மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் இலை உதிர் காலத்துப் பருவத்தில் ஒரு மரத்தின் தோற்றம்.
இலை உதிர் காலம் ( மார்ச், ஏப்பிரல், மே ) - ( படப்பிடிப்பு 2023.05.11)
மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் குளிர்காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரத்தின் தோற்றம்
குளிர் காலம் ( ஜூன், ஜூலை, ஓகஸ்ட் ) - ( படப்பிடிப்பு 2023.7.10 )
மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் வசந்த காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரம்
வசந்தகாலம் ( செப்ரெம்பர், ஒக்ரோபர், நவெம்பர்) ( படப்பிடிப்பு 2023. 10.04 )
‘மாற்றம் ஒன்றே மாறாதது’
உதிர்வதும் பின்பு துளிர்ப்பதும் ஜொலிப்பதும் பின்பு சோர்ந்து விழுவதும் இயற்கையின் நியதி!
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
இடம்: Targo Road, Toongabbie, NSW 2146.
கோடை காலத்துக்குரிய காட்சி அந்தப் பருவத்தை இந்த மரமும் அண்மிக்கும் போது பதிவேற்றப்படும்.
என்ன அழகு என்ன படப்பிடிப்பு இயற்கையின் மாற்றத்தை மரங்கள் எப்படி உள்வாங்கி எமக்கு தரும் அழகை எமது நண்பி அந்த அழகை நாம் ரசிக்க தந்தாளே.
ReplyDeleteCross stitch தைக்கலாம் இந்த காட்சியை.
நன்றி யசோ
மிக்க நன்றி சுதா. மனமுவந்து இங்கு வந்து உங்கள் கருத்துக்களை என்னோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
Deleteஆமாம், உங்கள் கைகளால் தைக்கப்படும் தையல் வேலைகளின் கலைநயம் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். தையுங்களேன்! எங்கள் நண்பர்களோடும் அதனைப் பகிர்ந்து கொள்ளலாம். நானும் காண ஆவலாக இருக்கிறேன். :)
எவ்வளவு அழகான இயற்கை. பதிவு செய்து காணக்கொடுத்தமைக்கு நன்றி யசோ. ஒரே மரத்தின் வெவ்வேறு முகங்கள் அழகு. கோடையின் முகத்தையும் காண ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteமிக்க நன்றி கீதா. கோடை காலம் வரட்டும் பதிவு செய்து விட்டு அறியத் தருகிறேன். இங்கு வந்து உங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. முன்னரைப் போல உங்களை இப்போது அதிகம் உங்கள் வலைப்பதிவில் காணமுடிவதில்லை.
Deleteநம்மோடு இணைந்திருந்த பலரும் அதிகம் இப்போது வலைப் பதிவின் பக்கம் தலைகாட்டுவதில்லை. உங்களையும் உங்கள் பதிவுகளையும் மிஸ் பண்ணுகிறேன் கீதா. நீங்கள் அடிக்கடி வரவேண்டும். நன்றி கீதா.
பேராதனைப் பல்கலைச் சூழலில், இலை மறைய வெவ்வேறு வண்ணப்பூக்கள் நிறைந்த உயர்ந்த மரங்களைப் பார்த்து (எழுபதுகளில்) பரவசமான அனுபவங்களின் நினைவுகள் கிளர்கின்றன!
ReplyDeleteஇங்கு வந்து உங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. உண்மை தான். இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகரம் மனக்கண் முன்னால் வந்து போகிறது. நாம் வயதாலும் புவியியல் தூரத்தாலும் வெகு தூரம் வந்துவிட்டோம். கால மாற்றங்கள்.... அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
Deleteநீங்கள் ஈழத்து எழுத்தாளர் யேசுராசா அவர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களோடு உங்கள் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டால் நான் இன்னும் மகிழ்வேன். தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி.
Amazing ! Beautiful. No words to express as the pictures say it all . How much the tree would have witnessed ! Hats off to the creator - an intelligent, thinking mind behind it 👍🏼
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட டீ! முதன் முதலாக வந்து உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இந்த மரம் நான் அடிக்கடி செல்லும் பாதையில் நிற்கிறது. இந்தப் பாதையால் எப்போது போக நேர்ந்தாலும் இம்மரத்தைப் பார்க்காமல் நான் செல்வதில்லை.
Deleteஅது காலத்துக்குக் காலம் காட்டும் வர்ண ஜாலங்களும் அதன் தனித்துவமான, கம்பீரத் தோற்றமும் தனி அழகு! தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் மாண்புடனும் வாழும் பெண்களைப் போல...
உங்கள் வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து வாருங்கள். :)
God’s awesome creation 😍😍
ReplyDeleteமிக்க நன்றி! கடவுளின் படைப்பில் எது தான் அழகில்லை? எல்லாமே அழகு தானே! எறும்புகளின் ஊர்வலத்தில் இருந்து பூக்களின் அணிவகுப்பு வரை எல்லாவற்றிலுமே நாம் மகிழ்ச்சியடையவும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் எத்தனை எத்தனை விடயங்கள் இருக்கின்றன! இல்லையா?
Deleteமழை என்ற ஒன்று கூட எத்தனை அதிசயம் இல்லையா? பஞ்சு போல மேகத்துக்குள் எவ்வளவு தண்ணீர்! அதுவும் பிறகு துளித்துளியாய் இறங்குகிறது பாருங்கள்...அப்படியே மேகம் தண்னீரோடு தொப்பென்று விழுந்தால் பூமியும் அதன் மீதிருக்கும் கட்டிடங்களும் நாமும் என்னவாகியிருப்போம்....:))
உங்கள் வருகையும் பின்னூட்டமும் எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நீங்கள் யாரென்று நான் அறியலாமா?
காத்திருந்து கவனமாக எடுக்கப்பட்ட படங்கள். அருமை.
ReplyDeleteஓ... விஜி....! நீங்களே ஒரு சிறந்த இயற்கை ஆர்வலர். சிறந்த படப்பிடிப்பாளர். மரங்களின் பிரியனன். யாழ்ப்பாணத்தில் கருவா மரம் நட்டு வளர்த்து பயன் எடுத்துக் காட்டிச் சாதனை புரிந்தவர்.
Deleteஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :) தொடர்ந்து வாருங்கள்.
Amazing ! Beautifully written. I really don't have any words on the thought process to create this observation. How much thatvtree must have see! Appreciate the intelligent, thinking mind behind the pictures and writing .👍🏼
ReplyDeleteThank you Dee.
Deleteஇயற்கையில் தான் எத்தனை விதமான அழகு கொட்டிக்கிடக்கிறது.அதை அழகாய் ரசித்து அழகிய படங்களய் கொடுத்திருப்பது மிக்க அழகாய இருக்கிறது..வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றி யாமினி. எதிர்பாராத உங்கள் வரவும் பின்னூட்டமும் எனக்கு மிக்க ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteWherever you go you spread positivity!
ReplyDeleteThank you for sharing Nature's wonder!
Keep going and best wishes Yaso!
Lots of love ❤️🙏👏
மிக்க மகிழ்ச்சி! நீங்கள் யாரென்பதை என்னால் அறிய முடியவில்லை எனினும் உங்கள் மனமுவந்த கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ’சித்தம் அழகியர் பாடாரோ நம்சிவனை..’ என்றார் ஒரு நாயனார். சித்தம் அழகியரான உங்கள் அன்புக்கும் நன்றி.
Delete