல்புகள் சொல்லப்படுகின்றன.


பூமியும் நீரும் அது போல காற்றும் நெருப்பும் ஆகிய கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவர் என்றும்; மாறாக நீரும் நெருப்பும் காற்றும் நிலமும் ஆகிய மூலக் கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் பட்டுக் கொள்ளாமல் இருப்பர் என்றும் அவுஸ்திரேலிய சோதிட நம்பிக்கை கருத்துச் சொல்கிறது. ( நீர் பெருக நிலம் தேவை: நிலம் நீரால் செழுமை பெறும். நெருப்பு பரந்து விரிய காற்றுத்தேவை. பூமிக்கு காற்றால் எது பயனும் இல்லை. அது போல நீருக்குக் காற்றாலும் பயனெதுவும் விளைவதில்லை. மனிதப் பிரிவுக்குள்ளும் அதுவே அடிப்படை என்கிறது இவர்களது சோதிட ஞானம் மற்றும் நம்பிக்கை.



அந்த நம்பிக்கைகளைத் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அறிமுகப்படுத்துவது இப்பதிவின் நோக்கமாகும்.



அவுஸ்திரேலிய பண்பாட்டு விழுமியங்களுக்குள் ஒன்றாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய சோதிட முறையை தைப்பொங்கல் வாழ்த்துக்களோடு இங்கே தருகிறேன். உங்களுக்கு அது எவ்வகையில் பொருந்திப்போகிறது என்பதையும் தான் ஒரு தடவை பாருங்களேன். அதே நேரம் நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் நீங்கள் வாழும் நாடுகளின் நம்பிக்கைகளை இங்கு பகிர்வதன் மூலம் இந்தப் பதிவை இன்னும் செழுமை பெறச் செய்யலாம்.

கீழே வருபவை ஆங்கில ஆக்கம் ஒன்றின் தமிழாக்கம்.( சுருக்கமும் செறிவும் கருதி பல விடயங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.)


மேடம்: 21 மார்ச் - 20 ஏப்பிரல் வரை.

மூலக்கூறு: நெருப்பு.
ஆளும் கிரகம் செவ்வாய்.
அதிஷ்ட தினம் செவ்வாய்,
பலம்: சக்தி, ஆர்வம், துணிச்ச, தன்னம்பிக்கை.
பலவீனம்: தன்னலம், கோபம், பொறுமை இன்மை.

இடபம்: 21 ஏப்பிரல் - 21 மே

மூலக்கூறு: நிலம்
ஆளும் கிரகம் வெள்ளி
அதிஷ்ட தினம்: வெள்ளி
பலம்:சார்ந்திருத்தல், இணைந்து செல்லுதல், மன உடல் உறுதி.
பலவீனம்: மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்,


மிதுனம் 22 மே -21 ஜூன்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: மகிழ்வாய் இருத்தல், நல்ல தொடர்பாடல் திறன்,அனுசரித்து போகிற தன்மை
பலவீனம்: சுயநலம், அமைதியற்ரிருத்தல், குழம்பிய மனநிலை



கடகம்: 22 ஜூன் - 23 ஜூலை

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: திங்கள்
ஆளும் கிரகம்: சந்திரன்
பலம்: சூழலுக்கு தக்கவாறு தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளுதல், குடும்பத்தின் மீதான பற்றும் விசுவாசமும்
பலவீனம்: தன் உணர்வுகளை வெளிக்காட்டாத தன்மை, சுடு சொல் பாவனை


சிங்கம்: 24 ஜூலை - 23 ஓகஸ்ட்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்: சூரியன்
அதிஷ்ட தினம்: ஞாயிறு
பலம்: இரக்கம், தலைமைத்துவத்தன்மை, இயல்பான உற்சாகம்
பலவீனம்: பொறாமை, விட்டுக் கொடாத தன்மை, அடக்கியாளும் தன்மை.


கன்னி: 24 ஓகஸ்ட் - 23 செப்ரெம்பர்

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: காரியத்தை முழுமையாகச் செய்து முடித்தல், புரிந்துணர்வு, சூழலுக்கேற்ப அனுசரித்துப் போதல்
பலவீனம்: எல்லாவற்ரையும் மிக நுட்பமாக அவதானித்து பிழை காணுதல், அமைதியற்றிருத்தல், ஒரு காரியத்திற்கு இன்னொருவரில் தங்கியிருத்தல்.

துலாம்: 24 செப்ரெம்பர் - 22 ஒக்ரோபர்

(23 ஒக்ரோபர் வரை என சில குறிப்பிடுகின்றன)
மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வெள்ளி
ஆளும் கிரகம்: வெள்ளி
பலம்: பொறுமை, சமநிலை பேணுதல், காதலும் மகிழ்ச்சியும்
பலவீனம்:கவனமின்மை, அக்கறை இன்மை, உணர்வு வசப்படுதல்.

விருச்சிகம்: 23 ஒக்ரோபர் - 21 நவம்பர்

 (22 ஒக்ரோபரில் இருந்து என சில குறிப்புகள் குறிக்கின்றன)
மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: செவ்வாய்
ஆளும் கிரகம்: புளூட்டோ
பலம்: நம்பத்தகுந்தவர்கள், விசுவாசம் உள்ளவர்கள், அன்பும் பொறுமையும் கொண்டவர்கள்.
பலவீனம்: பிடிவாதம், அன்பில் பொறாமை, உணர்வு வசப்படல்.


தணுசு: 23 நவம்பர் - 21 டிசம்பர்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்;வியாழன்
அதிஷ்ட தினம்: வியாழன்
பலம்: அறிவு பூர்வமான சிந்தனை, உறவை மேம்படுத்தும் ஆற்றல். நேர்மை
பலவீனம்: கூர்மையான நாக்கு, மாறும் தன்மை, கவனமற்றிருத்தல்

மகரம்: 22 டிசம்பர் - 20 ஜனவரி

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் சனி
ஆளும் கிரகம்:சனி
பலம்: கடின உழைப்பு, பொறுப்புணர்வு, மனப்பலம், சுதந்திர மனப்பாண்மை
பலவீனம்: கோபம், தலைமைத்துவத்தை ஏற்க மறுத்தல், அடங்க மறுத்தல்.

கும்பம்: 21 ஜனவரி - 19 பெப்ரவரி

மூலக்கூறு: காற்று
ஆளும் கிரகம்: யுரேனஸ்
அதிஷ்டதினம்: சனி
பலம்: நட்புணர்வு, புத்திசாலித்தனம்,இரக்கமும் ஆதரவுமாயிருத்தல், நடைமுறையோடு ஒத்துப் போதல்
பலவீனம்: பொறுப்பற்றிருத்தல், முதல் தடவையில் எல்லாவற்றையும் எடை போட்டு விடுதல், தன் அபிப்பிராயத்தில் பிடிவாதமாயிருத்தல்.

மீனம்: 20 ஃபெப்ரவரி - 20 மார்ச்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வியாழன்
ஆளும் கிரகம்: வியாழன்
பலம்: ஆடம்பர மோகமின்மை, அமைதியும் கோபம் வராத நிலையும்,சிறந்த ஞாபக சக்தியும் புத்திக் கூர்மையும்.
பலவீனம்: உணர்வு நிலை ஊசலாடிக்கொண்டிருத்தல்,





4 comments:

  1. நம்பிக்கையே ஜோதிடத்தை வாழவைக்கிறது.

    ReplyDelete
  2. ஆமாம்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

    ReplyDelete
  3. சோதிடம் பற்றிய பல புதிய தகவல்கள். ஆஸ்திரேலிய சோதிட விளக்கம் எனக்குப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.

    அரசு முத்திரைகளில் சோதிடத்துக்கும் இடமுண்டு என்று இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  4. அப்படியா கீதா?

    பலம், பலவீனம் என்று சொன்ன இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கவும்
    கண்டிருப்பீர்களே!

    உண்மையில் அது இரண்டையும் நான் எடுத்திருக்க வேண்டும்.

    இயல்புகள் என்று சொன்ன பல விடயங்கள் அதில் இருந்தன. என் நண்பர்களுக்கும் எனக்குமாக அது சுமார் 85% பொருந்திப் போனது. அவற்றையெல்லாம் பதிந்தால் பதிவு நீளமாகிப் போய் விடும் என்று விட்டுத்
    தவிர்த்து விட்டேன். அவற்றையும் போட்டிருக்கும் போது தான் அவை முழுமை பெற்றிருக்கும்.

    இந்தப் பதிவு குறைபாடுடையது. அது சோதிடத்தினுடய குறைபாடல்ல.

    இதனைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் தந்தீர்கள் கீதா. மிக்க நன்றி.

    எல்லாவற்றையும் மொழி பெயர்த்து வேறு வைத்திருந்தேன். சீன சோதிடம் பற்றிச் சொல்லவும் ஆசை உண்டு. அப்போது முடிந்தால் இதனையும் ஒரு முழுமையான பதிவாக தருகிறேன்.

    ஆர்வமாகப் பார்க்க வரும் கீதாவுக்காக! தாங்ஸ்மா.

    ReplyDelete