Tuesday, January 7, 2014

தையல் குருவியும் தூக்கணாங் குருவியும் Tailor bird & Weaver bird


இயற்கை நெய்திருக்கிற உயிரின அதிசயங்களில் ஒன்று தையல் குருவி.மென்மையான பச்சை இலையினை தைத்து கூடாக்கி அதற்குள் மூன்று முட்டை இட்டு, குஞ்சு பொரித்து,அவை வளர்ந்து ஆளாகும் வரை தானும் நுனியில் குந்தி இருந்து இரைகொடுத்து வளர்க்கும் வரை இரண்டு இலைகள் மாத்திரம் அத்தனை பாரத்தையும் தாங்கி நிற்கும் என்றால் அவற்றின் பாரம் எத்தனை லேசானதாக இருக்கும்?

இலையை கிழிந்து விடாமல் தைக்கும் தொழில்நுட்பத்தை யார் அவர்க்குக் கற்றுக் கொடுத்திருப்பார்?

நிச்சயமாய் பூக்களுக்குள் தேனை வைத்து, அதனை பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மாத்திரம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தவர் மாத்திரமாகத் தான் இருக்க முடியும் இல்லையா?



அது போலத்தான் தூக்கணாங்குருவியின் கூடுகட்டும் விந்தையும் ஓர் அதிசயம். மூன்று அறைகள் வைத்து ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து அதைக் கட்டி முடித்து உள்ளே வெளிச்சத்துக்காக மின்மினியினைப் பிடித்து வந்து உள்ளே ஒட்டி வைக்க யார் சொல்லிக் கொடுத்திருப்பார்?

அதே பூக்களுக்குள் தேனை வைத்து, அதனை பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மாத்திரம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தவர் மாத்திரமாகத் தான் இருக்க முடியும் இல்லையா?

4 comments:

  1. பூக்களுக்குள் தேனை வைத்து, அதனை பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மாத்திரம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தவர் மாத்திரமாகத் தான் இருக்க முடியும் இல்லையா?

    தேனாய் சுவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    காணொளி அற்புதம் ..!

    ReplyDelete
  2. செந்தாமரையின் தோழிக்கும் திண்டுக்கல் தனபாலருக்கும் என் அன்பும் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும். :)

    ReplyDelete
  3. அருமையான காணொளிகள்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. :) வணக்கம் குமார்.
    நலமா இருக்கிறீர்களா?

    மிக்க மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்களும் வர இருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களும்.

    புத்தாண்டு புதுப்பொலிவு பெறுவதாக!

    ReplyDelete