பொங்கலன்றான திறப்பு விழா – 14.1.2014
ஈழத்தமிழர் கழகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட தமிழர் கழகமாகும். அது பல சமூக நல திட்டங்களில் தன்னை இணைத்து பல்வேறு விதமான சமூக சேவைகளை பல ஆண்டுகளாக ஆற்றி வருகிறது.
அவர்களுக்காக அவுஸ்திரேலிய மாநில அரசு தமிழ் சமூகத்தினரின் தன்னார்வ சமூக செயற்பாடுகளுக்காக வீடொன்றினைக் கையளித்துள்ளது.
இங்கு தமிழ் சமூகத்தவர் தம் இலாப நோக்கற்ற சமூக நல சேவைகளுக்காக இந்த அழகிய கூடாரத்தைப் பாவிக்க காலம் கைகூடி இருக்கிறது.
ஈழத்தமிழர் கழகத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரமும் வெகுமானமும் அவர்களின் உழைப்புக்கு அரசு கொடுத்த சன்மானமாகும். அதன் பொருட்டு – குறிப்பாக அதன் நிர்வாக பீடத்திற்கு என் தலை தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
உத்தியோக பூர்வமான திறப்பு விழா தமிழுக்கு தைத்திங்கள் முதல் நாளன்று 14.1.14 அன்றுபொங்கல் தினத்தோடு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழுக்கும் தமிழருக்கும் அரசாங்கத்தினால் கிடைத்த இந்த உயர்வான அங்கீகரத்துக்கு உழைத்த எல்லோருக்கும் மீண்டும் என் நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளை இவ்வாறு ஒரு இடம் தமிழருக்குக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு நமக்கு அறியத்தந்து பொங்கலன்றான திறப்பு விழாவுக்கும் நம்மை அழைத்தமைக்கும் கூடவே எவ்வித தயக்கமும் இன்றி நமக்கும் அங்கு நம் மாதாந்த இலக்கிய சந்திப்பை நடாத்த கருணைகூர்ந்து இடம் ஒதுக்கித் தந்ததற்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் வாத்சல்யத்தையும் தெரிவிப்பதில் பெருமிதமும் கொள்கிறேன்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!
மிகவும் மகிழ்ச்சி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
பொங்கல் திருநாளில் திறப்புவிழா கண்ட நிறுவனத்திற்கு தித்த்க்கும் வாழ்த்துகள்..!
ReplyDeleteதமிழனுக்கு அங்கீகாரமாய் ஒரு வீடு...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
உங்கள் சந்தோஷங்களையும் வாழ்த்துக்களையும் மனமுவந்து என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி அன்பு உள்ளங்களே!
ReplyDeleteஅகம் மலர்கிறது! மகிழ்வால்!!