Thursday, September 3, 2026

AI and Me


எனக்கும் இப்போது பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களும் இதுவரை காலமும் இருந்ததில்லை. 

அண்மையில் எனக்கு வாய்த்திருந்த ஓர் ஓய்வு நேரத்தின் போது புரட்டிப் பார்த்த இன்ஸ்ரகிறாம் பக்கத்தில் இரண்டு மூன்று கிளிக்குகளில் எப்படி ஒரு விடயத்தை இயங்கு நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை சொல்லியிருந்தது.

சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று எண்ணி அண்மையில் நான் வண்ணம் தீட்டியிருந்த இரண்டு படங்களைக் கொடுத்து அதனை இயங்கு நிலைக்கு எடுத்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தேன். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அதனை அது தந்திருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

எத்தனை த்த்ரூபம்! எத்தனை உண்மைத்தன்மை!!

அதனை ஒரு பதிவாக இங்கு பகிரத் தோன்றியது. சேமித்து வைக்கவும் தான். படமும் அதன் இயங்கு நிலையும் கீழே வருகிறது.






இதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் உங்களிடம் ஒரு யூடியூப் கணக்கு இருந்தால் அங்கு உள்நுழைந்து சக அடையாளத்தை அழுத்திய பின்னர் வலது கைப்பக்க மேல் மூலையில் இருக்கும் நட்சத்திரம் போன்ற குறியீட்டை ( ஜெமினாய்) அழுத்தி அதில் விரும்பிய படத்தைக் கொடுத்து என்ன செய்யவேண்டு என்ற உத்தரவைக் கொடுத்தால் போதும் சில வினாடிகளில் அது தத்துரூபமாக நீங்கள் கேட்டதைத் தந்து விடுகிறது! அப்படிக் கிடைத்தது தான் மேலே இருக்கிற கொடுத்த படமும் அதன் இயங்கு நிலையும்!

இந்த உலகம் இனி எங்கு போக இருக்கிறது!!

 

No comments:

Post a Comment